| செய்த - இந்நாள் இது பெறுதற்குரிய பெருந் தவம் ஒன்றும் யாம் செய்திலோம்; பெருந்தவத்தாலன்றி இப்பேறு வாராது; ஆதலின் தவம் முன் செய்திருத்தல் வேண்டும் என்பார் செய்த - என முன்னை நிலைபற்றிக் கூறினார். |
| தவம் என்கொல்! - யாங்களறிய வாராத அத்துணைப் பெரிது என்று அதிசயக் குறிப்புப்பட வந்த வினா; "நன்னிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தாற் கேட்டார்" (2503) என்றது இங்கு நினைவு கூர்தற் பாலது. |
| 672 |
2571 | யாழின் மென்மொழி யார்மொழிந் தெதிர்கழல் வணங்கக், காழி வாழவந் தருளிய கவுணியர் பிரானுஞ் "சூழு மாகிய பரசம யத்திடைத் தொண்டு வாழு நீர்மையீர் உமைக்காண வந்தன" மென்றார். | |
| 673 |
| (இ-ள்) யாழின்...வணங்க - யாழ்போன்ற இனிய மென்மொழியினையுடை அம்மையார் இவ்வாறு சொல்லி மீண்டும் தமது திருவடிகளை வணங்க; காழி ...பிரானும் - சீகாழியவர் வாழ்வடையும்படி வந்தருளிய கவுணியர் தலைவரும் (அம்மொழி கேட்டு); "சூழுமாகிய ... வந்தனம்" என்றார் - சுற்றும் பரவிய பரசமயச் சூழலினிடையே திருத்தொண்டின் நெறியில் விடாது வாழ்கின்ற நீர்மையுடையீர்களே! நுங்களைக் காணும் பொருட்டு வந்தனம் என்று அருளிச் செய்தார். |
| (வி-ரை) யாழின் மென் மொழியார் மொழிந்து - அம்மையார் கூறிய வரவேற்பு மொழி பிள்ளையார் திருச்செவிகளில் சார்ந்தபோது விளைத்த நிலைமையை இவ்வாறு அடைமொழியாற் சிறப்பித்துக் கூறினார்; "யாழைப்பழித் தன்னமொழி மங்கை" (திருமறைக்காடு - நம்பி. தேவா); " பண்ணி னேர்மொழி யாளுமை" (மேற்படி திருநா. தேவா) என்றும் உமாதேவியாரது அருண் மொழிகளைச் சிறப்பித்தாங்குப் பிள்ளையாரது திருச்செவிகளில் அம்மையாரது விண்ணப்பமும தாயின் இன்சொற்களின் தன்மையுடன் புகுந்தன என்பதாம். பிள்ளையார் கூறியருளிய விடையில் "தொண்டு வாழு நீர்மையீர் உமைக்காண வந்தனம்" என்றதும், " பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி" என்ற பதிகமும் தாயைக் காணவரும் சேயின் தன்மையாகிய இக்குறிப்புத் தருவதாம். |
| எதிர் வணங்க - எதிர் வணக்கமாவது (அருள்மொழி பெறும் வகையால்) நல்வரவேற்பு மொழி மொழிந்த பின் மீண்டும் வணங்குதல். "மீளவும் பணிந்து" (2558) என்றது காண்க. |
| காழிவாழ வந்தருளிய - காழிப்பதி வாழ வந்த என்றலுமாம். |
| சூழுமாகிய...நீர்மையீர் - சூழும் ஆகிய - சூழலாகிய ; சுற்றுமுற்றும் எங்கும் சூழ்ந்துநின்ற; தமது சமயத்தினைப் பரப்புதலேயன்றிச் சூழ்ச்சிகளாலே சைவ சமயத்திற்குக் கேடு சூழ்கின்ற என்ற குறிப்புமாம்; சுழல் காற்றுப் போல எங்கும் சூழ்ந்து வளைத்து ஆழ்த்துகின்ற என்பதும் குறிப்பு; |
| பரசமயத்திடைத் தொண்டு வாழும் நீர்மை - தமது சைவநெறியே மிக்கு நிகழும் காலையிலேயும் திருத்தொண்டு நெறியில் நன்கொழுகி வாழ்தல் அரிதாவது மக்களின் வலிய மலபந்த நிலை; அதனோடு பரசமயச் சூழலின் இடையே திருத்தொண்டு நெறி வாழ்வது மிகவும் அரிது; மேலும் தாம் அந்நெறி வாழ்வதேயன்றி ஏனையோரும் வாழ்வடைய வேண்டும் என்று எண்ணிச் செயல் புரிவது மிக மிக அரிது என இதன் அருமை புலப்பட வாழுநீர்மையீர் என்றார். தவம் என்சொல் என்ற |