1482திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

மாசு இருள் - இருளாகிய மாசு = (அழுக்கு); திசைகளுக்கு மாசாவது கங்குலின் இருளே என்பது.
திசைகள் - இதனுள் உயிர்களையும் மதி (சந்திரன்)யினையும் அடக்கிக் கூற நிற்பதால், உயிர்களுக்கு உண்மாசு (மலம்) என்றும், மதிக்குப் புறஇருள் என்றும் பெறவைத்து மாசு - இருள் என்று கூறிய குறிப்பும் காண்க.
செஞ்சுடர்க் கதிர்ப் பேரணி - செஞ்சுடர் - சூரியன்; கதிராகிய அணி. செஞ்சுடர் - உதய சூரியனது கதிர்கள் செம்பொன்னிறங் காட்டி தருதலின் பேர் அணி என்றார். அணிந்தன - அணியாகப் பூண்டுகொண்டன.

1190

3089
ரம்பு தம்வயி னெங்கணு முள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்டிசை யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக் கல்லியா ணத்தின்
வரம்பி றன்பயன் காட்டுவ தொத்தது வையம்.

1191

(இ-ள்.) பரம்பு...கொணர்ந்து - பெருகிய தம்மிடத்திலே எவ்வெவ் விடங்களிலும் உள்ள பல வளங்களையும் மிகுதிப்பட முன்னே கொண்டுவந்து; எண்டிசையவர் நெருங்குதலால் - எட்டுத் திக்குக்களில் உள்ள மாந்தர்களும் நெருங்கி வந்து கூடியவதனாலே; தரம்....திருக்கல்லியாணத்தின் - ஒப்பில்லாதவராகிய பிள்ளையாரது திருக்கல்லியாணத்திலே; வரம்பில்...வையம் - அளவில்லாத தனது பயனை நிலம் எடுத்துக் காட்டுவது போன்றது.

(வி-ரை.) இப்பாட்டினால் ஐம்பூதங்களினும், வையம் (நிலம்) மேற்கொண்ட சிறப்புக் கூறப்பட்டது. வையம் - நிலம்.

எண்திசையவர் தம்வயின் எங்கணும் உள்ள பல்வளங்கள் - எட்டுத் திசையில் உள்ளாரும் யாண்டு யாண்டு தத்தம் சிறப்பாகிய வளம் பொருள்களுள்ளனவோ அவ்வவற்றைத் தேர்ந்து கொணர்ந்தனர் என்பதாம்.
திசையவர் - கொணர்ந்து - நெருங்குதலால் - வையம் காட்டுவதொத்தது - என்றது எல்லாத் திசைகளின் வளங்களும் இங்கு வந்து சேர்ந்தவதனால் நிலம் பெற்ற பயனை எடுத்துக்காட்டுவது போலும் என்றதாம்; (Exhibition). பயன் - பயன்படு பொருள்கள் - வளங்கள்; நிலம் தான் இப்பொருள்களைப் பெற்ற பயனாவது (புவனபோகங்கள்) பிள்ளையாரது திருக்கல்லியாணத்தினிற் சிறப்பிக்கும் இதுவேயாம் என்ற குறிப்பும்படத் தன் பயன் காட்டுவது என்றார்.
வரம்பில் தன் பயன் - புவனபோகங்கள் எனப்படும் நிலமும் பயனுமாவன எண்ணிறந்த வகையாம் என்பது.
முன் கொணர்ந்து - முன் - பிள்ளையாரது மணவெழுச்சியின் முன்பு காணக் கொணர்ந்து என்று இடமும், முன்னாளிலே எனக் காலமும் குறித்தது.
தாம் கடந்தவர் - அளவிடலாகாத் தன்மையுடையவர்; சிவஞான நிறைவு அளவுட்படாதது என்பது.

1191

3090
நங்கள் வாழ்வென வருந்திரு ஞானசம் பந்தர்
மங்க லத்திரு மணவெழுச் சியின்முழக் கென்னத்
துங்க வெண்டிரைச் சுரிவளை யார்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேரொலி முழக்குட னெழுந்தது புணரி.

1193

(இ-ள்.) நங்கள்...முழக்கென்ன - அடியோங்களாய் வந்தணையும் நமது வாழ்வே உருவெடுத்து வந்தாற்போல வரும் திருஞான சம்பந்தரது மங்கலமாகிய திருமண