[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1481

கள் (3088) என்றதனாலும் செஞ்சுடரினால் விளக்கம்பெறுதலானும் உயிர்களும் மதியமும் அடக்கிப், பகலோன், மதியம், உயிர், வையம் (நிலம்), புணரி (நீர்), வன்னி (நெருப்பு), மருத்து (காற்று), விசும்பு (ஆகாயம்) என எண்வகையாய்ப் புணர்ந்து இறைவன் நின்ற திருமேனி நிலைகளும் கொண்ட சிறப்புக்காட்சி உணர்த்தப்பட்டதென்ற குறிப்பும் காண்க. "நிலனீ் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்" (திருவா) என்ற மணிவாசகம் ஈண்டு நினைவு கூர்தற்பாலது; ஈண்டு ஒடுக்க முறையில்வைத் தோதியது பிள்ளையார் உடன் நின்றவர்களுடனே இறைவரது திருவருள் நிறைவினுள்ளே புக்கொன்றிடனாகும் குறிப்புணர்த்தியதும் காண்க.
நிரந்த கங்குலின் - நிரந்த - தொடர்ந்து வந்தஇரவில்; காப்புநா ணணிந்த பகலைத் தொடர்ந்த இரவு; அன்றிரவு.
விதிமுறை நிதிமழை - எவர்க்கும் புரந்த - சுருதிகளின் விதிப்படி தானங்கள் மழைபோலச் சொரிந்து இயற்றிய; இவை திருமணத்தின் பொருட்டுப் புறப்படுமுன் இயற்றவேண்டிய விதிமுறைகளாம் என்ப. இதற்கு இவ்வாறன்றிப் பரந்த சமண இருளினிடத்து வேத விதிகளை மழைபோலப் பெய்தீந்தருளிய என்ற பொருள்பட உரைத்தனர் முன் உரைகாரர்கள். புன்னெறிச் சமய அரந்தை வல்லிருள் அகல என மேலும் வருதலால் அதன் பொருத்தம் ஆராயத்தக்கது.
அவதரித்தாற்போல் - பகலோன் எழுந்தனன் - என்று கூட்டுக; வினைபற்றி உவமம். முன்னாளில் (பதினாறாண்டுகளின் முன்) பிள்ளையார் அவதரித்ததுபோல் அன்று பகலோன் எழுந்தனன். பிள்ளையார் புன்னெறிச் சமய வல்லிருள் அகல வந்து அவதரித்தருளினர்; அன்று பகலோன் பரந்த பேரிருள் துரந்துவந் தெழுந்தனன். "சேம வுதயப் பரிதியிற் றிகழ்பிரானை" (1939) என இக்கருத்தினை முன்னர் ஒரு வகையால் உவமானமாகக் குறிப்பிட்ட பரிதி, ஈண்டு உவமேயமாக வைக்கப்பட்ட நிலைக் குறிப்பும் கருதுக. பரந்த பேரிருள் - உலகிற் பரவிய பெரிய புறவிருள்.

1189

3088
ஞ்சி றைச்சுரும் பறைபொழிற் சண்பையாண் டகையார்
தஞ்சி வத்திரு மணஞ்செயத் தவஞ்செய்நா ளென்று
மஞ்ச னத்தொழில் புரிந்தென மாசிருள் கழுவிச்
செஞ்சு டர்க்கதிர்ப் பேரணி யணிந்தன திசைகள்.

1190

3088. (இ-ள்.) அஞ்சிறைச் சுரும்பு....என்று - அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில்கள் சூழ்ந்த சீகாழியின் ஆண்டகையாராகிய பிள்ளையார்தம் சிவத் திருமணம் செய்தற்கிடமாகத் தவஞ் செய்யப்பெறும் நாள் இது என்று உட்கொண்டு; மஞ்சனத் தொழில் புரிந்தென - திருமஞ்சனத் தொழிலினைச் செய்தல் போல்; மாசு இருள்...திசைகள் - மாசு இருளைக் கழுவிப் போக்கிப் பகலோனது செஞ்சுடராகிய கதிர்களின் பேரணியினைத் திசைகள் அணிந்துகொண்டன.

(வி-ரை.) இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி கொண்டது.

சிவத் திருமணம் செயத் தவஞ்செய் நாள் என்று - சிவத் திருமணம் - சிவபெருமானாகிய நாயகனைக் கூடும் மணம். தவஞ்செய் நாள் - அந்நாளானது தனதெல்லையிற் பிள்ளையாரது சிவத்திருமணம் நிகழத் தவம் செய்து அப்பேறு பெற்றது.
மஞ்சனத் தொழில் - புறத்தூய்மை செய்யும்படி குளித்தல்; (இருள்) கழுவி என்றது காண்க; "கழுவா வுடலங் கழுவின வாக்கிய கற்பகமே" (ஆளு. பிள் - திருவந்தாதி).