1512திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

அம்பொன் செய்...வைத்தார் - அழகுக் கழகுசெய்தல் போல் இயல்பால் அழகுடையாரை மேலும் அலங்கரித்தனர் என்பதாம்.
அம்பொன்செய் தீபம் என்ன - தீபம் - தானே ஒளிதரும் பொருள்; அதனைப் பொன்னா லமைத்ததுபோல; பொன்னா லமையினும் விளக்கே ஒளிதருவதுபோல இங்கு அம்மையாரின் அழகே பொற்பணிகளை விளக்கியதென்பதாம்.

1223

3122
மாமறை மைந்த ரெல்லா மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணந் தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வா ரரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீ ரிருக்குடன் கலந்து வீச,

1224

3123
விண்ணவர் மலரிங்ன மாரி விசும்பொளி தழைப்ப வீச,
மண்ணக நிறைந்த கந்த மந்தமா ருதமும் வீசக்,
கண்ணொளி விளக்க மிக்க காமர்தோ ரணங்க ளூடு,
புண்ணிய விளைவு போல்வார் பூம்பந்தர் முன்பு சார்ந்தார்.

1225

3122. (இ-ள்) மாமறை...சென்று - பெருமையுடைய வேதிய மைந்தர்கள் எல்லாரும் திருமண எழுச்சியின் எதிரே சென்று; மன்னும்...மணியும் வீச - பொருந்திய தூய மலர்களுடனே செம்பொற் சுண்ணத்தினையும் தொக்க நவமணிகளையும் வீச; தாமரை..கலந்து வீச - தாமரைமலரில் இருக்கும் பிரமதேவன் போன்ற வேதியர்கள் அரசிலையும் தருப்பையும் தோய்ந்த அழகிய பொற்கலச நன்னீரினை வேதமந்திரங்களைச் சொல்லி வீசித் தெளிக்க;

1224

3123. (இ-ள்) விண்ணவர்...தழைப்ப வீச - விண்ணுலகத்தவர்கள் தேவப் பூமாரியினை வானத்தில் ஒளி மிகும்படி வீச; மண்ணகம்...மாருதமும் வீச - நிலஉலகம் நிறைந்த மணத்தையுடைய தென்றற் காற்றினையும் வீச; கண்ணொளி...முன்பு சார்ந்தார் - நெருங்கிய ஒளி மிகுந்த அழகிய தோரணங்களினிடையே சென்று புண்ணியத்தின் பயன் போல்வாராகிய பிள்ளையார் பூம்பந்தரின் முன்பு சார்ந்தருளினர்.
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3122. (வி-ரை) மாமறை மைந்தர் - மா - பெருமை பொருந்திய என்பது மறைக்கு அடைமொழி. மைந்தர் - சிறுவர்கள்; குமாரப் பருவத்தினர்.
மணத்து எதிர் சென்று - மணம் - திருமண எழுச்சியாய் மணமகன் வரும் கூட்டம் மணம் எனப்பட்டது.
தூமலர்ச் செம்பொற் சுண்ணம் - புதிய நன்மலர்கள் கலந்த பொற்சுண்ணத்தூள்; தொகு நவமணியும் - கலந்த வகைகளைக் கொண்ட நவமணிகள்; உம்மை உயர்வு சிறப்பு.
தாமரை மலரோன் போல்வார் - பிரமனைப் போன்ற மறையவர்கள் - வைதிகர்கள். முன்னர் மைந்தர்கள் என்றது சிறுவர்; இவர்கள் வயது முதிர்ந்து வைதிக ஒழுக்கில் நிற்போர்.
அரசிலை தருப்பை தோய்ந்த - கலச நன்னீர் - கலசத்தில் தூய நீரினுடன் அரசிலையும் தருப்பையும் இட்டு வைத்தல் மரபு. நீர் இருக்குடன் கலந்து வீசுதலாவது - வேத மந்திரங்களைச் சொல்லி அரசிலையினா லிறைத்தல்; இருக்கு - இங்கு வேதப் பொதுமை குறித்து நின்றது.