| இசையினையுடைய தண்ணிய தமிழ்ச் சொற்களாலாகிய மலர்மாலையினைப் பேர்த்தும் இன்பம் பொருந்தப்பாடி; வெண்...அணைய - வெள்ளிய பிறையினை அணிந்த சென்னி யினையுடைய இறைவரது திருவடிகளைப் பரவியே திரமுன்றிவினை வந்து அணையும் போது; |
| 668 |
| 2567. (இ-ள்) பிள்ளையார்...அப்பொழுது - முன்னர்ப் பிள்ளையார் திருக்கோயிலினுள்ளே எழுந்தருளிப் புகுந்த அப்பொழுது; வெள்ள நீர்...உள்ளணைந்திட - கங்கை தங்கும் சடையினையுடைய இறைவரைத் தொழுகின்ற ஆர்வத்தோடும் உள்ளே அணைந்திடலாலே; எதிர் செலாது...தெரிவையார் - அவர் எதிரிற் செல்லாது ஒரு பக்கத்தில் ஒதுங்கிய தெள்ளும் நீரிற் பொருந்திய கண்களையுடைய தெரிவையாராகிய அம்மையார்; சென்று முன்பு எய்த - (அவரது) திருமுன்பு சேர; |
| 669 |
| 2568. (இ-ள்) மருங்கின்...வணங்கி - பக்கத்தே வந்த மந்திரியாராகிய குலச்சிறையார் பிள்ளையாரது திருவடிகளை வணங்கி நின்று; "கருங்குழல்...பாவையார்" என்ன - "கரிய கூந்தலின் மேலே கூப்பிய கைத்தளிர்களை யுடைய அம்மையார் பரிய கையினையுடைய யானைகள் வாழும்வளச் சோழ மன்னரது மகளார்" என்று சொல்ல; பெரும்...அணைந்தார் - பெருமகிழ்ச்சியுடனே விரைந்து அவ்வம்மையார் எதிரே அவர் வந்து அணைந்தனராக; |
| 670 |
| 2569. (இ-ள்) தென்னவன்...வீழ்ந்தார் - பாண்டியனது பெருந் தேவியாராகிய மங்கையர்க்கரசி யம்மையார் சிவக்கன்றாகிய அவரது சிவந்த பொன் அடித் தாமரைகளிற் பொருந்தும்படி முன் விழுந்து பணிந்தனர்; மன்னு...எடுத்தார் - நிலை பெற்ற சீகாழிப் பதியவர்களது வள்ளலாராகிய பிள்ளையார் மகிழ்ச்சி கூர அளிக்கும் இன்னருளுடைய பெருஞ் சிறப்பினோடும் திருக்கைகளால் அவரை எடுத்தருளினர். |
| 671 |
| இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்கநின்றன. பொருட்டொடர்புபற்றி 2568-ல் அணைந்தார் என்றதனை எச்சமாகக் கொண்டுரைத்து ஒரு முடிபு காட்டி உரைக்கப்பட்டது. வினை முற்றாகவே கொண்டு வேறு முடிபு கொள்ளினுமிழுக்கில்லை. |
| 2566. (வி-ரை) சேர்த்தும் இன்னிசை - கருதிய பயனைக் கூட்டும் இனிய இசை; இசைகள் குறித்த அவ்ப் பயன் தருதலை இசை நூல் வகுத்துக் கூறும்; ஏனைய இசைகள் போலொழியாது, பிள்ளையார் கூட்டிய பண்ணிசை உயர்ந்த பயன் தருதலின் சேர்த்தும் இன்இசை என்று சிறப்பித்தார். |
| நல்லிசைத் தண்டமிழ்ச் சொன்மலர் மாலை பேர்த்துமின்புறப் பாடி - "நீலமா மிடற்று" என்ற இப்பதிகமேயன்றி வேறு மொரு பதிகமும் பாடியருளினார் என்பது குறிப்பு; அப்பதிகம் இறந்து பட்டது போலும்!; "முடிவி லின்றமிழ் செடிக ணீக்குமே" என இப் பதிகப் பயன் கூறியபடி, பாண் நாட்டின் துன்ப நீக்கங் கருதி இப்பதிகத்தினையும், அதனின் வேறாய் இன்ப ஆக்கத்துக்காக மற்றுமொரு பதிகமும் அருளுதல் இயைபுடைத் தென்க; இவ்வாறே பின்னர் "வாது செயத்திருவுள்ளமே" "வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" என்று இரண்டு பயன் கருதி வெவ்வேறு இரண்டு பதிகங்கள் அருளியமை கருதுக; "பரசமய நிராகரித்து நீறாக்கும்"(1917) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; இன்புற - இன்பம் உறும் பொருட்டு என்ற கருத்தும் இது; பேர்த்தும் - மாலை- பாடி - மீண்டும் மற்றம் ஒரு மாலை பாடி; பதிகமும், பேர்த்தும் என்ற உம்மைகளால் வேறு பதிகம் என்பது தெளியப்படும். இவ்வாறன்றி அப்பதிகத்தினையே மீண்டும் அனுசந்தித்துப் பாடினர் என்றுரைப்பாருமுண்டு. |