1522திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

(இ-ள்) பெருகொளி...தன்னில் - பெருகும் ஒளியினையுடைய பிள்ளையாரது தாமரை மலர்போன்ற கையில்; மருவும்...வார்ப்பார் - பொருந்திய மணமுடைய நீர் நிறைந்த கமண்டலத்தினை முன் ஏந்தி அதன் மங்கல நீரினை வார்ப்பாராகி; தருமுறை...செப்பி - தரும் முறையிலே தமது கோத்திரத்திலே தமது உரிய பிரவர முதலிய குலப் பெயரினையும் எடுத்துச் சொல்லி; "என்றன்...அளித்தேன்" என்றார் - "எனது அரிய நிதியாகிய பாவைபோன்ற மகளாரைப் பிள்ளையாருக்கு அளித்தேன்" என்று (விதிப்படி மும்முறை) சொன்னார்.
(வி-ரை) பெருகு ஒளி ஞானம் - சிவஞானம்; "ஐந்துமா றடக்கி யுள்ளாரரும்பெருஞ் சோதி யாலும்"(780); வலிய அகவிருளாகிய மூலமலத்தையும் போக்கும் வலிமையுடைமையால் பெருகு ஒளி என்றார்; தனக்கு மேற்பட்ட ஒளியில்லாமையும் குறிப்பு.
கையில் - நீர் வார்ப்பார் - அளித்தேன் - என்றார் - என்க; கன்னியைக் கொடுத்தேன் என்று சொல்லி, நீர் வார்த்து மணமகன்கையிற் கொடுத்தல் மரபு; கன்யா தத்தம் என்பது வடமொழி வழக்கு. "நீ ரெடுத்தவ னங்கையிற் பெய்தான்" (திருவிளை - விருத் - குமா - 8); "நேசமோ டளித்தே னென்னா..வாசநல் லுதக முய்த்தான்" (கந்தபு - திருக்கல் - 70).
தருமுறைக் கோத்திரத்தில் தங்குலம் செப்பி - தருமுறை - வழிவழி; அந்தணர் மரபின் பரம்பரை. கோத்திரம் - மரபின் உட்பிரிவு; குலம் - கோத்திரத்தின் உட்பிரிவு; பிரவரம் என்பர். இதனுடன் சூத்திரம், வேதசாகை முதலியனவும் சொல்வர். "மற்ற வன்குடி கோத்திரஞ் சூத்திர மற்றும், முற்றறிந்து"(விருத்தகு-பட - 11). செப்பி - எல்லாருமறிய எடுத்துச் சொல்லி.
என்றன் அருநிதிப் பாவையார் - மகளார்; அருநிதிப் பாவையார் - தாம் அருநிதியாகக் கொண்டு போற்றிய பாவைபோல்வார்; பாவை போல்வாரைப் பாவை என்றதுபசாரம். "பந் தணைவிரற் பாவை"(தேவா).
அருநிதிப் பாவையார் - அருநிதியாகிய அணிகளை அணிந்த என்ற குறிப்புமாம்; சாலங்கிருத கன்னிகாதானம் என்பது வடமொழி வழக்கு. "தேயு நுண்ணிடைக் கன்னியைச் செம்பொனாற் புதைத்துக், காயு மாரழல் முன்னரக் காளைகைக் கொடுத்தான்" (திருவிளை. புரா - விருத்த - பட - 12).
பாவையார் - இவர் பெயர் ஸ்தோத்திர பூர்ணாம்பிகை என்று திருநல்லூர்ப் பெருமணத்தில் வழங்கப்படுகின்றது.
பிள்ளையார் என்றதனால் அவரது கோத்திரம் முதலிய முறையும் உணர்த்தியவாறாயிற்று.

1235

3134
ற்றவர்க் கன்னி யார்கை ஞானசம் பந்தர் செங்கை
பற்றுதற் குரிய பண்பிற் பழுதினற் பொழுது நண்ணப்
பெற்றவ ருடன்பி றந்தார், பெருமணப் பிணைய னாரைச்
சுற்றமுன் சூழ்ந்து போற்றக் கொண்டுமுன் றுன்னி னார்கள்.

1236

(இ-ள்) நற்றவக் கன்னியார் கை...நண்ண - நல்ல தவத்தையுடைய கன்னியாரது கையினைத் திருஞான சம்பந்தர் தமது செங்கையால் பிடித்தற்கு உரிய பண்புடைய குற்றமற்ற நல்ல வேளை வந்து பொருந்த; பெற்றவருடன் பிறந்தார் - கன்னிகையைப் பெற்ற தாய் தந்தையரும், உடன்பிறந்த சகோதரர்களும்; பெருமணப் பிணை அன்னாரை...துன்னினார்கள் - பெருமை தங்கும் மணப்பெண்ணாகிய மான் போன்ற