1526திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

காட்சியாதலின் அதனைக் கண்டோர் வாழ்த்துவது மரபு. இங்குக் கண்டவர்கள் அக்காட்சியிலே ஈடுபட்டு இலயித்துக் கண்ணிமையாது வாழ்த்தினார்கள் என்றது அதன் மேன்மை குறித்தது.
கண்ணிமையாது வாழ்த்தி மனிதருத் தேவரானார் - கண்ணிமையாத தன்மை தேவர்களுக்குத்தான் உண்டு; அத்தன்மை இங்கு மனிதரும் பெற்றமையால் அவ்வளவில் தேவரானார் என்றார். மனிதர் - தேவர் என்றவை பிறப்பு வகை குறித்து நின்றன. கண் இமையாது வாழ்த்தியதனால் தாம்தாம் உயர்வு பெற்றனர் என்பது குறிப்பு. இறைவரை வாழ்த்துகின்றோர் தாம்தாம் உயர்ச்சியாகிய வாழ்வு பெறுதற் பொருட்டே வாழ்த்துவர் என்பதன்றி அதனால் இறைவருக்கு ஓர் வாழ்வு தருவாரல்லர். "வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனநின்பாற், றாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழுவேண்டி"(திருவா) என்றபடி இங்குக் கண்டோர் தாம் தாம் வாழ்வடைந்தார்கள் என்பதைக் காட்சிப்படக் கண்ணிமையாது வாழ்த்தி என்று காரணங் காட்டிச் சுவைபடக் கூறியவாறு காண்க. இவ்வாறு காணப்பெற்று வாழ்த்தியதனால் அவர்கள் எல்லாம் அழியாத சிவனுலக வாழ்வுபெறும் சரித விளைவுக் குறிப்பும் காண்க.
நனிமிகக்கண்ட - நனிமிக - ஒருபொருட் பன்மொழி; ஊன்றிக் கண்ட காட்சி மிகுதி குறித்தது. வேந்தரும் கொம்பனாருமாக இருவரையும் ஆர்வமிகக் கண்டாராதலின் இருசொல் புணர்த்தி ஓதினார் என்றலுமாம்.
நல்ல மங்கலங்கள் - உலகில் அழியும் தன்மையுடைய ஏனையோர்க்குக் கூறும் மங்கல வாழ்த்துக்கள் உபசாரமாத்திரையாய் நின்று ஒருகாலத்து ஒழிவன. ஆனால் இங்குப் பிள்ளையாரையும் தேவியாரையும் வாழ்த்திக் கூறிய மங்கலங்கள் அவ்வாறன்றி என்றும் அழிவுறாத நித்திய சிவமங்கலமாய் நிறைவுறுதலின் நல்ல என்று பிறிதினியைபு நீக்கிய அடை தந்து அருளினார்.

1238

3137
பத்தியிற் குயிற்றும் பைம்பொற் பவளக்காற் பந்தர் நாப்பண்
சித்திர விதானத் தின்கீழ்ச் செழந்திரு நீல நக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாத மேவுமுள் ளத்தாற் செய்ய,

1239

3138
றையொலி பொங்கி யோங்க, மங்கல வாழ்த்து மல்க,
நிறைவளைச் செங்கை பற்ற நேரிழை யவர்மு னந்தப்
பொறையணி முந்நூன் மார்பர் புகரில்வண் பொரிகை யட்டி
இறைவரை யேத்தும் வேலை யெரிவலங் கொள்ள வேண்டி,

1240

3139
ருப்புமென் முலையி னார்த மணிமலர்க் கைப்பி டித்தங்
கொருப்படு முடைய பிள்ளை யார்திரு வுள்ளந் தன்னில்
"விருப்புறு மங்கி யாவார் விடையுயர்த் தவரே" யென்று
திருப்பெரு மணத்தை மேவுஞ் சிந்தையிற் றெளிந்து செல்வார்,

1241

3140
ந்திர முறையா லுய்த்த வெரிவல மாக மாதர்
தந்திருக் கையைப் பற்றுந் தாமரைச் செங்கை யாளர்
"இந்தவில் லொழுக்கம் வந்து சூழ்ந்ததே! யிவடன் னோடும்
அந்தமில் சிவன்றாள் சேர்வ" னென்னுமா தரவு பொங்க,

1242