| பரசமய கோளரி வந்தான் - இனி இந்நாட்டிற் பிள்ளையார் திருவருள் வழிச் செய்தருளும் நிகழ்வு பற்றி இத்தன்மையால் எடுத்துக் கூறி ஊதின; |
| புரசை - யானைக் கழுத்துக் கயிறு; வயம் - வெற்றி; |
| கடம் - மதம்; மதமுடைமை யானையின் சிறப்பு; |
| 653 |
| 2552. (வி-ரை) இப்பரிசு - முன் ஐந்து பாட்டுக்களிலும் கூறிய தன்மை பொருந்த; இப்பரிசு - அணையும் பெருமான் - எழுந்தருளும்பொழுது என்க. |
| எழுந்தருளும் பொழுது - அவர் என்ற எழுவாய் வருவித்துக் கொள்க; அணையும் - அணைகின்ற என எச்சமாக உரைக்க. |
| ஒப்பில்...ஓசை - காளம் - எக்காளம் என்பர்; இதுமிக உரத்த ஓசையுடன் பிள்ளையாரது திருநாமத்தை எடுத்துக்கூறி "இவர் உலகுய்ய வந்தார்" என்ற பொருள்பட இசைப்பது; நெடுந்தூரத்துள்ளோரும் செவிப்புலப்படக் கேட்க உள்ளது; உருவத்தானும் பெரிது; ஆதலின் இதனை வேறு பிரித்துத் தனிப்பெருங் காளம் என்ற சிறப்படைமொழி தந்தோதினர்; "முன் தனிக்காளம் வைய மேழுடன் மறைகளு நிறைதவத் தோரு, முய்ய ஞானசம்பந்தன் வந்தான்" (2119) என்றதற் கேற்ப ஈண்டும் உலகுய்ய ஒலித்து எழும் ஓசை என்றார்; உலகுய்ய ஓசை எழுதலாவது அதனைக்கேட்டு மக்கள் வந்தணைந்து உய்தி பெறுதல். |
| செவிநிறை அமுதுஎன - பயன்பற்றி வந்த உவமை; |
| தேக்குதல் - நிறைதல்; ஓசை - தேக்க - என்க; |
| அப்பொழுது - அப்பொழுதே ஏகாரம் தொக்கது; |
| தலத்தின் மேற் பணிந்தே - கண்ணாற் காணாராயினும் ஓசை கேட்ட பொழுதே நினைவு பிள்ளையார்பாலும் திருக்கூட்டத்தின் பாலும் சென்று சேர கேக் கண்ணாற் கண்டு நிலத்தின் வீழ்ந்து வணங்கினார். "நெஞ்சினி னிறைந்த வார்வமுன் செல்லக் கண்டு"(2553) என்பது காண்க; கேட்ட பொழுதே அன்பு பெருகும் நிகழ்ச்சியுண்டாதல் தலையன்பின்றிறம். தூரத்தே கண்டபோது வணங்குதல் மேற்பாட்டிற் கூறுவார்; "வேற்றவே யடியா ரடிமிசை வீழும் விருப்பினன்"(தேவா) என்று இவரது விருப்பமாகிய திருவுள்ளநிலைபற்றிப் பிள்ளையார் திருவாக்காற் பாராட்டப்பட்டதும், இவர் தம் புராணத் துரைத்தனவும் பார்க்க. |
| அறிந்து அப்பொழுதே பணிந்து என்க. |
| இப்பரிசு - தூரியங்கள் கிளராமே மறைகள் எடுப்பவும்; தென்றல் எதிர்கொண்டு சேவிப்பவும்(2547); அமண் பாவச்சேனை இரிந்தோட மண்ணும் விண்ணும் செய்த புண்ணியப் படை எழுச்சி போலப் பொலியவும்(2548); அமண் மாசு கழுவக் கங்கை அணைந்ததெனும் கவின் காட்டவும்(2549); அமண வல்லிருள் போய்மாய்வதற்கு அண்டமெலாம் பரந்த ஞானமணி விளக்கு எழுந்து வருவது எனும் நலம் படைப்பவும் (2550); சைவம் ஓங்கப் பரசமய கோளரிவந்தான் என்று சின்னமெல்லாம் பணிமாறவும்(2551); ஆக இப்பரிசு என்று இவ்வாறு பாட்டுக்களைத் தொடர்புபடுத்திக் கொள்க. இவ்வாறன்றிச் சேவிப்ப அணைகின்றார்; பொலிவெய்த அணைகின்றார்; கவின்காட்ட அணைகின்றார்; நலம்படைப்ப அணைகின்றார் என்று தனித்தனி முடித்தலும், சேவிப்ப-எய்த-காட்ட-படைப்ப-பணிமாறஅணைகின்றார் என்று முன் பாட்டுடன் கூட்டி முடித்தமாம். |
| அணையும் - அணைகின்றார் என முன் நிகழ்காலத்தாற் கூறினார்; பிள்ளையாரது அணைதலாகிய செயலின் பயன் அன்று மட்டுமன்றி முக்காலமுந் தோன்று மியற்கை யுடையதாதலின் மீண்டும் நிகழ்காலத்துப் பொருணிலைமையுடைய செய்யு மென்னும் |