| |
| தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம் புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே. | |
| (8) |
| நறும்பொழிற் காழியுண் ஞான சம்பந்தன் பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை யுறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க் கறும்பழி பாவ மவலமி லாரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - கண்டோர் தீதுறு பிறவிப் பாசந் தீர்த்தல் இதன் செம்பொருளாம். "நல்லூர் மேவும் நம்பானே! உனது பாத மெய்ந்நீழல் சேரும் பருவம் இது" என்ற உட்குறிப்புடன் பெருமணத்தானை உறும்பொருளால் "எமைப் போக்கு அருள்வீராக" என்று விண்ணப்பித்தது(3143). |
| பதிகப் பாட்டுக் குறிப்பு: - (1) கல்லூர்ப் பெருமணம் வேண்டாம் - கல் - அம்மி; கல்லூர் - அம்மி மிதிக்கும் சடங்கினையுடைய; பெருமணம் - உலக நிலையிற் கொண்டாடப்படும் கல்யாணம் செய்யும் இல்லற நிலை; வேண்டா - எமக்கு வேண்டுவதின்று. கழுமலம்....மெய்யாய்த்தில? - கழுமலம் (சீகாழி) முதலாகப்பெருமணம் என்னும் இப்பதி வரை வழிபட்டுப் பாடிய பதிகப்பாட்டுக்க ளுண்மையேயன்றோ? (அவற்றுள் எதனிலும் என் பொருட்டு உலகத் தொடர்பாகிய விண்ணப்பங்கள் செய்யவில்லை யன்றோ?; சொல்லூர்....தொண்டர் - தொண்டர்கள் மணம் என்று வழங்கும் உலகச் சூழலாகிய தொடர்ச்சியினுள் கப்பட மாட்டார்களே; நம்பான் - "நம்பனே"(3143); - (2) தருமண லோதம்...மணஞ் செயும் - மணலில் கடல் நீரால் அலைக்கப்பட்ட முத்துக்களையே பருமணலாகக் கொண்டு சிறுமியர்கள் சிறு விளையாட்டாகிய மணச் சடங்குகளைக் காட்டி விளையாடுதற் கிடமாகிய ; உலகினர் நிகழ்த்தி உண்மை எனக் கொண்டு அகப்படுகின்ற மணவினைகளும் இவ்வாறு விளையாட்டுக்களே யன்றிப் பிறிதன்று; மணலில், மணம் விளையாடும் சிறுமியர்க்கு வரும் இன்பத்தளவே உலகினர் மணவினை யின்பமாம்; நித்திலம் பருமணலாக வரும் பொய்த் தோற்றத்தின் அளவுமாம்; மணலே முத்தாக் கொள்வது ஏனையிடங்கள்; முத்து மணலாகக் கொள்வது பெருமணத்தின் சிறப்பு; மயக்கநிலையில் இரண்டு மொன்றே; -(3) நன்பு - நலம்; இன்புறும் - விரும்பி வீற்றிருக்கும்; இன்புறுதற்குக் காரணம் அடியவர் நலமெய்துதல்; தொண்டு செய்வாரே யாதலின் துன்புறுவாரல்லர் என்க; "இன்பமே எந்நாளும் துன்பமில்லை"(தேவா). துன்பு - பிறவித் துன்பம்; பிற்சரித விளைவுக் குறிப்பு; - (4) வல்லியம் - புலி; வேழத்துரி - போர்ப்பது என்க; கோவணம் - அணிவது என்க; நல்லியலார் - வீடு பெறும் நல்லியல்பின் பக்குவமுடைய மாந்தர்; சரிதக் குறிப்பு. வாழ்க்கை - உறைவிடம்; - (5) நாறு மணம்; வேறு - தனியாக; சிறப்பாக; - (6) சிட்டப்பட்டார்க்கு - சிட்டம் - நல்லொழுக்கம்; வீட்டுநெறி நிற்கும் தவவொழுக்கம். வேட்டுவப் பட்டம் கட்டும் சென்னியான் - "வேடுவனாகி வேண்டுருக் கொண்டு" (திருவாசகம்) என்றபடி வேடனாகிய கோலத்திற்குரிய தலைக்கோல முடையான். செங்கண் - வேடர்க்குரிய பண்பு; "செங்கண் வேடனா யென்னொடும் வந்து" (தேவா - நம்பி); "வேடர்தங் கரிய செங்கண் வில்லியார்" (741); நட்டக் கொட்டு ஆட்டு அறா - நட்டம் - கூத்து; நடம் என்பது |