| இங்கு இத்தன்மையாற் கூறினார். பிள்ளையாரது திருவவதார உள்ளுறையும், மேல் வரும் பாட்டின் குறிப்பும் கருதுக. காப்புநாண் சாத்துதல் - நாணினாற் கட்டும் தொழிலாதலின் அஃது ஈண்டு அவ்வாறன்றி உண்மையிற் கட்டு அவிழ்க்கும் தன்மையை தாயிற்று என்ற குறிப்பும் காண்க. |
| 1187 |
| 3086. (வி-ரை.) மாந்தர்களும், அணைவாரும், தொண்டர்களும் ஆகிய இவர்களுடைய என்று உம்மைகளும் ஆக்கச்சொல்லும் ஆறனுருபும் விரிக்க. |
| கண்ட மாந்தர்கள் - காப்புநாண் சாத்தும் சடங்கினைக் கண்ட மக்கள். |
| மணங் காண வந்தணைவார் - காப்புநாண் சாத்துதலைக் கண்டவர்களின் வேறாகித் திருமணத்தினைக் காண எண்ணி வருவோர்கள். கடிமணம் - கடி - செல்வம்; திரு. காண்போரது பிறவிப் பந்தச் சார்பினை கடியும் மணம் என்றதும் குறிப்பு. |
| கொண்ட - பற்றிக்கொண்டு பிறவிக்கேதுவாகிய. |
| யாப்பு - பாசப் பிணிப்பு. அவிழ் கொள்கைய - பாசம் வலிகெட்டுப் போதலன்றிக் கெடுதலில்லை யாதலின் யாப்பு அறும் என்னாது, அவிழ் கொள்கை என்றார்; அவிழ்தல் - இறுகப் பிணிக்கும் தன்மை நீங்குதல்; கொள்கைய - அகரவீற்றுப் பலவறிசொல்; ஆன - ஆக்கச் சொல் மணங் காணப்பெற்ற காரணத்தாலாகிய விளைவு குறித்தது; கொள்கை - நிலைமை; கொள்ளுதல் - மேற்கொள்ளுதல் - பெறுதல். |
| சிந்தையும் வதனமும் மலர்ந்தன - சிந்தை மலர்தல் முகமலர்ச்சிக்குக் காரணமாம் என்பது. வதனம் - முகம். |
| சுருதி - மறைக் குலம் - ஆர்த்தன - சுருதிகள் நிறைந்த மறைக்குலம் என்றும், சுருதியும் அவற்றின் வழி வருவனவாகிய சூத்திரம் முதலியனவும் என்றும் உரைக்க நின்றது. ஆர்த்தல் - முழங்க எடுத்து ஓதப்படுதல் குறித்தது. குலம் - வழி வரும் தொகுதி என்றதாம். |
| மகிழ்ந்தே - மலர்ந்தன என்றும், மகிழ்ந்தே ஆர்த்தன என்றும் ஈரிடத்தும் கூட்டியுரைக்க இறுதியில்வைத் தோதினார். |
| |
| வல்வினைப் பரப்பவிழ் - என்பதும் பாடம். |
| 1188 |
3087 | நிரந்த கங்குலி னிதிமழை விதிமுறை யெவர்க்கும் புரந்த ஞானசம் பந்தர்தாம் புன்னெறிச் சமய அரந்தை வல்லிரு ளகலவந் தவதரித் தாற்போற் பரந்த பேரிருள் துரந்துவந் தெழுந்தனன் பகலோன். | |
| 1189 |
| (இ-ள்.) நிரந்த...புரந்த - பரவிய இரவிலே மறைவிதி முறைப்படி நிதி மழையாக எல்லாருக்கும் பொழிந்து அருளிய; ஞானசம்பந்தர் தாம்...போல் - திருஞானசம்பந்த நாயனார் முன்னர்ப் புன்னெறிகளாகிய புறச்சமயங்களின் துன்பந் தரும் வலிய இருள் நீங்க வந்து அவதரித்ததுபோல; பரந்த....பகலோன் - பரவிய பெரிய இருளை நீக்கி வந்து சூரியன் எழுந்தனன். |
| (வி-ரை.) இப்பாட்டு முதல் ஏழு திருப்பாட்டுக்கள் சூரியனும், திசைகளும், ஐம்பூதங்களும், பிள்ளையாரது திருமணச் சிறப்பினுட் கலந்து மேற்கொண்ட நிலைகளைமுறையே எடுத்துரைக்கின்றன; இவற்றை அவ்வகையே ஒரு தொடர்புபடுத்தி உரைக்கலாமாயினும், தனித்தனி அவ்வவற்றின் செயல்கள்பற்றி வெவ்வேறு வினைகள் தந்து ஆசிரியர் முடித்துக் கூறியருளியமையால் அவ்வாறே தனித்தனி முடிபாக உரைக்கப்பட்டன; ஆயினும் தொடர்ந்த கருத்துப்பற்றி உய்த்துணர்ந்துகொள்க; திசை |