2558 | "இங்கெழுந் தருளும் பெருமைகேட் டருளி யெய்துதற் கரியபே றெய்தி மங்கையர்க் கரசி யாரு'நம் முடைய வாழ்வெழுந் தருளிய' தென்றே 'யங்குநீ ரெதிர்சென் றடிபணிவீ 'ரென் றருள் செய்தா" ரெனத்தொழு தார்வம் பொங்கிய களிப்பான் மீளவும் பணிந்து போற்றினார் புரவல னமைச்சர். | |
| 660 |
| 2554. (இ-ள்) நிலமிசை...வணங்கி - நிலத்தின் மேல் வீழ்ந்து பணிந்த வண்ணமேயிருந்த குலச்சிறையாரை நீடும் பெரிய தவத்தினையுடைய தொண்டர்கள் பலரும் முன்பு வந்து அணைந்து வணங்கி; மற்று அவர் தாம்...கண்டு; மலர்மிசை...கலவி - பிரமதேவர் வழிபட்ட சீகாழியில் வந்த வைதிகத் தலைவராகிய பிள்ளையாரது பாதங்களை அடைந்து வணங்கி; "அங்கு...குலச்சிறையார்" எனக் கூற - "அங்குப் பாண்டியனது அமைச்சனாராகிய குலச்சிறையார் அணைந்துள்ளார்" என்று சொல்ல, |
| 656 |
| 2555. (இ-ள்) சிரபுரச் செல்வர்...அணைந்து - சீகாழிச் செல்வராகிய பிள்ளையார் அவர்களது சொற்களைக் கேட்டுத், திருமுகமாகிய தாமரை மலர்ந்து, பொருந்திய ஒளியினையுடைய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி விரைவுடன் சென்று அவரை அணைந்து; கரகமலங்கள்...எடுப்ப - கைகளாகிய தாமரைகளாற் பற்றியே மேல் எடுப்ப; அவரும் கைதொழுது முன்நிற்ப - அக் குலச்சிறையாரும் கைதொழுது திரு முன்பு நிற்க; வரமிகு...அளிப்பார் - வரம்மிகும் செவ்வியினின்ற அவரது தவங் காரணமாக அவரையே நோக்கி வள்ளலாராகிய பிள்ளையார் இனிய திருவாக்கினை அளிப்பாராகி, |
| 657 |
| 2556. (இ-ள்) "செம்பியர் பெருமான்...வாலிதே" என்ன - சோழ மன்னரகு திருமகளாராகிய மங்கையர்க்கரசி யம்மையாருக்கும் திருந்திய சிந்தையினையுடைய உமக்கும் நமது சிவபெருமானுடைய திருவருள் பெருகும் நன்மைதான் சிறந்துள்ளதே" என்று சொல்ல; வம்பலர்...வணங்கி - மணமுடைய மாலையினை அணிந்த மந்திரியாரும் நிலமுற வணங்கி நின்று; தம்பெரும்...உரைக்கின்றார் - தமது பெருந்தவத்தின் பயனே போன்ற பிள்ளையாருக்கு நிகழும் தன்மையாகிய நிலையினை எடுத்துச் சொல்கின்றாராகி, |
| 658 |
| 2557. (இ-ள்) சென்ற காலத்தின்...திருவருளுடையேம் - சென்ற காலத்திலே பழுதின்றி நின்ற திறமும், இனி எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும், இன்று தேவரீர் எழுந்தருளப்பெற்ற பெரும் பேற்றினால் விளங்கும்; இதனால் முக்காலத்திலும் திருவருளுடையோம்; நன்றியில்...படைத்தனம் என்பார் - நன்றியில்லாத (அமண்) நெறியிலே அழுந்திய இந்நாடும் நற்றமிழ் அரசனும் உய்திபெற்று வெற்றி கொள்ளும் திருநீற்றின் ஒளியினில் விளங்கும் மேன்மையினையும் பெற்றோம் என்பாராகி, |
| 659 |
| 2558. (இ-ள்) "இங்கெழுந்தருளும்...எழுந்தருளியது" எனத்தொழுது - இங்குத் தேவரீர் எழுந்தருளும் பெருமையினைக் கேட்டருளியவுடனே மங்கையர்க்கரசியம்மையாரும் 'நம்முடைய வாழ்வு எழுந்தருளி வருகின்றது' என்றுகூறி, 'அவ் |