| |
| சேர்தல் வேண்டுமென்ற திருவுள்ளக் குறிப்பினாலே என்க; மலர்தல் - மன மகிழ்தல். |
| அலகில் மெய்ஞ்ஞானத் தெல்லை அடைவுறும் - அளவுபடாத மெய்ஞ்ஞானமாவது சிவஞானம்; அதன் எல்லையாவது அதன்மேல் விளங்கும் சிவானந்த நிறைவு. சிவனுலகம். "உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்" (1075); "அலகில் கலையின்பொருட் கெல்லையாடுங் கழலே"(1220) என்றவை காண்க. குறிப்பால் - திருவருட் குறிப்பினாலே தோன்றிய தமதுள்ளக் குறிப்புக் காரணமாக. |
| உலகின் எம்மருங்கும் நீங்க உடனணைந் தருள - தாம் ஒரு பற்றுமின்றிச் சீவன் முத்தநிலையிலிருந்தாரேனும் உலகைத் தீமை நீக்கி நன்னெறி காட்டி உய்வித்தற் பொருட்டுத் திருவருளால் வந்தாராதலின் அந்த அளவில் கொண்ட உலகத் தொடர்புகள் எல்லாமும் நீங்கிச் சிவனடியே மறவாத நிலையில் சிவனுடன் அணைய விரும்பி. கிளையும் - கூட்டமுஞ் - சூழ - நீங்க - உடனணைந்தருள வேண்டி என்று கூட்டியுரைத்தலுமாம். |
| குலமணம் புரிவித்தார் - அந்தணரது மறையொழுக்கத்தை உலகிற் காட்டும் பொருட்டு அக் குலத்துக்கேற்ற மண ஒழுக்கத்தை மேற்கொள்ளும் இசைவு வரக் கூட்டுவித்தருளிய இறைவர் என்பது; தம் செயல் என்ப தொன்றுமின்றி எல்லாம் இறைவர் செயலேயாகக் காண்பது பிள்ளையாரது நிலையாதலின் தாம் மண இசைவு கொண்டதனை இறைவர் தந்த செயலேயாகக் கொண்டனர் என்க; "அவனே தானேயாகிய வந்நெறி, ஏக னாகி யிறைபணி நிற்க"(போதம்) என்ற ஞானநூற் றுணிபின்வழிக் கண்டுகொள்க. |
| 2143 |
3142 | சிவனமர்ந் தருளுஞ் செல்வத் திருப்பெரு மணத்தை யெய்தித் தவநெறி வளர்க்க வந்தார் தலைப்படுஞ் சார்பு நோக்கிப் "பலமற வென்னை முன்னா ளாண்டவப் பண்பு கூட நவமலர்ப் பாதங் கூட்டு" மென்னுநல் லுணர்வு நண்ண, | |
| 1244 |
3143 | காதன்மெய்ப் பதிகங் "கல்லூர்ப் பெருமண" மெடுத்துக் கண்டோர் தீதுறு பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு "நாதனே! நல்லூர் மேவும் பெருமண நம்ப னே!யுன் பாதமெய்ந் நீழல் சேரும் பருவமீ" தென்று பாட, | |
| 1245 |
3144 | தேவர்க டேவர் தாமுந் திருவருள் புரிந்து "நீயும் பூவையன் னாளு மிங்குன் புண்ணிய மணத்தில் வந்தார் யாவரு மெம்பாற் சோதி யிதனுள்வந் தெய்து" மென்னு மூவுல கொளியால் விம்ம முழுச்சுடர்த் தாணு வாகி, | |
| 1246 |
3145 | கோயிலுட் படமே லோங்குங் கொள்கையாற் பெருகுஞ் சோதி வாயிலை வகுத்துக் காட்ட, மன்னுசீர்ப் புகலி மன்னர் பாயின வொளியா னீடு பரஞ்சுடர்த் தொழுது போற்றி மாயிரு ஞால முய்ய வழியினை யருளிச் செய்வார், | |
| 1247 |
3146 | "ஞானமெய்ந் நெறிதான் யார்க்கு நமச்சிவா யச்சொ லா"மென் றானசீர் நமச்சி வாயத் திருப்பதி கத்தை யங்கண் வானமு நிலனுங் கேட்க வருள்செய்"திம் மணத்தில் வந்தோர் ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக!" வென்ன, | |
| 1248 |