| |
| குறிப்புடனும் நின்றது; இனி, இத்திருமணத்திற் பிள்ளையாரின்மூலம் வந்து சார்வார்களது ஆணவமாகிய மூலமத்தையெல்லாம் சத்திகெட்டு ஒடுங்கும்படி செய்து முத்திதரும்நிலை விளங்கிநிற்கும் இறைவர் என்ற குறிப்பும் காண்க. |
| மங்கலம் பெருகுமாற்றால் - எதிர்கொள்ள - என்க. இறைவரது குடைமுதலிய மங்கலப் பொருள்களை பெருகஏந்திப்போய் வழியில் எதிர்கொள் என்க; இனி, மங்கலமாவது சிவம்; பிள்ளையார் வந்த மங்கலமாகிய மணமே பெருகிய சிவமங்கலமாக இனி நிகழும் வழியாலே என்ற குறிப்பும் காண்க; உலகில் மங்கலமாக எண்ணப்படும் மணம் முதலியவை யெல்லாம் ஒருகாலத்து அழிந்துபட்டு அமங்கலமாய் முடிவாதல் உறுதியாதலின், அவற்றை மங்கலம் என்பது பொய் உபசாரமேயன்றி உண்மையன்று; அவை உடலோடொழிவன; சிவபெருமானாகிய உயிர் நாயகனை ஆன்மாக்கள் அடைவதாகிய மணமே அழியாத மங்கலம்; உலக மணம்போலன்றி அனுபவிக்குந்தோறும் பெருகும் பேரானந்தம் விளைக்கும் மங்கலம் என்ற முற்குறிப் பெல்லாங் ஈண்டுக் கண்டுகொள்க. |
| இருள் மணந்து - என்பது பாடமாயின், மணந்து - கூடி என்க. |
| 1207 |
3106 | நாதரைப் பணிந்து போற்றி நற்பொருட் பதிகம் பாடிக் காதன்மெய் யருண்முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து வேதியர் "வதுவைக் கோலம் புனைந்திட வேண்டு" மென்னப் பூதநா யகர்தங் கோயிற் புறதொரு மடத்திற் புக்கார். | |
| 1208 |
| (இ-ள்.) நாதரை...போந்து - இறைவரை வணங்கித் துதித்து நல்ல பொருளினையுடைய திருப்பதிகத்தைப் பாடிப், பெருவிருப்பத்தினை விளைக்கின்ற (இறைவரது) மெய்யருளினை முன்னே பெற்றவராய்க் கவுணியர் தலைவராகிய பிள்ளையார் வெளிப்பபோந்து; வேதியர்...என்ன - "திருமணக் கோலத்தினைப் புனைந்தருள வேண்டும்" என்று மறையவர்கள் வேண்டிக்கொள்ள அதனைக் கேட்டு; பூதநாயகர்..புக்கார் - பூதநாயகராகிய இறைவரது திருக்கோயிலின் புறத்திலே ஒரு திருமடத்தினுள்ளே புகுந்தருளினர். |
| (வி-ரை.) நற்பொருட் பதிகம் பாடி - இப்பதிகம் கிடைத்திலது! |
| காதல் மெய்யருள் - காதல் - காதலை விளக்கும்; காதல்கொண்ட என்றலுமாம். மெய்யருள் - இறைவரது, என்றும் மாறாத அருள். மெய் - (இறைவர்) மெய்யினது அருள் என்றலுமாம்; காதல் - "காதலாகிக் கசிந்து" என மேல்வரும் திருப்பதிகத்தின் முற்குறிப்பு. |
| வேதியர் என்ன என்க. வதுவைக் கோலம் - மணமகனாராக எழுந்தருளும் மணக் கோலம்; இது மேல்வரும் பத்துப் பாட்டுக்களால் விரிக்கப்படுதல் காண்க. |
| பூதநாயகர் - உயிர்களின் நாயகர்; பூதம் - உயிர்கள். "பூதபரம் பரைபொலிய" (1899); உயிர்க்குயிராய் உள்ளிருந்து இயக்கும் நாயகர்; இங்கு இனி, வரும் அடியார்களை ஆட்கொண்டு தமது சிவானந்தப் பெரும்பேறு அளித்தருளும் குறிப்படுன் கூறியபடி; பூதம் - சிவ பூதகணங்கள் என்றலுமாம். |
| ஒருமடம் - பிள்ளையார் எழுந்தருளி வதுவைக் கோலம் புனைந்தருளுதற் கிடமாதலாகிய பேறு பெறுதலின் மடம் எனப்பெற்றது; இஃது இன்ன இடம் என்று இப்போது அறியக் கூடவில்லை! இது கோயிலின் அருகில் அமைந்திருத்தல் வேண்டு |