| |
| தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன; வொண்கலியைப் பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே" | |
| என்பது முதலாக நம்பியாண்டார் நம்பிகள் பின்னர்க் காட்டியருளுமாறு நம்பாண்டார் நம்பிகள் முன்னரே காட்டுவாராகி என்பது. |
| உரிமையால் - மகட்கொடுக்கும் உரிமை பெற்றோம் என்ற சிறப்புரிமையின் பெருமிதத்தோடு. உரிமை வேறு - கடமை வேறு. இங்குக் கடமை என்றதனோடு அமையாது உரிமை பாராட்டி என்பது குறிப்பு. |
| வெண்பால் - ஆன்பொழி புதிய பால்; தூநீர் - தூயதாய், மலர்களும் வாசனைப் பண்டங்களும் பெய்து உள்ள நீர். |
| உடன் - ஒருங்கு; வழிபாட்டுக்குரிய மலர் - சந்தனம் - முதலியவற்றுடன் என்ற குறிப்புமாம். |
| 1232 |
3131 | வந்துமுன் னெய்தித் தாமுன் செய்தமா தவத்தி னன்மை நந்துநம் பாண்டார் நம்பி ஞானபோ னகர்பொற் பாதங் கந்தவார் குழலி னார்பொற் கரகநீ ரெடுத்து வார்ப்பப் புந்தியா னினைதி யானம் "புரிசடை யா"னென் றுன்னி, | |
| 1233 |
3132 | விருப்பினால் விளக்கி மிக்க புனிதநீர் தலைமேற் கொண்டு பொருப்புறு மாடத் துள்ளும் புறத்துளுந் தெளித்த பின்னர் உருப்பொலி யுதரத் துள்ளும் பூரித்தா; ருவகை பொங்கி அருப்புறு கிளைஞர் மேலுந் தெளித்தன ரார்வத் தோடும். | |
| 1234 |
| 3131. (இ-ள்) வந்து முன் எய்தி - வந்து பிள்ளையார் முன்பு சேர்ந்து; தாம்...நம்பி - தாம் முன்னே செய்த பெருந்தவத்தினால் பெற்ற நன்மை பெருகுகின்ற நம்பாண்டார் நம்பிகள்; கந்தவார்..வார்ப்ப - மணங்கமழும் நீண்ட கூந்தலையுடைய மனைவியார் பொற் கமண்டலத்தின் நீரினை எடுத்து வார்ப்ப; புந்தியால்...உன்னி - மனத்தினால் நினைக்கும் தியானத்தில் "புரித்த சடையினையுடைய சிவபெருமானே இவர்" என்று அழுந்திய நினைவு கொண்டு; ஞானபோனகர் பொற்பாதம் - ஞான அமுதுண்ட பிள்ளையாரது திருப்பாதங்களை; |
| 1233 |
| 3132. (இ-ள்) விருப்பினால் விளக்கி - விருப்பத்துடனே விளக்கி; மிக்க...மேற்கொண்டு - மிகுந்த தூய நீரினைத் தலையின்மேலே தெளித்துக் கொண்டு; பொருப்பு உறு...பின்னர் - மலை போன்ற திருமாளிகையினுள்ளும் புறத்திலும் தெளித்த பின்பு; உருப்பொலி...பொங்கி - அழகு மிகுந்த வயிற்றினிடமாகக் கொள்ளும்படி மிகுந்த ஆசை பொங்கி உட்கொண்டனர்; அருப்புறு....ஆர்வத்தோடும் - மயிர்ப் புளகாங்கிதம் கொள்ளும் சுற்றத்தார் மேலும் பெறுகும் ஆசையுடனே தெளித்தனர். |
| 1234 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3131. (வி-ரை) தாம் முன்....நந்தும் - தாம் முன்னைநாள் செய்த பெருந்தவம் இப்பொழுது மகட் கொடுக்கும் பேறு பெறுதலானும், இனி, அணிமையில் தாமும் ஏனை எல்லவருமாகச் சிவானந்தப் பெருமுத்தியைத் தலைக்கூட நிற்றலானும் தவத்தின் நன்மை நந்தும் என்றார். நந்தும் - பெருகும். பிள்ளையாரது பாதம் விளக்கப் பெற்றதனால் மணச் சடங்கும் நிகழ்ந்தது; குரு பாதபூசை வழிபாடுமாயிற்று. |