1534திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

3147
ருமுறைப் பிறவி வெள்ளம் வரம்புகா ணாத ழுந்தி
யுருவெனுந் துயரக் கூட்டி லுணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க மன்னுசேர தியினுட் புக்கார்.

1249

3142. (இ-ள்) சிவனமர்ந் தருளும்...எய்தி - சிவபெருமான் விரும்பி வீற்றிருந்து உயிர்கட் கருள்புரியும் செல்வ நிறைந்த திருப்பெருமணக் கோயிலினுள் சென்று சேர்ந்து; தவநெறி..நோக்கி - தவநெறியினை வளர்ப்பதற்கென்றே திருவவதரித்தவராகிய பிள்ளையார் உலகக் காட்சி நீங்கிய முத்தி நிலையிலே சார்வதற்குக் காரணமாகிய திருவருட் குறிப்பினைக் கண்டு; பவமற...கூட - பிறவியில் வாராது என்னை முன்னைநாளில் தமது திருவடியில் ஆளாகக் கொண்ட அத்தன்மைக்குப் பொருந்த; நவமலர்...நண்ண - புதிதின் அலர்ந்த தாமரைமலர் போன்ற திருவடியை அடைவிக்கும் என்னும் மெய்யுணர்வானது திருவுள்ளத்தில் பொருந்த;

1242

3143. (இ-ள்) காதல்...எடுத்து - பெருவிருப்பு மேற்கொண்ட மெய்த் திருவாக்காகிய திருப்பதிகத்தினைக் "கல்லூர்ப் பெருமணம்" என்று தொடங்கி; கண்டோர்...கொண்டு - அங்கு அத் திருமணத்தைக் கண்டவர்களது தீங்குடைய பிறவிக் கேதுவாகிய மலமாயை கன்மங்களைத் தீர்ப்பதனைச் செம்மைப் பொருளாகத் திருவுளம் பற்றி; "நாதனே..ஈது" என்று பாட - "இறைவரே! திருநல்லூரில் பொருந்திய திருப்பெருமணக் கோயிலின்கண் எழுந்தருளிய நம்பரே! உமது திருவடிகளாகிய மெய்ம்மை பொருந்திய நீழலினை அடையும் பருவம் இதுவேயாம்" என்று பாடியருள,

1243

3144. (இ-ள்) தேவர்கள்...புரிந்து - தேவர்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரும் திருவருள் செய்து; "நீயும்...எய்தும்" என்று - "நீயும் பூவைபோன்றவளாகிய உனது மனைவியும், இங்கு உனது புண்ணியத் திருமணத்தில் வந்தவர்கள் எல்லாரும் எம்மிடத்தில் இந்தச் சோதியினுள்ளதாக வந்து அடையுங்கள்" என்று கட்டனை யிட்டருளி; மூவுலகு.,..தாணுவாகி - மூன்றுலகங்களும் தம் ஒளியினாலே மேலிட்டு விளங்கும்படி முழுமையாகிய சுடர்விட்டெழும் சோதிலிங்கமாக நிமிர்ந்து எழுந்து;

1244

3145. (இ-ள்) கோயிலுட்பட...காட்ட - திருக்கோயில் தன்னகத்துட்பட மேலே விரிந்து பெருகி எழும் அந்தச் சோதியினுள்ளே ஒரு திருவாயிலினையும் வகுத்துக் காட்டியருள; மன்னுசீர்...போற்றி - நிலைபெற்ற சிறப்பினையுடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையார், பரவிய பேரொளியினாலே நீண்டு விளங்கும் பரஞ்சுடராகிய இறைவரைத் தொழுது துதித்து; மாயிரு...செய்வார் - மிகப் பெரிய உலகத்தின்கண் உள்ள ஆன்மாக்கள் உய்யும் வழியினை அருளிச்செய்வாராகி;

1245

3146. (இ-ள்) "ஞான....சொலாம்" என்று - மெய்யினையுடைய ஞானநெறி தான் எல்லாருக்கும் "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தாகிய மொழியேயாகும் என்று; ஆனசீர்..அருள் செய்து - ஆக்கம் பொருந்திய சிறப்பினையுடைய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அவ்விடத்திலே விண்ணவரும் மண்ணவரும் கேட்கும்படி அருளிச்செய்து; "இம்மணத்தில்...புகுக" என்ன - "இந்த மணத்தில் வந்தவர்கள் எல்லாரும் இழிவுபடுத்தும் பிறவி நீங்க இதனுள் புகுவீர்களாக" என்று ஆணையிட்டருள,

1246