| நிறைந்த பொருள் எழுந்து போந்து வந்தது என்றதாம். "உண்மாசு கழுவுவது நீறென்றே" (திருவினை - புரா - விருத் - பட). |
| வெண்மையினால் - தூய்மையினால் - கங்கை, அணைந்தது - கங்கை வெண்ணிற முடையது என்பது "திங்களி னூறலொத்த, தாடிய நீறது கங்கையுற் தெண்ணீர் யமுனையுமே, கூடிய கோப்பொத்த தாலுமை பாகமெங் கொற்றவற்கே" (பொன் - அந் - 90) என்ற கழற்றிற்றறிவார் நாயனார் திருவாக்கானுமறிக" கங்கையின் தூய்மையாவது எத்துணை நாட்கள் வைத்திருப்பினும் தனது தன்மை கெடாது காட்டும் நிலையானும், தன்னுட் பெய்த பொருள்களையும் மூழ்கிய உயிர்களையும் தூய்மைப்படுத்தும் தன்மையாலும் அறியப்படும்; இதன் நீரினைப் பரிட்சித்தறிந்த மேற்றிசைப் பௌதிகநூல் விஞ்ஞானிகள் இந்நீரிலினுள் ஒருவகை உயிர்ச்சத்து இருத்தலே அது தெடாதிருத்தற்குக் காரணமாமென்று ஆராய்ந்தறிகின்றனர். |
| மன்னி ஒளிர் வெண்மை - திருநீற்றின் ஒளியாதலின் நிலைபெற்ற விளக்கமுடைத்தென்றார்;மன்னிஒளிர் என்பதனைத் தூய்மையுடனும் கூட்டுக. |
| கன்னிநாட்டிடைக் கங்கை யணைதற்கியை பென்னையோ! எனின் மாசுகழுவுதற்குப் போந்த தென்பது குறித்தார். இவ்வாறு கங்கை முதலிய பெருந்தீர்த்தங்கள் ஒவ்வோரிடங்களில் ஒவ்வொரு நிமித்தம் பற்றி ஓரோர் காலங்களிற் போதுவதுன்டென்பது நூல் வழக்குக்களானும், அனுபவத்தாலும் அறியப்பட்டவுண்மை; "பூ மருவுங் கங்கைமுதற் புனிதமாம் பெருந்தீர்த்தம், மாமகந்தா னாடுதற்கு வந்துவழி படுங்கோயில்"(2307) என்றும், "தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க், கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே" (தேவா - தாண்) என்றும் வரும் திருவாக்குக்களும், தில்லைப் பரமானந்த கூபத்தினுள் ஐப்பசி முன்பக்க நவமியில் கங்கை வருவதென்றும் அந்நாளில் எடுத்து வைத்த அத்தீர்த்த நீர் ஓராண்டளவு கெடாதிருக்கு மென்றும் உள்ள வழக்கும், திருக்குருகாவூரில் பாற்கிணறு என்னும் தீர்த்தத்தில் தை அமாவாசையில் கங்கை அணைவதென்னும் வழக்கும் அன்று அந்நீர் பால் நிறமாக ஆகும் அற்புதமும் முதலியவை இங்கு வைத்துக் கருதற்பாலன. |
| வழுதியர் - என்ற பெயராற் குறித்தது அஞ்ஞன்று வழுவியதனால் தீமை பெற்ற அரசன் மாசு கழுவித் தூயனாகவுள்ள குறிப்புப் பெற வைத்த சொன்னயம்; |
| 651 |
| 2550. (வி-ரை) தமிழ்நாடு பழி நாடும்படி - தமிழ்நாடு தன் பெயருக்கேற்ப உய்தி தரும் தமிழினை நாடாது பழிபெறும் வினையை நாடும்படியாக என்றது குறிப்பு; தமிழ்நாடும் - என்று உயர்வுசிறப்பு உம்மை தந்து பாடங்கொள்வாரு முண்டு; |
| மானமிலா அமணென்னும் வல்லிருள் - மானம் - "எஞ்ஞான்றும் தந்நிலையிற் றாழாமையும் தெய்வத்தாற் றாழ்வு வந்துழி யுயிர்வாழாமையுமாம்" என்பர் ஆகிரியர் பரிமேலழகர்; "பண்ணிய வஞ்சனைத்தவ" முடையாராதலானும், அரசுகளது சரிதம், பிள்ளயாரது சரிதம் முதலிய வரலாறுகளால் அறியப்படுமாறு அரசன்பால் வஞ்சனை செய்து சித்திரித்துப் பொய் முதலியவை சூழ்தலானும், தம் நிலையாகிய கொல்லாமையை விடுத்து கொலை முதலிய மறங்களைச் செய்யத் துணியும் வரலாறுகளாலும், பிறவாற்றாலும் இவ்வமணர்கள் மானமிலார் என்று கூறப்பட்டனர். |
| வல்லிருள் போய் மாய்வதனுக்கு - மாயை சாலவல்லவர்களாதலின்வல்லிருள் என்றார். |