| |
| கணம், உயிர் இலக்கணம், அளவை நூல்கள், முத்தி யிலக்கணம் முதலிய முடிபுகளைப் பற்றியே ஆராயத் தக்கன (2823 - 2824). |
| (154) எல்லாச் சமய முடிபுகளும் சைவ சமய முடிபுகளுள் அடங்குவன; சைவமல்லாது மற்றொன்றுமில்லை. நிற்பனவும் சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை அருட் குருவின் கருணைநோக்க மணையும்போது உயிர்களுக்கு விளங்கும் (2824). |
| (155) திருநாவுக்கரசுகளைத் தம்முடன் வருதலைத் தவிர்த்துத் திருமறைக்காட்டில் விட்டுப் பிரிந்து பிள்ளையார், தாம் சென்ற கருத்து முற்றிப் பாண்டி நாட்டினின்று மீளச் சோணாட்டில் எழுந்தருளியபோது, "அரசுகள் எந்நகரி லெழுந்தருளிற்" றென்று வினவித், திருப்பூந்துருத்தியில் இருந்தமை கேட்டு அவரைச்சென்று கண்டு தலைக்கூடுதற்கு அங்குச் சென்றருளினர்; இஃது அவர்பாற் கொண்ட பேரன்பின் றிறம். "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல், அனைத்தே புலவர் தொழில்" (2825). |
| (156) பிள்ளையாரது வரவு கேட்டு "நந்தமையா ளுடையவரை நாமெதிர்சென்றிறைஞ்சுவது, முந்தைவினைப் பயன்" என்று கொண்டு இறைவரை வணங்கி நகரின் புறத்துப் போய் அடியார் கூட்டத்தின் நெருக்கினிடைக் காணாமே நிலத்துப் பணிந்து சென்று அவரது சிவிகையினைத் தாங்குவாருடன் தாங்கிச் சிந்தை களிப்புற வந்தனர் அரசுகள். இது பிள்ளையாரிடம் அப்பர் கொண்ட பேரன்புப் பெருக்கின் றிறம் (2831). |
| (157) அப்பர் சிவிகை தாங்கிவரச், சிவிகைமே லிருந்த பிள்ளையாரது புந்தியினின்று வேறொன்று நிகழ்ந்திட, "அப்பர் இப்பொழுது எங்குற்றார்" என வினவியருளினர். இவ்வாறே அப்பர்பெருமான், திங்களூரில் அப்பூதியாரது திருமனையில் அமுது செய எழுந்தருளியபோது, திருவுள்ளத்திற் றடுமாற்றமுற்று, "மூத்த திருநாவுக்கரசு எங்கே?" என்று வினவிக் கேட்டறிந்தனர். இவை திருவருள் நிறைவிலே எஞ்ஞான்றும் குடியா வீற்றிருக்கும் நல்லறிவாளர்களாகிய சிவஞானிகளுக்குத் திருவருளால் நிகழ்வன; ஏனை எம்போன்ற புல்லறிவினர்க்கு இவற்றின் தன்மைகள் விளங்கா (2833). |
| (158) அரசுகள் "ஒப்பரிய தவஞ்செய்தே னாதலினா லும்மடிகள், இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்" என்னக் கேட்டு அஞ்சித் சிவிகையினின்றும் அவனியின்மேல் இழிந்து இறைஞ்சினர். இந்நிலைகள் பெரியோர்பாலே காணப்படுவன; உலகம் கண்டு பின்பற்றி ஒழுகத் தக்கன (2833 - 2834). |
| (159) பாண்டி நாட்டு நிகழ்ச்சிகளைப் பிள்ளையார் அரசுகளுக்குச் சொல்லக்கேட்டு அரசுகள் உவந்தனர்; தொண்டை நாட்டு நிகழ்ச்சிகளை அரசுகள் பிள்ளையாருக்குக் கூறப் பிள்ளையார் கேட் டுவந்தனர். அடியார்கள் தலைக்கூடும்போது இறைவர் அருளும் அடியார் பெருமையுமே யன்றிப் பிற பேச்சுக்கள் நிகழா (2839 - 2843) |
| (160) மங்கையர்க்கரசியார் - குலச்சிறையார் பெருமைகளைப் பிள்ளையார்பாற் கேட்டு அரசுகள் பாண்டி நாடு சென்றனர்; திருஏகாம்பரம் பணியும் சிறப்பினை அரசுகள்பாற் கேட்டுப் பிள்ளையார் தொண்டைநாடு சென்றனர். இவ்வாறு அடியார்களை வழிப்படுத்தும் நிலை ஆசாரியர் பெருமக்கள் விளக்கிய உண்மையாம் (2841 - 2843). |
| (161) பாண்டி நாட்டினின்றும் தோணிபுரத்தின் மீண்டருளியவுடன் நேரே திருத்தோணி சென்று, அம்மையப்பரை வணங்கி, "வெற்றியாக மீனவ னவையெதிர் நதிமிசை வருகரனே" என்று, எல்லாம் சிவன் செயலேயாக நிகழ்ந்தமை பாராட்டித் துதித்தருளினர் பிள்ளையார்; இவ்வாறு காணுதல் தற்போதமில்லாத சிவஞானிகளின் தன்மை (2852). |
| (162) திருவண்ணாமலையினை அமரர் பெருமானது வடிவுபோலவே தோன்றக் கண்டு வணங்குதல் பெரியோர்க் கியல்பு (2868). |