1516திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பரசமயங்கள் வீழ்த்தார் - பரசமயமாகிய வல்லிருள் போக்கிய பின்னரே ஞானவொளி எழுந்து விளங்குமாதலின் பரசமயங்கள் வீழ்த்தார் - ஒளி பரப்பி நின்றார் என்றார். இவை யிரண்டுமே பிள்ளையாரது திருவவதார உள்ளுறையாம் என்பது குறிப்பு; திருவவதார உள்ளுறை நிறைவெய்திய வாதலின் பிள்ளையார் இனித் திருமணத்திற் சிவனடி யெய்துவார் என்பதும் குறிப்பு.

1228

3127
திர்வர வேற்ற சாய லிளமயி லனைய மாதர்
மதுரமங் கலமுன் னான வாழ்த்தொலி யெடுப்ப வந்து
கதிர்மணிக் கரக வாசக் கமழ்புன லொழுக்கிக் காதல்
விதிமுறை வலங்கொண் டெய்தி மேவுநல் வினைகள் செய்தார்.

1229

(இ-ள்) எதிர் வரவேற்ற...மாதர் - வர வெதிரேற்ற சாயலினாலே இளமயில் போன்ற பெண்கள்; மதுர...வந்து - இனிமையான மங்கல மொழிகளை முன்னாகக் கொண்டு பாடிய வாழ்த்தொலி எங்கும் நிறைய வந்து; கதிர்மணி...ஒழுக்கி - ஒளி பொருந்திய அழகிய கமண்டலத்தில் உள்ள மணம் பொருந்திய நீரினைத் திருமுன்னே வார்த்து; காதல்...செய்தார் - மிக்க விருப்பத்துடன் விதி முறையின்படி வலமாகச் சுற்றிப் பொருந்திய நல்ல சடங்குகளைச் செய்தனர்.
(வி-ரை) மாதர் - "மங்கல மகளிர்" (3125); மங்கல முன்னான வாழ்த்து - மங்கல மொழியை முன் வைத்துப் பாடும் வாழ்த்துரைக் கீதம்; மங்கல மொழிகள் முதுலிய வாழ்த்துக்களும் என்றலுமாம்; மதுரம் - இன்னிசை.
கரகம் - மூக்குடைய சிறிய தண்ணீர்ப் பாத்திரம்; ஒழுக்குதல் - மெல்லிதாய் இடையறாது விழும்படி வார்த்தல்.
வலங்கொண்டு - வலமாகச் சுற்றுதல். நீராஞ்சனம் என்ற நல்வினை என்றும், இது திருட்டிதோட நீங்கும்படி செய்யும் ஆலத்தி என்றும் உரைப்பர் ஆறுமுகத் தம்பிரானார். (திருட்டி = கண்ணேறு)

1229

3128

ங்கலம் பொலிய வேந்தி மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம்பொ னிமவரை கலந்த தென்ன
அங்கவர் செம்பொன் மாடத் தாதிபூ மியினுட் புக்கார்
எங்களை வாழ முன்னா ளேடுவை கையினி லிட்டார்.

1230

(இ-ள்) மங்கலம்...செல்ல - மங்கலப் பொருள்களை ஏந்திக்கொண்டு (பார்ப்பனப்) பெண்கள் முன்னே செல்ல; கங்கையின்...என்ன - கங்கையின் கொழுந்துபோன்ற வெள்ள ஒழுக்கு சிவந்த பொன்மலை என்னம் இமயமலையினைக் கலந்ததுபோல; அங்கவர்...புக்கார் - அங்கு நம்பாண்டார் நம்பிகளது அழகிய பொன்மாடத்தின்கண் ஆதி பூமி என்னும் மணவறையினுள்ளே புகுந்தருளினர்; எங்களை...இட்டார் - எங்களை வாழ்வித்தற்பொருட்டு முன்னாள் ஏட்டினை வைகையினில் இட்டருளிய பிள்ளையார்.
(வி-ரை) மங்கலம் - நிறைகுடம், விளக்கு, முளைப்பாண்டில் முதலிய மங்கலப் பொருள்கள்; அட்டமங்கலம் எனப்படும்.
கங்கையின் கொழுந்து - பெரிதாய் விரைவாய்ப் பேரோசையுடன் வருதலின்றி மென்மையாய்ச் சிறிய அளவில் மெல்ல முன்னேறிச் செல்லுதலின் கொழுந்தென்றார்; உருவகம். கங்கை வெண்மை நிறமுடையதாதலும் குறிப்பு. "புனல் வெண்மை" (உண்மை விளக்கம்) என்ற பொதுவியல்போ டன்றிக் கங்கை நீருக்குச் சிறப்பாகிய