[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1553

திருவடி மறவாப் பான்மையோராய் முத்த நிலையில் இருந்தவர்; அப்போது அவருக்குப் போதநிலை - அஃதாவது சிவனையன்றி வேறு நிலைகளும், யானறிந்தேன் அறிகின்றேன் என்பது முதலாகிய நிலைகளும், ஏனை உலக பதார்த்தங்களும், உலகமும் போதப்படா - உணர்ச்சிக்கு வாரா; அதன்பின் வினையாலன்றித் திருவருளால் வந்தபோது மூவாண்டு வரை ஒரோர்கால் முன்னைநிலை நினைவுக்கு வந்தபோது வெருக்கொண்டாற் போலக் குறிப்பு அயலாய் அழுதருளினர். மூவாண்டில் ஞானமுண்டருளிய பின் தாம், பரமே பார்த்திருந்தபடி முன்னையிற்போலவே சீவன்முத்த நிலையிற் சரித்தனர். ஆனால் உலகரின் பொருட்டுத் திருவருளால் வந்தமையின் உலகமும் உலகர் நிலைகளும் புலப்பட்டன; ஆயினும் வாசனாமலமும் அற்ற பெருமானாதலில் அவ்வுலகத் தோற்றங்கள் பிள்ளையார்பாற் சாராது வினைக்கு முளையாகாதபடி யொழிந்தன. "ஐயனேயஞ்ச லென்றருள் செய்யெனை"; "ஈவ தொன்றெமக் கில்லையேல்" முதலிய விண்ணப்பங்க ளெல்லாம் பிள்ளையாருக்கு உலக பந்தம் விளையாது பிறர்பொருட்டே நிகழ்ந்தொழிந்தன. "உடையாய் தகுமோ விவளுண் மெலிவே", "மங்கையை வாட மயல்செய்வ தோவிவர் மாண்பே", "அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்", "எமைத்தீண் டப்பெறா திருநீல கண்டம்", "காசு நல்குவீர்", "கதவந் திருக்காப்புக் கொளும்" என்பன முதலாக வந்தனவெல்லாம் பிறர் துன்பங் கண்டிரங்கிய நிலையில் உலகின் பொருட்டு எழுந்தனவேயன்றித் தம்பொருட்டன் றாதலின் பற்றுக்களாக விளையாதொழிந்தன. இப்போது இவ்வாறு தாம் வந்தருளிய உள்ளுறை நிலைவாகியதனால், அவ்வாறு உலகமும், அதன்பொருட்டுத் தாமும் இறைவரும் பிரித்து அறியவரும் நிலையும் இன்றாதல் குறிக்கப் போதநிலை முடிந்தவழி என்றார். போதம் - சிவபோதம் என்பாருமுண்டு.
புக்கு ஒன்றாதல் - முன்னைய திருவடி மறவாத ஒன்றுபட்ட நிலையடைதல்; இடையில் உலகர் பொருட்ப பூதமுதல் நாதம் வரையில் தோன்றிய உலகத் தோற்றமாகிய பிரித்தறியு முணர்வு தோன்றாதொழிய முன்போலவே உள்ள நிலையடைந்தனர் என்க. இது பிள்ளையார் சோதியிற் புகுந்து பெற்ற நிலைக்கும், ஏனையோர் பெற்ற நிலைக்கும் உள்ள வேறுபாடு. எல்லாரும் புக்கதற்பின் தாமும் தேவியாரும் புக்கது பிள்ளையாரது திருவருளின் பெருமையினை மேலும் விளக்குவதாகும்.
காதலி - இவ்வம்மையார் பெயர் சொக்கியார் என்பது கல்வெட்டுக்களிற் காண்பதென்றும் கூறுவர்.
வலஞ் செய்தருளி - என்பதும் பாடம்.

1253

3152
பிள்ளையா ரெழுந்தருளிப் புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளுநீ டியசோதிக் குறிநிலையவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழைய மணக்கோயி றோன்றுதலுந்
தெள்ளுநீ ருலகத்துப் பெற்றிலார் தெருமந்தார்.

1254

(இ-ள்) பிள்ளையார்....பின் - பிள்ளையார் சென்றருளி உட்புகுந் துடனாகிய பின்னர்; பெருங்கூத்தர்....கரப்ப - பேரானந்தக் கூத்தராகிய இறைவர் இவ்வாறு மணத்தில் வந்தோரையும் பிள்ளையாரையும் முத்தியில் உடனாகக்கொள்ளும் அளவும் நீடியிருந்த சோதிக் குறிநிலையும், அதன் உட்புகக் காட்டிய அநத் வழியாகிய வாயிலினையும் மறையும்படி செய்ய; வள்ளலார்....தோன்றுதலும் - சிவலோகத் தியாகேசரது பழய பெருமணக் கோயில் தோற்றப்படுதலும்; தெள்ளுநீர்...தெருமந்தார் -