| திருவாலவாய் |
| திருச்சிற்றம்பலம் திருவிருக்குக்குறள் - பண் - குறிஞ்சி |
2565 | நீல மாமிடற், றால வாயிலான், பால தாயினார், ஞால மாள்வரே. (1) அடிக ளாலவாய்ப், படிகொள் சம்பந்தன், முடிவி லின்றமிழ், செடிக ணீக்குமே. | |
| திருச்சிற்றம்பலம். |
| பதிகக் குறிப்பு:- பாண்டி நாட்டில் உற்ற தீமைகளை நீக்கிப் பாண்டியனையும் அந்நாட்டிறையும் வெண்ணீறு இடுவித்துச் சிவநெறியிற் புகுத்துதல் கருத்து. |
| பதிகப்பாட்டுக் குறிப்பு:- (1) நீலமாமிடற்று ஆலவாயிலான் - விடமுண்டு அமரர்களைக் காத்தமைபோல அமண் கழுவிப் பாண்டிநாட்டினைக் காப்பர்; பாலதாயினார் - அவன் சார்பு இப்போதின்றி இனிப் பெற்றுச் சைவராவார்; ஆயினார் - ஆள்வர் - ஆக்கச்சொல், அவ்வாறாதல் வருங்காலம் என்பதனையும், ஆவான் அரசன் என்பதனையும் குறித்தது; "அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமு மாளற் குரியர்"(139) என்ற கருத்தும் காண்க;- (2) ஞாலம் - உலகங்கள்; ஏழுமாம் - கலப்பினாலும் நிமித்த காரணராம் தன்மையாலும் இவ்வாறு கூறினார்; சீலம் - சரிதை- (3) ஆலநீழலார் - கல்லாலின் அடியில் இருப்பவர்; பாலதாமின் - உலகர்க்கும் அந்நாட்டவர்க்கும் அருளினால் உபதேசித்தது.- (5) ஆடல் - சார்விலாதாரை அடுகின்ற தன்மை; மாயப் பசுவை வதைத்த திருவிளையாடல் காண்க.- (10) தோமண் செற்ற வீரன் - சரிதக் குறிப்பும் உடையது; செற்ற - துணிவுபற்றி இறந்தகாலத்தாற் கூளினார்;- (11) செடிகள் - நாட்டுக்கு அந்நாள் நேர்ந்த கேடும், இனி இப்பதிகத்தினைப் பயில்வார்பால் வரக்கூடியனவாகிய தீமைகளும் ஆம். |
2566 | சேர்த்து மின்னிசைப் பதிகமுந் திருக்கடைக் காப்புச் சாத்தி, நல்லிசைத் தண்டமிழ்ச் சொன்மலர் மாலை பேர்த்து மின்புறப் பாடி, வெண் பிறையணி சென்னி மூர்த்தி யார்கழல் பரவியே திருமுன்றி லணைய, | |
| 668 |
2567 | பிள்ளை யாரெழுந் தருளிமுன் புகுதுமப் பொழுது வெள்ள நீர்பொதி வேணியார் தமைத்தொழும் விருப்பால் உள்ள ணைந்திட வெதிர்செலா தொருமருங் கொதுங்குந் தெள்ளு நீர்விழித் தெரிவையார் சென்றுமுன் பெய்த, | |
|
| 669 |
2568 | மருங்கின் மந்திரி யார்பிள்ளை யார்கழல் வணங்கிக் கருங்கு ழற்கற்றை மேற்குவி கைத்தளி ருடையார் "பருங்கை யானைவாழ் வளவர்கோன் பாவையா" ரென்னப் பெருங்க ளிப்புடன் விரைந்தெதிர் பிள்ளையா ரணைந்தார், | |
| 670 |
2569 | தென்ன வன்பெருந் தேவியார் சிவக்கன்றின் செய்யய பொன்ன டிக்கம லங்களிற் பொருந்தமுன் விழுந்தார்; மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ்சிறந் தளிக்கும் இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந் திருக்கையா லெடுத்தார். | |
| 671 |
| 2566. (இ-ள்) சேர்த்தும்...சாத்தி - சேர்க்கின்ற இனிய இசையினையுடைய பதிகத்தினையும் திருக்கடைக் காப்புச் சாத்தி நிறைவாக்கி; நல் இசை...பாடி - நல்ல |