802திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 (போதம் - 8சூ.) உண்மைகளை இங்குக் கருதிக் காண்க்; பிள்ளையார் எழுந்தருளும் இந்நிலைமையினை; "வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த, சம்பந்த மாழனியென் றம்பிரான் - அம்புவியோர், போற்றுந் திருவடி...வானோன் பவனிவரக் கண்டு வல்வினையேன், ஏனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - தானென்னைப், பார்த்தான் பழயவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லா, நீத்தா னினைவுவே றாக்கினான்-ஏத்தரிய, தொண்ணூற் றறுவர்பயி றொக்கிற் றுவக்கறுத்தான், கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும், வேடமும் பூசையுமே மெய்யென்றான், மாடையும் வாழ்க்கை மனையுமே-நாடறிய, வஞ்செழுத்தி, னுள்ளீடறிவித்தா னஞ்செழுத்தை, நெஞ்சழுத்தி நேய மயலாக்கி...நிறைமேவி, வாழ்பவர்போன் மண்ணுடம்பில் மன்னுமுரோ மம்பறித்துத், தாழ்வுநினை யாதுதுகி றானகற்றி...பாழ்விக்கு, மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும், வஞ்சமணன் பாழி மருவாதே -செஞ்சொல்புனை, யாதிமறை யோதி யதன்பயனொன் றும்மறியா, வேதியர்சொன் மெய்யென்று மேவாதே-ஆதியின்மே, லுற்ற திருநீறுஞ் சிவாலயமு முள்ளத்துச் செற்ற புலயர்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர், வேடமுடன் பூசையருன் மெய்ஞ்ஞான மில்லாத, மூடருடன் கூடி முயங்காதே-நீட, வழித்துப் பிறப்ப தறியா தானைப், பழித்துத் திரிபவரைப் பாராதே - விழித்தருளைத், தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவன்...." என்று நெஞ்சுவிடு தூதினுள் உமாபதி சிவாசாரியர் அருளிச் செய்த கருத்துக்களின்கண்கொண்டு கும்பிட இதன் உள்ளுறையும் உண்மைத்திறமும் தெற்றெனவிளங்கும்.
 2549. (வி-ரை) துன்னுமுழு உடல்துகள் - முழுஉடலும் துன்னும் துகள் என். இங்குத் துகள் என்றது அழுக்கு. இது உடல் கழுவாமையானும், "வேர்வந்துற மாசூர்தர வெயினின்றழலு"தல், அடுபாறை கிடத்தல், சுடுபாறை கிடத்தல், பல் துலக்காமை முதலிய சமணரது சமய வழக்கங்களானமாவது; "கழுவா வுடலம்" (11 - திருமுறை - ஆளு - அந் - 28)
 சூழும் உணர்வினில் துகள்-சூழ்தல் - வஞ்சகச் சூழ்ச்சி புரிதல். சூழும் உணர்வு - வஞ்சனைகளை எண்ணும் அறிவு.
 அல்நெறியிற் செறிந்து - அல்நெறியாவது நெறியல்லாத அவநெறிதன்னைத் தவ நெறியென்று கொண்டு பிடித்து ஒழுகுதலால்; செறிந்து அடைந்த - செறிதலால் போந்த; அல்நெறியில் செறிதல் - அவநெறியே கடைப்பிடித்து விடாது பற்றிப் பரப்புதல்; அல் - இருள் என்று கொண்டு, ஒளிக்குமாறாகிய இருள் நெறி என்றலும் குறிப்பு.
 அமண்மாசு கழுவுதற்குக்--கங்கை அணைந்ததெனும் - மாசு கழுவ நீர் வேண்டுமாதலின், இங்கு அமண் சமயப் பரப்பை மாசு என்றுருவகித்ததற் கேற்ப அதனைப் போக்கும் பிள்ளையாரது வருகை எழுச்சியினைக் தங்கை என்றுருவகித்தார்; மிகப் பெரிய மாசு கழுவ மிகப்பெரிய நீர் வேண்டப்படும் என்ற குறிப்புமாம்.
 வெண்மையினால் தூய்மையினால் கங்கை யணைந்தது எனும் - பிள்ளையாரது வருகை எழுச்சிக்கும் கங்கைக்கும் பொதுத்தன்மை இவை யிரண்டினும் உள்ள வெண்மையும் தூய்மையுமாம்; வெண்மை திருநீற்றி னொளியாலும், தூய்மை - அகத்தூய்மை-திருவைந்தெழுத்தாலும் ஆம்; "மாசிலாத மணிதிகழ் மேணிமேற் பூசுநீறு போலுள்ளும் புனிதர்கள்" (141).
 முழுவுடற்றுகளும் உணர்வினிற்றுகளும் - "வடிவுபோல் மனத்து மாசு துன்னிய வமணர்" (2660) என்பது போல உண்மாசும் புறமாசும் குறித்தலால் அவற்றை முறையே புறந்தூய்தாக்கும் வெண்மையாலும், அகந்தூய்தாக்கும் தூய்மையினாலும்