| பூக்கள் அலர்கின்ற பருவத்தில் வரும் அவற்றின் மணத்தினால் அப்பருவமறிந்து வந்து ஊதி அலர்த்தித் தேன் உண்பது வண்டுகளினியல்பாம். |
| வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை - வண்டுகள் கோவைபோல ஒழுங்காகச் சாரும் நிலையும், செவ்விய கரிய வண்டுகள் பலவும் ஒழுங்குபட நிற்றல் கண்டிகைபோலத் தோற்றும் நிலையும் குறித்துது. |
| சிந்தை தூய அன்பர்களுடன் - மனத்தூய்மை யுடையார் அன்பர்களாதலின் கூட்டத்துடன் சார்வதற்கு புறத்தூய்மையேனும் கொண்டு போதுவோம் என்பது போல என்ற கருத்து. சிந்தை தூயவர்களாதலின் எனக் காரணக் குறிப்புப்படக் கூறினார். அன்பர் இயல்பு கூறிவாறுமாம். திருமணம் போத - திருமணம் காண எழுச்சியிற் கூடிச் செல்ல. |
| |
| மந்த சாரி - மெல்லிய வேகம் - கதி; கடுங் காற்றாய் வீசுதல் அவசகுனமாம். |
| மணம் கொணர்ந்து - பூமணங்களைக் கையுறைபோல ஏந்திக்கொண்டு என்ற குறிப்பும் காண்க; தமிழ் மணம் என்றலுமாம்.. "பொங்குதமிழ்ப் பொதியமலைப் பிறந்துபூஞ் சந்தனத்தின், கொங்கணைந்து குளிர்சார லிடையவளர்ந்த கொழுந்தென்றல்" (ஏயர் - புரா - 270). |
| 1194 |
3093 | எண்டி சைத்திறத் தியாவரும் புகலிவந் தெய்தி மண்டு மெய்த்திரு மணவெழுச் சியினணி வாய்ப்பக் கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க் கொண்டலக ளென்னும் வெண்டு கிற்கொடிநிரைத்தது போன்றது விசும்பு. | |
| 1195 |
| (இ-ள்.) எண்திசை....வாய்ப்ப - எட்டுத் திக்குக்களின் பகுதிகளில் வாழும் எல்லாத் திறத்தினரும் சீகாழியில் வந்து நெருங்கி எழுந்த அத்திருமண எழுச்சியின்கண் அழகு பொந்தும்படி; கொண்ட....விசும்பு - மேற்கொண்டு தூக்கியெடுத்த வெள்ளிய நிறைத்தையுடைய ஒளிபொருந்திய பெரு வெண்மேகளாகிய வெண்டுகிலினாலாகிய கொடிகளை வரிசைபெற அமைத்ததுபோன்று இருந்தது வானம். |
| (வி-ரை.) எண்திசைத் திறத்து யாவரும் - எண்திசையிலும் எத்திறத்திலும் யாவரும் என்க. மண்டுதல் - நெருங்குதல். |
| மண எழுச்சியின் அணி வாய்ப்ப - எழுச்சியிலே அதற்கேற்றவாறு அழகு பொருந்தும்படி; வாய்த்தலாவது முன்கூறிய சிறப்புக்களை எல்லாம் தொகுத்து முடித்துக் காட்டுதல்போலப் பொருந்துதல். |
| கொண்ட வெண்ணிறக் - குரூஉச் சுடர்க் - கொண்டல்கள் - "ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யு மா மழை" (தேவா -நம்பி - புன்கூர்). கொண்ட - நீரை மேற்கொண்ட; சுடர்க் குரூஉக் கொண்டல் - என்க. குரு என்பது குரூஉ எனச் செய்யு ளோசையின்ப நோக்கி அளபெடுத்து நின்றது குரு - பருமை; நிறமுமாம். சுடர் - ஒளி; வெள்ளைமேகத்தி னியல்பாலும், அவற்றில் உண்டாகும் மின்னல்களினாலும் வரும் ஒளி. |
| வெண்ணிறக் கொண்டல்கள் என்னும் வெண்துகிற் கொடி என்க; வெண்மேங்கள் என்னும் வெண்கொடி; உருவகம். நிறத்தானும் செறிவானும் புடை பெயர்ச்சியானும் மேகங்கள் துகிற் கொடிபோலாயின என்பது; வெண்கொடி மங்கலப் பொருள்; வெற்றிக் கொடியுமாம். "விதானமும் வெண்கொடியும்" (தேவா); வெண்கொடிகள் தூக்கி மணஎழுச்சியில் கலந்து விசும்பு பயன்பெற்றது போன்றது |