[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1487

என்பதாம். நிரைத்தது - வரிசையாக உயர்த்தியது; கார்மேகாயின் நன்மைக்குறியாகா; ஆதலின் வெண்மேகமும் அதுபற்றியே வெண்கொடியும் கூறினார்.
எண்டிசைத் தலத்து - மண்டுமத்திரு - என்பனவும் பாடங்கள்.

1195

3094
ல விந்நல மியாவையு மெழுச்சிமுன் காட்டுங்
காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்
மூலமாகிய தோணிமேன் முதல்வரை வணங்கிச்
சீல மார்திரு வருளினான் மணத்தின்மேற் செல்வார்.

1196

3095
காழி மாநகர் வேதியர் குழாத்தொங் கலந்து
சூழு மன்பர்க ளேனையோர் துதைந்துமன் செல்ல
வாழி மாமறை முழங்கிட, வளம்பதி வணங்கி,
நீழல் வெண்சுடர் நித்திலச் சிவிகைமேற் கொண்டார்.

1197

3994. (இ-ள்.) ஏல...காலை - பொருந்தும்படி இந்நலங்கள் யாவையும் மணவெழுச்சியின் முன்னே காட்டுகின்ற காலையில்; செய்வினை....பெருமான் - செய்யும் கடப்பாட்டினை முடித்தருளிய கவுணியர்பெருமானாராகிய பிள்ளையார்; மூலமாகிய...வணங்கி - மூலமாகிய திருத்தோணியின் மேல் இறைவரைச் சென்று வணங்கி; சீலமார்....செல்வார் - செம்மை பொருந்திய திருவருள் பெற்றவராய்த் திருமணத்தினை மேற்கொண்டு செல்வாராகி;

1196

3095. (இ-ள்.) காழிமாநகர்...செல்ல - சீகாழிப் பெரும்பதியின் மறையவர் கூட்டத்துடன் கலந்து சுற்றிச் சூழ்ந்த அன்பர்களும் ஏனையோர்களும் நெருங்கி முன்னே செல்லச் சென்று; வாழி மாமறை முழங்கிட - வாழ்வு தரும் பெருமறைகள் முழங்க; வளம் பதி வணங்கி - வளமுடைய சீகாழித் திருப்பதியினை வணங்கி; நீழல்...மேற்கொண்டார் - ஒளி பெருகிய வெண்சுடரினையுடைய முத்துச்சிவிகையின்மேலே எழுந்தருளி யமர்ந்தருளினர்.

1197

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3094. (வி-ரை.) ஏலுதல் - பொருந்துதல்; இந்நலம் யாவையும் - பகலோன் (3087) முதலாக விசும்பு (3093) ஈறாக முன்கூறிய இவற்றின் சிறப்பும் நன்மைக் குறிகளும் ஆகிய அனைத்தும்.
எழுச்சி முன் காட்டும்காலை - மண எழுச்சியின்முன்னே அமைந்து காட்டியகாலையில்; காலை - காலைப்பொழுது.
செய்வினை முற்றிய - காலைக் கடப்பாடுகளையும், மண எழுச்சியின் முன்னர்ச் செய்யப்படுவனவற்றையும் முடித்த; செய்வினை - இவ்வுலகில் வந்தவதரித்துச் செய்யவேண்டுவனவாய் இறைவர் திருவருள் கொண்ட பரசமய நிராகரிப்பும திருநீற்றின் ஆக்கமுமாகிய இரண்டும் என்ற குறிப்பும் காண்க.
மூலமாகிய தோணி என்றும், மூலமாகிய முதல்வர் என்றும் தனித்தனி; கூட்டி உரைக்க நின்றது; மூலம் ஆகிய தோணி என்புழி மூலம் - மறைமுதலாகிய பிரணவம் என்க. வேதங்களே தோணி உருவுடன் இறைவரை உட்கொண்டு தாங்கி நிற்கின்றன என்பதாம்; "சுருதி தொடர்ந்து பெருந்தோணி" (1971). மூலமாகிய முதல்வர் - என்புழி எப்பொருட்கும் மூல முதல்வராகிய சிவபெருமான் என்க; "எப்பொருளு