| |
| தும்; "தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த" - என்றபடி பிள்ளையார் குருவாக எழுந்தருளி இங்குத் திருமணங்கான முன்னைத் தவத்தினால் அணைந்தோர்க்கெல்லாம் "ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாம்" என்று பதிகம் பாடி உணர்த்தியருளும் நிலையும் கருதுக. புவனங்கள் வாழவந்த என்ற கருத்துமிது. |
| சாரும் பவமறுத் தாள வல்லார் பாத முள்ளத்துக்கொண்டு - சேர்ந்தார் - என்க. ஆசாரியன் பக்குவப்பட்டடைந்த மாணவனுக்குத் தீக்கை செய்து நெறி அருளும் முன்பு இறைவரை நினைந்து "இறைவரே! இம்மாணவகன் பக்குவ நோக்கித் தீக்கை செய்து நன்னெறி செலுத்த அருள்புரிவீராக!" என்று விண்ணப்பித்து மேற்செல்லும் சிவாகமவிதி காண்க. |
| சிவன் - இறைவரது திருநாமங்களுள் பவன் - சிவன் என்பன சிறந்தவை என்பது. |
| 1206 |
3105 | பெருமணக் கோயி லுள்ளார் மங்கலம் பெருகு மாற்றல் வருமணத் திறத்தின் முன்னர் வழியெதிர் கொள்ளச் சென்று திருமணம் புணர வெய்துஞ் சிரபுரச் செம்ம லார்தாம் இருண்மறைத் திலங்கு கண்டத் திறைவர்தங் கோயில் புக்கார். | |
| 1207 |
| (இ-ள்.) பெருமணக் கோயில்...எதிர்கொள்ள - திருநல்லூர்ப் பெருமணத்தின்கோயிலில் உள்ள அடியார்கள் மங்கலம் சிறந்து பெருகும்படி இனி நிகழ உள்ள திருமணத்தில் முன்னர் வழிவில்வந்து எதிர்கொள்ள; திருமணம்...செம்மலார்தாம் - திருமணம் செய்தருளும்பொருட்டு வரும் சீகாழிப் பெருத்கையாராகிய பிள்ளையார்; சென்று - சென்றருளி; இருள்மறைத்து...புக்கார் - கரியவிடத்தினைத் தன்னுட்கரந்து விளங்கும் கண்டத்தினையுடைய இறைவரது திருக்கோயிலினுட் புகுந்தருளினர். |
| (வி-ரை.) இப்பாட்டினால் திருமணத்தின்பொருட்டு வருகின் பிள்ளையாரை அத்தொடர்புபற்றிச் சுற்றத்தார் முதலியோர் எதிர்கொண்டு மணமனைக்கு அழைத்துச் செல்லுதல் உலகியல்பு; ஆனால் இங்கு அவ்வாறு அவர்கள்அத்தொடர்ப்புபற்றி எதிர்கொண்டு அழைக்கும்முன்பே திருக்கோயிலின் அடியவர்கள் உரிய சிறப்புக்களுடன் சென்று எதிர்கொண்டு பிள்ளையாரை வரவேற்று அழைத்துச்செல்ல அவர்களுடன் பிள்ளையார் நேரே திருக்கோயிலுக்கு எழுந்தருளினர் என்பது கூறப்பட்டது. இது பின்வரும் நிகழ்ச்சியின் முற்குறிப்பாக உள்ளமையும் காண்க; பிள்ளையார் புற உலகத் தோற்றத்தில் திருமணஞ் செய்தருள எழுந்தருளினாரேனும் உண்மையில் திருப்பெருமணத்தில் இறைவருடன் புக்கு ஒன்றி உடனாகும் சிவபோகத் திருமணத்தின் பொருட்டே வந்தாராகும் என்பது குறிப்பு; உலகியலில் மணத்தின்பொருட்டுச் செல்வோர் மணவினைசெயிடத்துக்கு நேரே செல்லாது இறைவர் திருக்கோயிலுக்குச் செல்வோரைக் காணல் அரிதாதல் கருதுக. "மணத்தின் முன்னர் அடியார் எதிர்கொள்ள மணம்புணர எய்தும் செம்மலர் கோயில்புக்கார்" என்ற குறிப்புமிது. |
| வரும் மணத்திறத்தின் முன்னர் - மணம்பற்றி அத்தொடர்பால் அழைத்துச் சென்று மணமனை புகுமுன்பு; வரும் - குறித்து எழுந்தருளிவந்த. |
| இருள் மறைத்து இலங்குகண்டத்து இறைவர் - இருள் - இருள்போன்ற கரியவிடத்துக்கு ஆயிற்று; ஆகுபெயர்; இருள் - இருள்மலம் என்னும் ஆணவம் என்ற |