1548திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

தன்மையாயினும் என்க. இந்நிலை, அச்சுற்றம் - பன்னி என்ற சார்புபற்றி அவ்வவரும் முன்செய்த வினைப்பயனாலாயது என்க. இயற்பகையார், இளையான்குடிமாறர், அமர் நீதியார், சிறுத்தொண்டர் முதலியோர்கள் மனைவி மக்களுடன் கூட இறைவருலகம் புகுந்த வரலாறுகள் இங்கு நினைவு கூர்தற்பாலன. பார் நிலவு - பார்மட்டிலளவுபடும். அன்றியும், கிளைஞர் - மனைவியர் - முதலாகிய தொடர்புடையோர் எவ்வளவு துணைப்பிரியாத அன்புடையராயினும்(இறந்து பிறக்கும் இயல்புடைய) உலக இயல் மரணத்திலும் ஒரு சேரப் பிரியாது உடன் சாதல் என்பது இல்லை. ஈண்டு மீளாத நெறியாகி நித்தியானந்த உலகிற் சேரும் பெரு நிலையில் இவர்கள் பிரியாது சேர்ந்த தன்மை இத் திருமணச் சிறப்பினாலும் பிள்ளையாரது திருவடிச் சார்பினாலும் ஆகியது என்று எடுத்துக் காட்டுவார் பார் நிலவு கிளைசூழப் பன்னியரோடு என்றார் என்றலுமாம்.
பன்னியரோடு - என்றவிடத்தும், முன் "இவள்தன்னோடும்" (3140) என்ற விடத்திற்போலச்சமணரை மறுத்துப் பெண்பிறவியின் ஏற்றங் காட்டவந்த நிலை என்று இங்கு விசேடங் காண்பாருமுண்டு; அது சாலாமை முன் உரைக்கப்பட்டது. சமணர் கொள்கைக்கும் ஈண்டுக் கூறும் கருத்துக்கும் ஒரு பொருத்தமுமின்று. "இந்தவில் லொழுக்கம் வந்து சூழ்ந்ததே" என்றதில் சூழத்தகாத - சூழலாகாத என்ற குறிப்பும், ஈண்டுப் "பார்நிலவு கிளை - பன்னியரோடு" என்றதில் சிவனுலகம் புகும் நிலையிற் பற்றத் தகாத என்ற குறிப்பும் போதருதலானும், சைவ நெறியில் ஆண் பெண் என்ற பாகுபாடு தவிர்த்து அந்தந்த வுயிர் செய்யும் கன்ம விசேடமே கருத வருதலானும் இவ்வுரைகள் எல்லாம் பொருந்தாமை யறிக.
பார் நிலவு என்றதனால் கிளை என்றும் பன்னியர் என்றும் வரும் தொடர்பு பற்றிய உணர்வு இவ்வுலகினோடு ஒழிவன என்பதாம். வினைப் பாசந் துணிவித்த உணர்வினராய்(3149) என்று மேற்கூறுதல் இவர் எல்லாருக்கும் பொருந்துவதாம் என்க. அதனை இறுதியில் வைத்துக் கூறிய கருத்துமது. அதன் மேற்(3150) பாட்டில் வருபவர்கள் உலகப் பற்றற்ற நிலையிற் கூடியவர்கள் என்பது.
மற்றனைவோர் - என்பதும் பாடம்.

1250

3149
ணிமுத்தின் சிவிகைமுத லணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்று மெடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த வுணர்வினராய்த் தொழுதுடன்புக் கொடுங்கினார்.

1251

(இ-ள்) அணிமுத்தின்...சென்றோர்கள் - அழகிய முத்துச் சிவிகை முதலாக முத்துச் சின்னங்கள் முதலியவற்றைத் தாங்கிச் சென்றவர்களும்; மணி....மடவார் - மணிமுத்து மாலைகளை உரியவாறு அலங்கரிக்கும் பணி செய்த பெண்களும்; மங்கலம்...எடுத்தார்கள் - மங்கலம் பெருகவரும் பணிகளை யெல்லாம் எடுத்தேந்தி வந்தவர்களும்; பரிசனங்கள் - மற்றும் பணி செய்பவர்களும்; வினைப் பாசம்...ஒடுங்கினார் - வினையால் வரும் பிறவிக்கேதுவாகிய பாசங்களை யெல்லாம் அறுத்த உணர்வுடையவர்களாய்த் தொழுதவாறே உடன்புகுந்து சோதிப் பொருளுள்ளே ஒடுக்கம் பெற்றனர்.
(வி-ரை) முன் பாட்டில் மணங் காணவந்த தொண்டர்களையும், மணத்தின் இன்றியமையாத மண மக்களின் பெற்றோர்களையும், கிளைஞர் - பன்னிகளையும் கூறினார்.