[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1489

நீழலும், சுடர் - பின் வரலாற்றில் வரும் சோதியும் குறிப்பிற்பெற நின்றமையும் காண்க.

1197

3096
ன வாகன மேறுவார் யாருமேற் கொள்ளக்
கான மாகிய தொல்கல்பிச் சங்குடை கவரி
மேனெ ருங்கிட விசும்பினு நிலத்தினு மெழுந்த
வான துந்துபி முழக்குடன்மங்கல வியங்கள்.

1198

(இ-ள்.) ஆன....மேற்கொள்ள - அவரவர்க்காயின வாகனங்களை ஏறிச்செல்வார் அவ்வவற்றினை ஏறி மேற்கொள்ள; கானமாகிய.... மேனெருங்கிட - காடுபோன்ற தொங்கல்களும், நீலிக் குஞ்சங்களும், குடைகளும், கவரிகளும் மேலே நெருங்கவும்; விசும்பினும் நிலத்தினும் - ஆகாயத்தினும் நிலத்தினுமாக முறையே; வானதுந்துபி....இயங்கள் - தேவதுந்துபி முழக்கத்துடனே மங்கல வாத்தியங்களின் ஒலியும்; எழுந்த - ஒருங்கே எழுந்தன.
(வி-ரை.) ஆன வாகனம் - அவரவர்க்காயின ஊர்திகள். ஆன - பக்கத்திலிருக்க வேண்டியவர்கள், விருத்தர், பாலீசர், பணிமொழியார் முதலியோர்களும், மற்றும் நடந்து செல்ல இயலாதோரும், பண்டங்களைப்பெய்து கொண்டு செல்வோரும், திருவினால் சிவிகை பரி முதலாயின ஊர்தி வகைமேற்கொண்டு செல்வோரும் முதலாக அவ்வர்க்காயின என்க. யான வாகனம் என்பது பாடமாயின் யானம் - சிவிகை என்று கொள்க. "உயர்ந்த வாகன யானங்கண் மிசைக்கொண்டா ருழையரானார்" (166); முன்னை நாளில் உயர்நிலைப் பெண்கள் சிவிகையிற் செல்லும் வழக்குப்பற்றி "மாமணிச் சிவிகை தன்னில் மடநடை மயிலன்னாரை.....ஏற்றி" (1757) என்றும், "அன்னமென் னடையி னாரு மணிமணிச் சிவிகை யேறி" (2623) என்றும் வரும் காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசி யம்மையார் வரலாறுகளும் பிறவும் பார்க்க.
ஏறுவார் யாரும் - முன் கூறியவாறு ஏறும் மரபும் வழக்கும் அவசியமும்்நிலையு முடையோர் யாவரும்.
கானமாகிய - காடுபோல; "கவரிக்கானம்" (3199); நிலத்தில் தண்டு வேரூன்றி மேலே தழைத்து விரிந்து செறிந்துள்ள தாவரங்கள் கானம் எனப்படும்; இங்குத் தொங்கல் - கவரி முதலியவை மாந்தரால் தாங்கி உயர்த்தப்பட்டு மேலே விரிந்து நெருங்குதலின் கானம் போன்றன என்பதாம். கானம் போன்றதனைக் கானமென்ற துபசாரம்.
தொங்கல்...கவரி - மேலுயர்த்திப் பிடிக்கும் உபசாரக் கருவிகள்; இந்நாளில் இவற்றின் எடுத்துக்காட்டுக்களைப் பெரிய ஆலயங்களிலும் பெருந் திருமடங்களில் மட்டும் ஏகதேசத்திற் காணலாம்; மேல் நெருங்கிட -மேலே உயர்த்திப் பிடித்தலால் மேனிலத்தில் நெருக்கமாகக் காணப்பட.
விசும்பில் துந்துபி முழக்கும் நிலத்தில் இயங்களும் என்று நிரனிறையாக்குக.
துந்துபி - தேவதுந்துபி; தேவர்கள் இத்தெய்வச் சிவமணங் காண மேலே நெருங்கிப் போந்து தொடர்ந்து துந்துபி முழக்கி ஆரவாரித்தனர்; மேல் 3102 - 3103 - 3156 - 3163 பார்க்க.
இயங்கள் - இயங்களின் முழக்கு ஒலிக்காகி வந்தது.