810திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 பற்றியே என்ப; "இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந் திருக்கையா லெடுத்தார்"(2569); "இருவரையுந் திருக்கையா லெடுத்தருளி"(2629) என்று பின்னர் வருவனவும் காண்க; குலச்சிறையாரது கரகமலங்களைப்பற்றி என்று இரட்டுற மொழிந்து கொள்ளவும் நின்றது;
 எடுப்ப - "எழுக" என்று திருவாக்கினாலருளாது கைகளால் எடுத்தல் "அவர் தாம் படியினின் றெழாவகை கண்டு" தொண்டர்கள் அறிவித்தபடி தாமும் கண்டமையானும், எடுத்தாலன்றி எழார் என்று கண்டருளினமையானுமாம்; இது மந்திரியாரது திருத்தொண்டினது உறைப்பும், மந்திரத் தொழில் வன்னையுமாம்; என்னை? 'எழுக' என்ற சொல்லின் அருளளவினன்றிச் செயலினானும் மேல் எடுக்கப்பெறும் அருளைப் பெறும் துணை என்க. எங்கள் நாடு கீழே கிடக்கின்றது; அதனை மேல் எடுத்தருளல் வேண்டுமென்று வாக்கினாற் கூறாது தாம் வணங்கிச் செயலால் விண்ணப்பித்தனர் அமைச்சர் பெருமான்; அதற்கு அவ்வாறேயாகுக என்று பிள்ளையார் தமது வாக்கினாற் கூறாது கைகளால் எடுத்த செயலால் அருள் புரிந்தனர்; எனவே பாண்டிநாட்டினை ஈண்டு வினைப்பரசமயக் குழிநின்றும் மேல் எடுக்கும் அருட்செயல் அதன் மந்திரியாரை எடுத்த செயலானே ஈண்டே நிகழ்ந்துவிட்டதென்க; பின்னர் நிகழ்பவை எல்லாம் இதன் தொடர்ச்சியாகிய சடங்குகளே என்பதாம்; எடுப்ப என்ப து "என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத்து" (சித்தி - சுபக் - பாயி 2) என்புழிப்போலப் பரசமயத் தீமை காத்து எடுத்த குறிப்புருவகப் பொருளும்பட நின்றது.
 கைதொழுது அவரும் முன் நிற்ப - பிள்ளையார் கரகமலங்கள் பற்றி எடுப்ப எழுந்து அவர் திருமுன்பு தொழுத படியே நின்றனர். அவரது அருட் செயவினைப்பெற்ற வண்ணமே அருட்டிருவாக்கினையும் பெறுதலை வேண்டி என்க; அக்கருத்தினை அறிந்த வள்ளலாரும் அவ்வாறே தாம் முற்பட்டு மதுர வாக்களித்தல் மேற்கூறப் படுதல் காண்க.
 வரமிகு தவத்தால் - வாக்களிப்பார் - வரம் பெறுதற்கு உரியதாய் மிகுந்து பக்குவ காலம் வந்த தவம் காரணமாக - வரைம் தரும் வாக்களிக்கப் பெற்றார் என்க. "தமிழ் நாட்டுத் தரைசெய் தவப்பயன் விளங்க"(2551) என்றதும், மேல் "தம் பெருந்தவத்தின் பயனனையார்க்கு"(2570) என்பனவும் கருதுக; வரமிகு தவமாவது வரம் பெறுதற் கணித்தாக மிகுதி பெற்ற தவம்.
 வள்ளலார்--அளிப்பார் - வள்ளலாராதலின் அளிசெய்து தாமே முற்பட வாக்கருளினார் என்பது.
 அவ்வுரை - இவருரை - என்பனவும் பாடங்கள்.
 

657

 2556. (வி-ரை) மகளார்க்கும் - உமக்கும் - திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே - திருவருள் பெருகுதலால் வரும் நன்மை; வாலிதே - சிறந்து செல்கின்றதே.
 செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் - மன்னிய சைவத் துறையின் வழி வந்தும், அதனின் மாறாது ஒழுகியும், அதனைப் பற்பல இடையூறகளின் இடையிலேயும் விடாது பற்றியும், தம்நாடு சைவத்தின் ஓங்க நினைந்து முயன்றும் வந்த பெருமை பற்றியும், அரசியாராக ஆணை தந்து இயக்கும் முதன்மையும், உரிமை பற்றியும் சோழரது மகளார் என்ற தன்மையாற் கூறி முதற்கண் வைத்துக் கேட்டருளினார்; "இங்குப் பெண்ணுக்கு முதன்மை தந்து விசாரிப்பது கருத்தென்று விசேடம் காண்பாருமுண்டு; அது பொருந்தாமை தேற்றம். மண்