[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1501

செவ்விநீ டாம மார்பர் திருவடை யாள மாலை
எவ்வுல கோரு மேத்தத் தொழுதுதா மெடுத்துப் பூண்டார்;

1216

3115
அழகினுக் கணியாம் வெண்ணீ றஞ்செழுத் தோதிச் சாத்திப்,
பழகிய வன்பர் சூழப் படரொளி மறுகி லெய்தி
மழவிடை மேலோர் தம்மை மனங்கொள வணங்கி வந்து
முழவொலி யெடுப்ப முத்தின் சிவிகைமேற் கொண்ட போது,

1217

3116
ழுந்தன சங்க நாத; மியம்பின வியங்க ளெங்கும்;
பொழிந்தன விசும்பில் விண்ணோர் கற்பகப் புதுப்பூ மாரி;
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகண் மீது; மலர்ந்தன வுலக மெல்லாம்.

1218

3107. (இ-ள்) பொற்குடம்...ஆட்டி - பொன்னின் குடத்தில் நிறைந்த மணமுடைய தூய திருமஞ்சனநீரினாலே பிள்ளையாரை நீராட்டுவித்து; விற்பொலி..சாத்தி - ஒளி விளங்கும் வெண்பட்டாடையினை மேன்மை பெற விளங்கும்படி சாத்தி; நற்றிரு...சாத்தி - நல்ல திருவுத்தரீயமாகிய நறுந் துகிலினைச் சாத்தி - நானம்...பின்னர் -மணங் கமழும் கத்தூரியுடன் பல பொருள்களைக் கூட்டியமைத்த சாந்தத்தினைப் பண்புபெற அணிவித்த பின்பு,

1209

3108. (இ-ள்) திருஅடி....சாத்தி - திருவடி மலர்கள் மேலே பூத்த செவ்விய விளக்கத்தின்ஒளிபோலப் பொருந்திய முத்துக் கோவைகளையுடைய இரத்தின வளையை அங்கு அணையும்படி சாத்தி; விரிசுடர்...சாத்தி - விரியும் ஒளியுடைய பரடுகளின்மேல் விளங்கியபொற்கம்பியில் கோத்த பெருகும் ஒளியுடைய முத்துமாலை வடத்தில் விளங்கிய குஞ்சம் சாத்தி,

1210

3109. (இ-ள்) தண்சுடர்....கடி சூத்திரத்தை - குளிர்ந்த ஒளி வீசுகின்ற பருமுத்துக்களைப் பொற்கயிற்றிலே கோத்த, கண்டாரது கண்ணைக் கவரத்தக்க, கோவை வரிசைகளையுடைய, ஒளியுடைய அரைஞாணை; வெண்சுடர்...மீது வெள்ளிய ஒளி வீசும் முத்து மாலை விரிந்த சுடர்விடும் கச்சத்தின் மேலே; வண்...வளரச் சாத்தி வளம் பொருந்திய திருவரையினிடத்து மிகுந்த அழகுடனே ஒளி விளங்க அணிந்து,

1211

3110. (இ-ள்) ஒளி...மீது - ஒளியுடைய கதிர்களை வீசும் முத்துக்கோவைகளாலாகிய அரைப்பட்டிகையின் மேல்; தளிரொளி...சன்னவீரத்தைச் சாத்தி - தளிர்க்கும் ஒளி ததும்பும் சன்னவீரத்தை அணிந்து; குளிர் நிலவு...கோவை சாத்தி - குளிர்ந்த ஒளிவீசும் முத்துக் கோவையாலாகிய பூணூலினை அணிந்து; நளிர் கதிர்...ஆரம் சாத்தி - குளிர்ந்த கதிர்களையுடைய முத்து மாலையாகிய ஒளி விளக்கமுடைய ஆரத்தை அணிந்து;

1212

3111. (இ-ள்) வாள்விடு...ஆழி சாத்தி - ஒளி விடுகின்ற வயிரக் கட்டுடைய அழகிய விரல்மோதிரத்தை அணிந்து; தாளுறு....சரியும் சாத்தி - முழந்தாள் வரையும் நீண்ட வலிய கையில் முத்தினாலாகிய தண்டைமையும் கைச்சரியினையும் அணிந்து; நீள் ஒளி...வடமும் சாத்தி - நீண்ட ஒளியுடைய முழங்கைப் பொட்டுடனே வரிகையின் ஒளிவீசும் மணி வடங்களையும் அணிந்து; தோள் வளை...தோண்மேற் சாத்தி - தோள் வளையாகிய முத்தாலாகிய அழகிய அணியினை அழகிய தோளின்மேல் அணிந்து;

1213