| ணெலா நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன்றன் மகளாம், பண்ணினேர் மொழியான்" என்றும், "மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை" என்றும் வரும் தேவாரக் கருத்துக்களும் காண்க; இத்திருப் பதிகத்தினுள் அம்மையாரை முதலிலும் அமைச்சனாரை அடுத்தும் வைத்துக் கூறிய வைப்புமுறையும் காண்க. |
| நம்பெருமான் என்று தம்மையும் உளப்படுத்திக் கூறியது கருத்தொன்றித்த திருத்தொண்டின் உரிமைபற்றி; |
| திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே - உயிர்களுக்கு வரும் இன்பமும் துன்பமும் இறைவர் செய்யும் அருளால் வந்து கூடுவன; அவ்வாறு இறைவர் கூட்டுவிப்பதும் நன்மையின் பொருட்டேயாம் என்பது துணிபு; இங்கு வாலிதே - என்றது நன்கு செல்கின்றது - இன்பமாகச் செல்கின்றது - என்ற நிகழ்காலக் குறிப்பு; ஏகாரம் வினா; இது நலம் வினவும் வகையால் எழுந்தது; ஆயின், "மானியார் தமக்கு மானக், குன்றென நின்ற மெய்ம்மைக் குலச்சிறை யார்த மக்கும், நன்றுதான் வினவக் கூறி"(2570) என்றபடி திருமறைக்காட்டில் இவர்கள் வரவிட்ட அறிவுடை மாந்தர்பால் வினவிக் கேட்டறிந்து கொண்ட பிள்ளையார், இங்கு "நன்மைதான் வாலிதே" என்று மீண்டும் வினவிய தென்னையோ? எனின், முன்னர்க் கேட்டறிந்தது பிறர்பாற் கேள்வி; இங்குக் கண்டபோது நேரிற் கேட்பது கண்டறிவதாவதாம் மரபு. ஆதலின் வினவிய தென். இனி இவ்வாறு கொள்வதுடன், இரட்டுற மொழிந்து கொண்டு, மறைக்காட்டில் அவர்கள் பாலறிந்தபடி நாட்டின் தீங்கு பரவிய நிலையினுக்கு "வருந்தற்க" என அஞ்சல் அருளும் முகத்தால், முன்னர் நம் பெருமான் செய்த திருவருள் இனிப்பெருகும்; இன்று காணும் நன்மைதான் வாலிதேயாம்; என்று பிரித்துப், பிள்ளையாரது விளக்கம் பொருந்தக் கூறும் அமுத வாழ்த்தக உரைத்தலுமாம்; இப்பொருளில் பெருகும் - இனிப்பெருக நிகழும் என விளைமுற்றாகக் கொள்க; ஏகாரம் - தேற்றம்; பிரிநிலையுமாம். |
| மண்மிசைத் தாழ்ந்து - பிள்ளையார் வினாவுக்கு விடை கூறும் முகத்தால் வணங்கி. |
| தம்பெருந் தவத்தின் பயன் அணையார் - பிள்ளையார்;தம் - தம்மையும் அம்மையாரையும் அரசனையும் நாட்டினையும் உளப்படுத்திக் கூறியது; பெருந்தவத்தின் பயன் அணையார் - முன்னைப் பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி இப்பயன் கிடையாதென்பது. |
| தன்மையாம் நிலை - உள்ள நிலை; தன்மை - உண்மை. மேற் கூறுவது உபசாதமாம் முகமனாகிய இயல்பு அன்றி உள்ளபடி உணர்ந்து கூறும் உண்மை என்பது. |
| செம்பியர் தலைவன் - என்பதும் பாடம். |
| 658 |
| 2557. (வி-ரை) இது மிகச் சிறந்த ஆழ்ந்த கருத்துடன் அமைச்சுத் திறம் விளங்கும் பெருமையுடையதொரு திருப்பாட்டு. |
| சென்ற காலத்தின்...பெற்ற பேறு - திருவருள் - என்றதனால் சென்ற காலத்தையும், வாலிதே என்றதனால் நிகழ் காலத்தையும், பெருகும் நன்மைதான் என்றதனால் எதிர்காலத்தையும் குறித்து வினா நிகழ்ந்தமையால் மூன்று காலத்தும் நன்மையே என்று கூறி, அதற்குக் காரணம் நிகழ்காலத்திற் பெற்ற பேறேயாம் என்று முடித்தனர். இன்று எழுந்தருளும் இப்பேறு சென்ற காலத்தின் பழுதிலாத் திறமாகிய பெரும் தவத்தாலன்றிக் கைகூடாதாதலின் கழிகாலத்தில் திருவருள் நன்கிருந்து அத்தவத்தை முற்றச் செய்தது; இனி இன்று எழுந்தருளும் இப்பேறு மேல் |