| |
3098 | கோதையர் குழல்சூழ் வண்டின் குழாத்தொலி யொருபாற்,கோல வேதியர் வேத வாய்மை மிகுமொலி யொருபான் மிக்க ஏதமில் விபஞ்சி வீணை யாழொலி யொருபா, லேத்தும் நாதமங் கலங்கள் கீத நயப்பொலி யொருபா லாக; | |
| 1200 |
3099 | விண்ணினை விழுங்க மிக்க வெண்டுகிற் பதாகை வெள்ளங் கண்வெறி படைப்ப மிக்க கதிர்விரி கவரிக் கவரிக் கானம் மண்ணிய மணிப்பூ ணீடு மரிசன மலிந்த பொற்பின் எண்ணிலா வண்ணத் தூசின் பொதிப்பரப் பெங்கு நண்ண, | |
| 1201 |
3100 | சிகையொடு மான்றோ றாங்குங் கிடையுமா சானுஞ் செல்வார், புகைவிடும் வேள்விச் செந்தீ யில்லுடன் கொண்டு போவார், தகைவிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார், வகையறு பகையுஞ் செற்ற மாதவ ரியல்பின்மல்க. | |
| 1202 |
3101 | அறுவகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ் சாரும் நெறிவழி நின்ற வேட நீடிய தவத்தி னுள்ளோர், மறுவறு மனத்தி லன்பின் வழியினால் வந்த யோகக் குறிநிலை பெற்ற தொண்டர் குழாங்குழா மாகி யேக, | |
| 1203 |
3102 | விஞ்சைய ரியக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் அஞ்சன நாட்ட வீட்டத் தரம்பைய ருடனா யுள்ளோர் தஞ்சுடர் விமான மேறித் தழைத்தவா தரவி னோடு மங்சுறை விசும்பின்மீது மணவணி காணச் சொன்றார். | |
| 1204 |
| 3098. (இ-ள்.) கோதையர்...ஒருபால் - பெண்களுடைய கூந்தலைச் சூழ்ந்த வண்டுக் கூட்டங்களின் ஒலி ஒருபக்கத்திலும்; கோல...ஒருபால் - கோலத்துடன் கூடிய மறையவர்கள் ஓதும் வேத வாய்மை மிகும் ஒலி ஒருபக்கத்திலும்; மிக்க...ஒருபால் - குற்றமில்லாத மிக்க வீணையும் யாழுமாகிய இவற்றின் ஒலி ஒருபக்கத்திலும்; ஏத்தும்...ஒருபாலாக - துதிக்கின்ற நாதத்துடன் கூடிய மங்கலங்களைக் கீதமாகப் பாடும் இனிய ஒலி ஒருபக்கத்திலுமாகச் சத்திக்க; |
| 1200 |
| 3099. (இ-ள்.) மிக்க....வெள்ளம் - மிகுந்த வெண்துகிற்கொடிகளின் கூட்டம்; விண்ணினை விழுங்க -ஆகாயவெளியை மறைக்கவும்; மிக்க கதிர்...கானம் - மிகுந்த ஒளி விரியும் சாமரைகளின் கூட்டம் கண்வெறி செய்யவும்; மண்ணிய மணிப்பூண் - விளக்கம் செய்த மணிகளையுடைய அணிகளும்; நீடும்...பொதிப்பரப்பு - நீடுகின்ற மஞ்சனிற மிகுந்த அழகிய அளவில்லாத வண்ணங்களையுடைய துணிப்பொதிகளின் கூட்டமும்; எங்கும்நண்ண - எங்கும் பொருந்த; |
| 1201 |
| 3100. (இ-ள்.) சிகையொடு...செல்வார் - பஞ்ச சிகைகொண்ட கோலத்துடன் கரு மான்தோலைப் பூணூலில் தரித்த வேதம் ஓதும் சிறுவர்களும் உபாத்தியாயருமாகக் கூடிச் செல்லவும்; புகைவிடும்.... கொண்டுபோவார் - ஓமப்புகை விடுகின்ற வேள்விச் செந்தீயினைத் தத்தம் மனைவியர்களுடனே கொண்டு மறையவர் போகவும்; தகை விலா...சார்வார் -தடுக்கலாகாத விருப்பத்துடனே பெருமையாற் சிறந்த திருப் |