[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்859

 
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்.
பைய வேசென்று பாண்டியற் காகவே.
 

(1)

 
அப்ப னாலவா யாதி யருளினால்
வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்த னுரைபத்துஞ்
செப்ப வல்லவர் தீ திலாச் செல்வரே.
 

(11)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்காக" எனப் பணித்தது. (2602).
  பதிகப் பாட்டக் குறிப்பு :- குறிப்பு - பாட்டுத்தோறும், "அஞ்சலென் றருள் செய்யெனை" "அமணர் கொளுவும் சுடர் - பாண்டியற்கு ஆகவே" என்றருளுதல் காண்க; கொளுவும் சுடர் என்றதனால் அமணர் பொதிதழல் கையினிற் கொண்டு கொளுவினர் என்பதும், அமணர் செய்ல பாண்டியற்காகவே என்றமையால் இத்தீமையரசன்முறை வழுவியதனால் விளைந்தமையாலே அரசன்மேற் சார்தல் நீதி என்று துணிந்தனர் என்பதும், பையவே என்றதனால் தீயுருவமாக அன்றி வெப்பு நோயின் உருவில் மெல்லப் பற்றுக என்று பணித்தனர் என்பதும். ஆகவே என்றமையால் இது அருளிப்பாடு என்பதும், கங்குலாரமண் கைய ரிடும்கனல்(7) என்றதனால் அமணர் இரவிற் றீக்கொளுவினர் என்பதும், "அஞ்சலென் றருள் செய்எனை" என்றதனால் அடியார்க்கு ஏதம் வாராமற் காத்தற் பொருட்டுப் பாடியருளினர் என்பதும் முதலிய வரலாற்றுப் பகுதிகள் ஆதரவு பெறப் போந்தவாறு கண்டுகொள்க: -(1) செய்யனே! - எரிபோல் மேனியன் ஆதலில் எரியினின்று காக்க வல்லவன் என்றதும், ஐயன் - முதல்வனாதலிற் காக்குமிமையுடையவன் என்றதும் குறிப்பு. பையவே சென்று - அருட்குறிப்பு: தீயின் உருவாயன்றி வெப்பு நோயின் உருவுடன் மெல்லப் போய்ப் பையச் செல்க; சுரமும் வேகமாய்ச் சென்று தாக்கினால் கெடுதி நேருமாதலின் கேடு வராதபடி மெல்லச் செல்க என்றது; "பக்கமே சென்று" (3) "பங்கமில் தென்னன்"(7) என்பவையும் இக்குறிப்பு; ஆகவே - ஆக - ஆசி மொழி; "அலமந்த போதாக அஞ்சேல்" (தேவா). ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம்; பையவே சென்று எனப் பணித்தமைபற்றி மேல் (2603)-ல் வருவதும் ஆண்டு உரைப்பவையும் பார்க்க; -(2) சித்தனே - எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடற் குறிப்பு;சித்தராகிய தன்மையால் அவரே அமணர் கொளுவிய தீயினை வெப்பு நோயாக மாற்றவும், ஈண்டு நின்று ஆண்டுச் செலுத்தவும், உடலிற் புகுத்தவும், பிறவும் வல்லவர் என்பது குறிப்பு; அஞ்சல் - அச்சம்; அடியார் பொருட்டு எழுந்ததாதலின் "அஞ்சுவதி யாதொன்று மில்லை யஞ்ச வருவது மில்லை" என்ற அடியாரின் வீரத்தன்மையுடன் முரணாமை யறிக; "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில்"(குறள்); "வாளுலா மெரியு மஞ்சேன்...ஆளலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே" என்பன வாதி கருத்துக்களும் காண்க; பத்திமன் - பத்தி சேரும் மன்னவன் என்ற குறிப்பு; - (3) தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச் சொக்கனே - அதுபோல் சமணர் வஞ்சனைக் கொடுமையினையும் தகர்க்கவல்லவர் என்பது குறிப்பு; "நண்ணலார் புர மூன்றெரி"(5); "செங்கண் வெள்விடை யாய்;(7); "தூர்த்தன் வீரம் தொலைத்தருள்(8) என்பனவு மிக்குறிப்பு; எக்கர் - கொடியர்; பக்கமே - அவர் பக்கமேயாக; "தீத்திறத்தார் பக்கமே சேர்க" (சிலப்); நேராக எதிர் செல்லாது ஒரு புறமாய் ஒதுங்கி என்ற குறிப்புமாம்; -(4) அட்ட