1500திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

மென்பது கருதப்படும். நம்பாண்டார் நம்பிகளது திருமனையும் அவ்வாறே பிள்ளையாரது பெருந் திருமணம் நிகழ்ந்த இடமாம்பேறு பெற்றது. அஃது இருந்த இடந்தானும் இந்நாள் அறியக்கூடவில்லை! இவற்றைக் கன்னபரம்பரை வழக்குப்பற்றியேனும் அறிந்து நினைவுக் குறியாகக் காத்துவைத்தல் சிவபுண்ணியமாகும்.

1208

திருமணக் கோலம் - (பாதாதிகேசம்) அடி முதல் முடி வரை:
3107
பொற்குட நிறைந்த வாசப் புனிதமஞ் சனநீ ராட்டி,
விற்பொலி வெண்பட் டாடை மேதக விளங்கச் சாத்தி,
நற்றிரு வுத்த ரீய நறுந்துகில் சாத்தி, நானப்
பற்பல கலவைச் சாந்தம் பான்மையி னணிந்த பின்னர்,

1209

3108
திருவடி மலர்மேற் பூத்த செழுநகைச் சோதி யென்ன
மருவிய தரளக் கோவை மணிச்சரி யணையச் சாத்தி,
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்குபொற் சரட்டிற் கோத்த
பெருகொளி முத்தின் றாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி,

1210

3109
ண்சுடர்ப் பரிய முத்துத் தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக் கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்டிரு வரையி னீடு வனப்பொளி வளரச் சாத்தி,

1211

3110
ளிகதிர்த் தரளக் கோவை யுதரபந் தனத்தின் மீது
தளிரொளி துளும்பு முத்தின் சன்னவீ ரத்தைச் சாத்தி,
குளிர்நில வெறிக்கு முத்தின் பூணநூற் கோவை சாத்தி,
நளிர்கதிர் முத்து மாலை நகுசுட ராரஞ் சாத்தி,

1212

3111
வாள்விடு வயிரக் கட்டு மணிவிர லாழி சாத்தித்,
தாளுறு தடக்கை முத்தின் றண்டையுஞ் சரியுஞ் சாத்தி,
நீளொளி முழங்கைப் பொட்டு நிரைசுடர் வடமுஞ் சாத்தித்,
தோள்வளைத் தரளப் பைம்பூண் சுந்தரத் தோண்மேற் சாத்தி,

1213

3112
திருக்கழுத் தாரந் தெய்வக் கண்டிகை மாலை சேரப்
பருத்தமுத் தொழுங்கு கோத்த படரொளி வடமுஞ் சாத்திப்,
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திருவார் காதில்
வருக்கவெண் டரளக் கொத்தின் வடிக்குழை விளங்கச் சாத்தி,

1214

3113
நீற்றொளி தழைத்துப் பொங்கி நிறைதிரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி வெண்சுட ரெழுந்த தென்னப்
பாற்படு முத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி,
ஏற்பவைத் தணிந்த முத்தி னெழில்வளர் மகுடஞ் சேர்த்தார்;

1215

3114
இவ்வகை நம்மை யாளு மேர்வளர் தெய்வக் கோலங்
கைவினை மறையோர் செய்யக், கடிகொள்செங் கமலத் தாதின்