[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1485

செல்வன போல் - "புகைவிடும் வேள்விச் செந்தீ யில்லுடன் கொண்டு போவார்" (3100) என்று பின்னர்க் கூறும் நிலைக்கு முயல்வனபோல என்ற குறிப்பும் காண்க.
மாமணி - என்பதும் பாடம்.

1193

3092
ந்த மென்மலர்த் தாதணி நீறுமெய் தரித்துக்
கந்த மேவுவண் டொழுங்கெனுங் கண்டிகை பூண்டு
சிந்தை தூயவன் பர்களுடன்திருமணம் போத
மந்த சாரியின் மணங்கொணர்ந் தெழுந்தது மருத்து.
1194
(இ-ள்.) சந்தம்...தரித்து - அழகிய மெல்லிய பூந்தாதுக்களாகிய திருநீற்றை மெய்யிற் றாங்கிக்கொண்டு; கந்தம்....பூண்டு - கூட்டமாகப் பொருந்தும் வண்டுகளின் வரிசையாகிய உருத்திராக்க மணிக் கண்டிகைகளைப் பூண்டு; சிந்தை தூய அன்பர்களுடன் - மனந் தூயராகிய அன்பர்களுடனேகூடி; திருமணம்...மருந்து - திருமண எழுச்சியிற் கலந்து செல்ல மெல்லிய வேகத்திலே பூமணங்களை ஏந்திக்கொண்டு மருத்து எழுந்தது.
(வி-ரை.) இப்பாட்டினால் ஐம்பூதங்களுள் நான்காவது வாயு என்ற பூதம் மணமேற்கொண்ட சிறப்புக் கூறப்பட்டது.
சந்தமென்மலர்....தரித்து - சந்தம் - இங்குக் கூட்டம் என்ற பொருளில் வந்தது. சந்தம் - அழகு என்றலும் மணம் என்றலுமாம். மலர்த் தாது - பூந் துகள்; தாது அணி நீறு - பூந் துகளாகிய திருநீறு; உருவகம். மேல் வண்டொழுங்கெனும் கண்டிகை என்றதும் இவ்வாறே உருவகம். தரித்து - நீறு தரித்தல் என்பது மரபு; சிலேடை வகையால் தரித்தல் -தாங்குதல் என்ற பொருளிற் கொண்டு வாயு இங்குப் பூத் துகளைத் தாங்கி வந்தது என்க. மெய் - உண்மை - உடல் என்ற இருபொருளும் கொள்க. அடியார் நீறு தரித்தலுக்கு உண்மை என்றும், வாயு துகள் தாங்குதலுக்குத் தன் உடலில் என்றும் கொள்ளத் தக்கது.
நீறு தரித்தும் - கண்டிகை பூண்டும் - மணம் கொணர்ந்தும் மருத்து எழுந்தது - என்று கூட்டுக; தற்குறிப்பேற்றம். மண எழுச்சியில் அன்பர் கூட்டத்துடன் செல்வதற்கு அதற்குரிய திருவேடத்துடனன்றிச் செல்லலாகாதென்ற முறை கருதியது போலப் பூத் துகளாகிய திருநீறும் வண்டொழுங்காகிய கண்டிகையும் தரித்தும் பூண்டும் எழுந்தது என்பதாம்.அன்பர் கூட்டத்துட் செல்வோர் திருநீறும் கண்டிகையும் கொண்ட திருவேடம் பூண்டே செல்லுதல் வேண்டும் என்ற நியதியை எடுத்து வற்புறுத்திக் காட்டிய நயமும் கண்டுகொள்க. இறைவரது திருவிழாக்களிலும் திருக்கோயில் வழிபாடுகளிலும் திருநீறும் கண்டிகையும் கொண்ட வேடந்தானும் கொள்ளாது புகுந்து துன்புறுத்தும் இந்நாண் மாக்கள் இதனை உணர்ந்து நன்னெறி ஒழுகுவார்களாயின் நலமாகும்; "ஆதியின்மே, லுற்ற திருநீறுஞ் சிவாலயமு முள்ளத்துச், செற்ற புலையர்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர், வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத, மூடருடன் கூடி முயங்காதே - நீட, வழித்துப் பிறப்ப தறியா தரனைப், பழித்துத் திரி(ப)வரைப்பா ராதே" (நெஞ்சுவிடு தூது) என்றதும் பிறவும் காண்க.
ஈண்டு ஐம்பூதங்களும் மேற்கொண்ட சிறப்பினையும் இவ்வாறு மண எழுச்சியிற் சாரும் தகுதியும் பயனும்பற்றித் தற்குறிப்பேற்ற அணிநயம்பெறக் கூறியது மிக்கருத்து.
கந்தம்...பூண்டு - கந்தம் - கூட்டம்; கந்தம் மேவும் வண்டு - மணம் கண்டு வருகின்ற வண்டுகள் என்றலுமாம். "ஈட்டிய தேன்பூ மணங் கண்டு" (திருமந்);