[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்813

 மீளவும் பணிந்து போற்றினார் - அம்மையாரது விண்ணப்பத்தைத் தெரிவித்ததன் பொருட்டு மீண்டும் பணிந்தனர். அமைச்சர் - அமைச்சராதலின் என்பது குறிப்பு.
 

660

2559
ங்கனம் போற்றி யடிபணிந் தவர்மே
   லளவிலா வருள்புரி கருணை
தாங்கயி மொழியாற் றகுவன விளம்பித்
   தலையளித் தருளுமப் பொழுதில்
ஓங்கெயில் புடைசூழ் மதுரைதோன் றுதலு
   முயர் தவத் தொண்டரை நோக்கி
"ஈங்குநம் பெருமான் றிருவால வாய்மற்
   றெம்மருங் கின" தென வினவ,
 

661

2560
ன்பரா யவர்முன் பணிந்தசீ ரடியா
   ரண்ணலா ரடியிணை வணங்கி
முன்புநின் றெடுத்த கைகளாற் காட்டி
   "முருகலர் சோலைகள் சூழ்ந
மின்பொலி விசும்பை யளக்குநீள் கொடிசூழ்
   வியனெடுங் கோபுரந் தோன்றும்
என்பணி யணிவா ரினிதமர்ந் தருளும்
   திருவால வாயிது" வென்றார்.
 

662

 2559. (இ-ள்) ஆங்கனம்...பொழுதில் - அவ்வாறு துதித்துத் திருவடியில் வீழ்ந்து பணிந்தவர்மேல் அளவில்லாத அருளைத் தரும் கருணை கூந்த மொழிகளால் தக்கவற்றைச் சொல்லித் தலையளி செய்தருளும் அப்போது; ஓங்கு எயில்... தோன்றுதலும் - ஓங்கிய மதில்கள் பக்கங்களிற் சூழ்ந்த மதுரையம்பதி கட்புலப்படத் தோன்றுதலும் கண்டு; உயர்தவத் தொண்டரை...வினவ - உயரும் தவமுடைய தொண்டரைப் பார்த்து, "இவ்விடத்து நமது இறைவர் எழுந்தருளுகின்ற திருவாலவாயானது மற்று எப்பக்கத்தில் உள்ளது?" என்று கேட்க;
 

661

 2560. (இ-ள்) அன்பராயவர்...காட்டி - அவ்வாறு வினவப் பெற்ற அன்பராயவர்முன் பணிந்த சிறப்புடைய அடியாராகிய குலச்சிறையார் பிள்ளையாரது இணையார் திருவடிகளை வணங்கித் திரு முன்பு நின்று எடுத்த கைகளினாலே சுட்டிக் காட்டி; "முருகலர்...திருவாலவாய் இது" என்றார் - வாசம் விரிகின்ற சோலைகளாற்சூழப்பட்டு, மின்பொலியும் ஆகாயத்தை அளக்கும்படி நீண்ட கொடிகள் சூழ்ந்த பெரிய நீண்ட கோபுரங்கள் தோன்றுகின்ற இது, எலும்பின் அணிகளை அணிந்த சுந்தரேசுரவரர் இனிதாக விரும்பி வீற்றிருக்கும் திருவாலவாயாம்" என்று சொன்னார்.
 

662

 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 2559. (வி-ரை) அடிபணிந்தவர்மேல் - அடிபணிந்த குலச்சிறையாரும் அவரைத் தம் பொருட்ச் சென்று அடிபணிவீரென்ற ஏவிய அம்மையாரும் ஆகிய இருவர் மேலும் என்பது குறிப்பு.
 அளவிலா... தலையளித்தருளும் அப்பொழுதில் - கருணையை உட்கொண்ட மொழிகளால் தலையளி செய்தபோதில்; அம்மையார் பணித்தபடி கூறிப் பணிந்த குலச்சிறையாருக்கு அதனை ஏற்று அருளிய மொழிகளாற் கூறிச் சிறப்பருளும் மரபு பற்றியது.