[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1547

கீழ்கள்; சமணர். கையர் - கீழ்மக்கள்; சொற்சிலேடை. விஞ்சை - வித்தை; ஏனை வித்தைகள் யாவும் பயனிலவாய் முடிந்து வேண்ட என்பது குறிப்பு; - (11) சந்தை - சந்தசு என்பர். சந்தம் - வேதங்களுக்குரிய இசைப் பாகுபாடு; இத்திருப்பதிகங்களும் இறைவர் சொன்ன வேதங்களேயாம் என்று முடித்துக்காட்டியவாறு. "அருநெறிய மறைவல்ல முனி...திருநெறிய தமிழ்" என்று முதற்பதிகத்திற் றொடங்கிக் காட்டியருளியதற்கேற்ப ஈண்டுக் கடைசித் திருப்பதிகத்துள் முடித்துக் காட்டியருளினார். முன் கூறியவாறே சந்தையாற் றமிழ் என்று கூட்டியுரைத்ததும் கருதுக. திருவைந்தெழுத்தே மறைகளின் தாற்பரியமும் திருப்பதிகளிங்களின் தாற்பரியமுமாம்; பந்தபாசம் - பந்தமும் அதன் மூலமாகிய மலங்களும்; அறுத்தல் - வலியில்லாமற் செய்தல். இது பதிகப் பயனும் சைவத் திறத்தின் உறுதிப் பயனுமாம்.
வேறு
3148
சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதற்றொண்டர்
ஏர்கெழுவு சிவபாத விருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர் மற்றெனையோ ரணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழுப் பன்னிகளோ டுடன்புக்கார்.

1250

(இ-ள்) சீர்பெருகு...தொண்டர் - சிறப்புப் பெருகும் திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார் முதலாகிய திருத்தொண்டர்களும்; ஏர்கெழுவு....நம்பாண்டார் - தவவொழுக்கத்தின் பொலிவு மிகுந்த சிவபாதவிருதயரும் நம்பாண்டார் நம்பியும்; சீர் ஆர்தரு மெய்ப் பெரும்பாணர் - சிறப்பு நிறைந்த உண்மையொழுக்க முடைய திருநீலகண்டப் பெரும்பாணரும்; மற்று எனையோர் அணைந்துளோர் - மற்றும் ஏனையவர்களும் வந்து அணைந்தவர்களும்; பார் நிலவு...உடன்புக்கார் - உலகில் நிலவிய சுற்றத்தார்கள் சூழ்ந்து வரத் தத்தம் மனைவியர்களோடு உடனாகப் புகுந்தனர்.
(வி-ரை) முதற்றொண்டர் - தித்தொண்டத்தொகையிற் போற்றப்பட்ட திருத்தொண்டர்கள். இவர்களை முதலிற் கூறியது அச்சிறப்புப் பற்றி. பதினோராந் திருமுறை நூல்களைக் கோவைப்படுத்திய நம்பியாண்டார் நம்பிகள், நாயன்மார்களுள் இயலிசை வல்ல காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நயனார், சேரமான் பெருமாணாயனார் என்றிம்மூவர் பாடியருளிய நூல்களை அதனுள் முதற்கண் வைத்துக் கோவை செய்தமை இங்குக் கருதற்பாலது.
திருநாவுக்கரசு நாயனாரும், சிறுத்தொண்ட நாயனாரும், குங்குலியக்கலய நாயனாரும், இதன் முன்பே இறைவர் திருவடி சேர்ந்தருளினர் என்பது கருதப்படும்.
சிவபாதவிருதயர் - நம்பாண்டார் - மணமகனாரையும் மணமகளாரையும் விடாது பற்றும் சிறப்புரிமையும் அணுக்கராந் தன்மையும் பற்றித் தொண்டர்களை அடுத்து இவர்கள் வைக்கப்பட்டார்.
மற்று எனையோர் அணைந்துளோர் - இவர்கள் வேற்றிடங்களினின்றும் திருமணங் காணவந் தணைந்தவர்கள்.
பார் நிலவு கிளை சூழ - கிளைஞர் என்ற தொடர்பு இவ்வுலகில் இப்பிறவி நிற்குமட்டில் நிலவுவதா யொழிவது; இதனை நீத்துச் சிவனுலகம் புகுமளவில் அத்தொடர்பு நிலவுவதன்று; பன்னியர் என்ற தொடர்பும் அவ்வாறேயாம்; ஆயினும், இங்குத் திருமணச் "சிறப்பினாலே" (3147) அத்தொடர்புநிலை பற்றியேயும் மணங் காணவந்த மக்கள் சோதியினுள் புகுந்தனர் என்பது; பார் நிலவியொழியும்