[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்807

 தலைவர் என்ற தன்மையாற் கூறினார். இது பின்னர்க் காட்டுதும்; (2555 பார்க்க.) ஆசிரியர் பெருமானும் மந்திரியாராதல் கருதுக.
 பாங்குற - தமிழ்நாடு பாங்கு பெறும் பொருட்டு; பாங்குறப் பணிந்தார் என்று கூட்டுக.
 முன் - திருக் கூட்டத்தின் முன் அணிகள் சேர்வதற்கும் முன்பு.
 

655

2554
நிலமிசைப் பணிந்த குலச்சிறை யாரை
   நீடிய பெருந்தவத் தொண்டர்
பலருமுன் னணைந்து வணங்கிமற் றவர்தாம்
   படியினின் றெழாவகை கண்டு,
மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி
   வைதிக சேகரர் பாதங்
குலவியங் க்ணைந்தார் தென்னவ னமைச்சர்
   குலச்சிறை யாரெனக் கூற,
 

656

2555
சிரபுரச் செல்வ ரவருரை கேட்டுத்
   திருமுகத் தாமரை மலர்ந்து
விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து
   விரைந்துசென் றவர்தமை யணைந்து
கரகம லங்கள் பற்றியே யெடுப்பக்,
   கைதொழு தவருமுன் னிற்ப,
வரமிகு தவத்தா லவரையே நோக்கி
   வள்ளலார் மமுரவாக் களிப்பார்,
 

657

2556
"செம்பியர் பெருமான் றிருமக ளார்க்குந்
   திருந்திய சிந்தையீ ருமக்கும்
நம்பெரு மான்றன் றிருவருள் பெருகு
   நன்மைதான் வாலிதே; " யென்ன
வம்பல ரலங்கன் மந்திரி யாரு
   மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத்
   தன்மையா நிலையுரைக் கின்றார்,
 

658

2557
"சென்றகா லத்தின் பழுதிலாத் திறமு
   மினியெதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்ற பேறிதனா
   லெற்றைக்குந் திருவரு ளுடையேம்;
நன்றியி னெறியி லழுந்திய நாடு
   நற்றமிழ் வேந்தனு முய்ந்து
வென்றிகொ டிருநீற் றொளியினில் விளங்கு
   மேன்மையும் படைத்தன" மென்பார்;
 

659