[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1509

(வி-ரை) சீரணி தெரு - திருமணத்தின் பொருட்டுச் சிறப்பும் அலங்காரமும் செய்யப்பெற்றதெரு.
திருமணம் - திருமணத்தின் பொருட்டு மணமகனாரது எழுச்சி.
முத்தின்...தாரை - இவையும் திருநெல்வாயில் இறைவரா லருளப்பட்டவை. இச்சிறப்புப்பற்றிக் குடையினையும் இவற்றினையும் இறுதியில் வைத்தார். இவை எழுச்சியின் ஏனையவற்றுக்கு முன்னே செல்வனவாயினும் இக்கருத்துப்பற்றிப் பின்கூறப்பட்டன என்பது குறிக்க முன்னே பிடித்தன என்றார்; பிடித்தன - பிடித்து ஊதப்பட்டன; மரபு வழக்கு.
பேரொலி பெருக - இவற்றின் எழும் ஒலி பெருஞ் சத்தமாம்; ஆர்வமேலீட்டினானும், எல்லாம் ஒருங்கே பிடித்தூதப்பட்டமையானும் இயல்பாகிய அப்பேரொலி மேலும் பெருகிற்று; ஒலி என்றார் திருநாமங்களையும் மெய்க்கீர்த்திகளையும் பொருள் பொருந்தச் சொல்லி ஒலித்தலால்.
மறைகளோடு...வந்தான் - மறைகள் உய்ய என்றும், தாரணி உய்ய என்றும் கூட்டுக. "வேதநெறி தழைத்தோங்க" என்றவிடத்தும், பிறாண்டும் உரைத்தவை இங்கு நினைவுகூர்தற்பாலன. வந்தான் - எழுந்தருளி வருகின்றார் என்ற அறிவிப்புக் குறிப்பு; காலவழுவமைதி. இவை பிள்ளையாரது திருநாமங்களை இவ்வாறு எடுத்துப் பிடித்தல் துதித்து எழுந்த வகையுமாம் என்பது மேற்பாட்டிற் காண்க.

1220

3119
ண்ணினுக் கிடுக்கண் டீர வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவு மேத்திச் சின்னங்க ளெழுந்த போதவ்,
வண்ணலார் வதுவை செய்ய வலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க,

1221

3120
முற்றுமெய்ஞ் ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்றி
நற்பெருந் தவத்தி னீர்மை நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார் தம்மையுங் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப் புரிவுடன் செய்த வேலை,

1222

3121
செம்பொன்செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனைபூண் செல்வப்
பைம்பொனின் மாலை வேய்ந்த பவளமென் கொடியொப் பாரை
நம்பன்ற னருளே வாழ்த்தி நல்லெழில் விளங்கச் சூட்டி
அம்பொன்செய் தீப மென்ன வழகலங் கரித்து வைத்தார்.

1223

3119. (இ-ள்) மண்ணினுக்கு....ஏத்தி - நிலவுலகின் வாழ்வாரது துன்பந் தீர வந்து அவதரித்த பிள்ளையாரது திருநாமங்கள் அளவில்லாத பலவற்றையும் எடுத்து ஏத்தித் துதித்து; சின்னங்கள் எழுந்தபோதில் - திருச்சின்னங்கள் கூறி எழுந்த அந்நேரத்திலே; அவ் அண்ணலார் ....பொங்க - அந்தப் பெருமையுடையோராகிய பிள்ளையார் திருமணஞ் செய்தற்காக அலங்கரித்து அணையும் பேறு பெற்ற புண்ணிய மறையவர் நம்பாண்டாரது திருமாளிகையிலே மங்கலங்கள் மிகுந்து மேல் ஓங்க,

1221

3120. (இ-ள்) முற்று மெய்ஞ்ஞானம்....பற்றி - முற்றிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்ற பிள்ளையாரது சிவந்த திருக்கையினைப் பிடிக்க; நற்பெரும்...எழுந்த - நல்ல பெரிய தவத்தின் தன்மையாலாகிய நலங்களையெல்லாம் கொண்டு எழுந்த; தெய்வ...காப்புச் சேர்த்து - தெய்வக் கற்பகப் பூங்கொம்பு போன்ற அம்மையாரையும்