3085 | ஆர்வ மிக்கெழு மன்பினான் மலரய னனைய சீர்ம றைத்தொழிற் சடங்குசெய் திருந்துநூன் முனிவர் பார்வ ழிப்பட வருமிரு வினைகளின் பந்தச் சார்பொ ழிப்பவர் திருக்கையிற் காப்புநாண் சாத்த, | |
| 1187 |
3086 | கண்ட மாந்தர்கள் கடிமணங் காணவந் தணைவார் கொண்ட வல்வினை யாப்பவிழ் கொள்கைய வான தொண்டர் சிந்தையும் வதனமு மலர்ந்தன; சுருதி மண்டு மாமறைக் குலமெழுந் தார்த்தன மகிழ்ந்தே. | |
| 1188 |
| 3083. (இ-ள்.) செம்பொனின்....பரப்பின் - செம்பொற் றட்டிலே செந்தநெல்லாலாகிய வெண்பரப்பின்மேல்; வம்பணிந்த...தருப்பை - வாசனை பொருந்திய நீண்ட மாலைகள் இருமருங்கும் சூழ அமைக்கப்பட்ட அழகிய வாசனையுடைய நீர் நிறைந்த பொற்குடமும் அரசிலையும் தருப்பையும்; பம்பு...பரப்பில் - பரவிய நீண்ட ஒளியுடைய அழகிய விளக்கும் விளங்கிய பரப்பினிலே; |
| 1185 |
| 3084. (இ-ள்.) நாத..விம்மிட - இயங்களின் நாதத்தாலாகிய மங்கல முழக்குடனே நல்ல தவமுனிவர்களது வேதகீத ஒலியும் நிறைய; விரைகமழ்...மேவி - மணங் கமழும் வாசமுடைய மலர்களும், சாந்தும், அணிகளும், அழகிய துகிலும் புனைந்த புண்ணியத்தினைப்போல அழகிய மலரமளியின்மேல் எழுந்தருளியிருந்த பிள்ளையாரது திருமுன்பு சேர்ந்து; |
| 1186 |
| 3085. (இ-ள்.) ஆர்வம்...அன்பினால் - ஆசை மிக்கு எழுகின்ற அன்பினாலே; மலரயன்...முனிவர் - தாமரையில் இருக்கும் பிரமதேவனைப் போன்ற சிறந்த மறைவிதித் தொழில் புரியும் சடங்குகளைக் செய்கின்ற திருத்தும் நூல்வல்ல முனிவர்களாகிய வேதியர்; பார்வழிப்பட....சாத்த - உலகில் பிறவி எடுக்க வரும் இருவினைகளின் பந்தச் சார்பினை நீக்குபவராகிய பிள்ளையாரது திருக்கையிலே காப்புநாணினை அணிய; |
| 1187 |
| 3086. (இ-ள்.) கண்ட மாந்தர்கள் - (காப்புநாணைச் சாத்தியதனைக்) கண்ட மக்களும்; கடிமணம்...அணைவார் - கடிமணத்தினைக் காணும்பொருட்டு வந்து அணைபவர்களும்; கொண்ட...தொண்டர் - பற்றிய வலிய வினைக்கட்டினை அவிழ்த்து நீக்கும் கொள்கையினை உடையவர்களாகயி தொண்டர்களும் ஆகிய இவர்களது சிந்தையும் முகங்களும் மலர்ச்சியடைந்தன; சுருதி...ஆர்த்தன - சுருதிகள் நிறைந்த பெருமறைக் குலங்கள் மேலோங்கி முழங்கின; மகிழ்ந்தே - மகிழ்ச்சி பெற்றே. |
| 1188 |
| இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3083. (வி-ரை.) இப்பாட்டாற் காப்புநாண் சாத்துதலும், சாத்துதற்குரிய சடங்கனுக்கு வேண்டிய பொருள்களும், அவற்றின் அமைதியும் கூறுகின்றார். |
| பொற் பரிகலத்தில் நெல் பரப்புதலும், அதன்மேல் மாலை சூழ்ந்த அழகிய நிறைகுடத்தினை அரசினை தருப்பையுடன் உரியபடி அமைத்து வைத்தலும் மணிவிளக்குக்கள் பரவ விளங்கவைத்தலும், வேதமோதுதலும் முதலிய இவை இதற்குரிய செயல்களாம். |
| பரிகலம் -பாசனம்; தட்டு. செந்நெல் வெண் பரப்பு - செந்நெல்லே இங்கு ஏற்கும் மரபும் தகுதியும் பற்றி முன் அரிவாட்டாய நாயனார் புராணத்தும், பிறாண்டும் உரைத்தவை நினைவு கூர்தற்பாலன. செந்நெல் வெண்பரப்புச் செய்து அதன்மேல் நிறைகுடம் தாபித்தல் மரபு; கலசத்துக்கு நெற்பரப்பு ஆதனம் என்ப. |