| பகரும் வைதிக விதிச்சமா வர்த்தனப் பான்மை திகழ முற்றிய செம்மலார் திருமுன்பு சேர்ந்தார். | |
| (இ-ள்.) நகர்...பின் - முன் கூறியவாறு நகர்வலம் செய்வித்துத் திருமாளிகையிற் புகுந்த பின்பு; நவமணி....பொலிய - நவமணிகளால் அணியப்பட்ட குற்றமற்ற சித்திரங்களால் விதானமமைக்கப்பட்ட மண்டபத்திலே விளங்கும்படி; பகரும்...சேர்ந்தார் - நூல்களால் எடுத்துச் சொல்லப்படும் வைதிக விதிகளின்படி சமாவர்த்தனமாகிய தன்மையினை விளங்கும்படி முற்றிய பிள்ளையாரது திருமுன்பு வந்து சேர்ந்தார்கள். |
| (வி-ரை.) புகுந்தபின் - திருமுன்பு சேர்ந்தார் என்க. புகுந்த - திருமாளிகையினுள்ளே புகுந்த. |
| நவமணி அணிந்த - சித்திர விதானம் - நவமணி அணிந்த - நவமணிகளாலும் அணி செய்யப்பட்ட; அலங்கரிக்கப்பட்ட. விதானத்தின் அமைந்த சித்திரங்கள் நவமணிகளால் அணி செய்யப்பட்டன என்க. விதானம் - மேற்கட்டி முதலியவை; இவற்றிற் சித்திரங்கள் - ஒவியங்கள் - தீட்டுதலும், அவற்றை மணிகளால் அணிதலும் அந்நாள் வழக்கு. பொலிய (வீற்றிருந்த) செம்மலார் திருமுன்பு என்க. |
| வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மை திகழ முற்றிய - சமாவர்த்தனமாவது வேதாத்தியயனம் நிறைவு செய்து முடித்துப் பிரமசரிய விரதநிலை முடித்தபின் கிருகத்த நிலை புகுமுன் செய்யும் அதி வைதிகச் சடங்கு; ஒவ்வோர் ஆச்சிரமத்திலும் தங்குதல் ஒருநிலை எனப்படும்; ஆயுள் முழுதும் நிலைமாறாது ஒரேநிலையில் தங்குதல் நைட்டிகம் எனப்பெறும்; நிலைத்து நிட்டாபரராய் இருக்கும் தன்மை; நிட்டையுடன் பொருந்தியது நைட்டிகம். ஏனையோர் ஒரு ஆச்சிரமத்தினின்றும் அடுத்ததிற்புகும்போது முன்னதற்கு (பூர்த்தி செய்யும்) நிறைவாக்கும் கிரியைகளைச் செய்து பின்னதனைத் தொடங்குதலை வேண்டும் என்பது வைதிக விதி. சமாவர்த்தனம் - மணமாவதற்குக் காரணமாகின்ற உரிமை. |
| சமாவர்த்தனப் பான்மை - முற்றிய - இங்குப் பிள்ளையார்பால் மூன்றாண்டளவில் முற்றிய சிவஞான விளக்கநிலை பெறுதலின் ஆச்சிரமம் பற்றிய விதிகளும் சடங்குகளும் வெறும் உபசாரவளவில் மட்டும் அமைவன என்பார் பான்மை - முற்றிய என்றார். பிள்ளையாரது உபநயன நிகழ்ச்சியின் வரலாறுகளை ஈண்டு நினைவுகூர்க; முற்றிய - தாமாகவே இயல்பால் முற்றியிருந்த. |
| சேர்ந்தார் - தொண்டர்கள் முதலியோர் (3081) . |
| 1184 |
3083 | செம்பொ னின்பரி கலத்தினிற் செந்நெல்வெண் பரப்பின் வம்ப ணிந்தநீண் மாலைசூழ்மருங்குற வமைத்த அம்பொன் வாசநீர்ப் பொற்குட மரசிலை தருப்பை பம்பு நீள்சுடர் மணிவிளக் கொளிர்தரும் பரப்பில், | |
| 1185 |
3084 | நாத மங்கல முழக்கொடு நற்றவ முனிவர் வேத கீதமும் விம்மிட விரைகமழ் வாசப் போது சாந்தணி பூந்துகில் புனைந்தபுண் ணியம்போல் மீது பூஞ்சய னத்திருந் தவர்முன்பு மேவி, | |
| 1186 |