[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்829

  2572. (வி-ரை) இன்னவாறு அருள் செய்திட - முன்பாட்டிற் கூறியபடி அருளைச் செய்ய ; பிள்ளையார் கூறியவை உபசாரமாகிய இன்மொழிகள் மட்டிலமையாது அருளைத்தரும் நன்மொழிகள் என்றும், வாக்களவிலமையாது செயலளவில் அருளைச் செய்தன என்றும் கொள்க; என்னை? தொண்டு வாழும் நீர்மையீர் ! - வாழும் - என்னும் நிகழ்கால எச்சம் உமது திருத்தொண்டின் வாழ்வு எக்காலத்தும் இடையறாது நிகழ்வதாகும் தன்மையதாம் என ஆசி மொழிந்ததாயிற்று ; உமைக்காண வந்தனம் என்றதனால் அத்தன்மை செய்தருள இறைவனருளால் எமது வருகை கூடிற்று என்று உறுதி மொழி தந்தருளியதாயிற்று; முன்னர் அடிகளிற் பொருந்த வீழ்ந்த தம்மை அருட் டிருக்கைகளால் எடுத்த செயலினாலே தமது மனக்கருத்து முற்றியதென மதித்த அம்மையாருக்கு இச்சொற்கள் அதனை உறுதிப்படுத்தும் அருள் மொழிகளேயாயின என்க; வாக்கு முன்னும் செயல் பின்னும் நிகழுமியல்பு மாறி இங்குச் செயன் முன்னும் வாக்குப் பின்னுமாக நிகழ்ந்தது அருளின் மிகுதி காட்டிற்று என்க. இதனையே தொடர்ந்து மேலும் அருள் செய்து என்ற குறிப்பும் காண்க.
  தொழுது அடி வீழ்ந்தார் - அருள்மொழி பெற்றதன் பொருட்டு மீளவும் பணிந்தார். ஆசாரியரிடம் திருநீறு பெறுவோர், பெறுமுன்னர் வணங்கிப் பெறுதலும், பெற்றபின் அணிந்து கொண்டு மீள வணங்குதலுமாகிய சைவ மரபு விதிகளும் காண்க.
  வருதிற மெலாம் மந்திரியார் மொழிய - வருதிறமெலாம் - நாட்டிற்குக் கேடு வந்த தன்மைகளை எல்லாம் ; இவை சமண இருள் பரவி மன்னனும் அம்மாயத் தழுந்த நாடுமுற்றும் சைவ நெறியிற் சித்தம் செல்லா நிலையில் நிகழ்கின்றமையும், இதுபற்றித் தாங்கள் பிள்ளையார்பால் விண்ணப்பம் போக்கியமையும் ஆகிய எல்லா வகைகளையும்; இவை 2498-2505 உரைக்கப்பட்டன; இவற்றை முன்னர்க்கூறாது அம்மையார் திருமுன்பு திருவாலவாயில் விரித்து விண்ணப்பித்த திறமும், அம்மையார் சொல்லாது அமைச்சனார் எடுத்துக்கூறும் திறமும் உயர்ந்த உலகநிலை மேம்பட்ட ஒழுக்கத்தினுக்கும் அரசாங்கமுறை ஒழுங்குகளுக்கும் சிறந்த உதாரணங்களாம்.
  போக்கி - அம்மையாரை முன்னர் விடை கொடுத்து அரண்மனைக்குச் செல்ல விடுத்த நிலையின் நலத்தையும் உலகியல் ஒழுக்க நன்முறையினையும் காண்க. அன்ன மென்னடையார்க்கு -"செய்யதா மரைமே லன்னமே யனையார்" என்பது பிள்ளையாரது தேவாரம்.
  துன்னுமெய்த் தொண்டர் - பிள்ளையாருடன் வந்த மெய்த்திருத்தொண்டர்கள். முன் "உயர்தவத்தொண்டரை" (2559) என்ற குறிப்பும் காண்க.
  எழுந்தருளும் - திருவாலவாயின் புறத்திரு முன்றிலில் எழுந்தருளிவரும்.
 

674

  2573. (வி - ரை) செல்வம் - அருட் செல்வம். இஃது ஈண்டு இறைவர் தம்மை வந்தடைந்த எல்லாவுயிர்க்கு மெளியராய்ச் செய்தருளிய பலதிறப்பட்ட அருட்டிரு விளையாடல்களால் எளிதிலறியப்படும்.
  பணிசெய்து அல்கு தொண்டர்கள் - அல்குதல் - தங்குதல்; மிகுதல் என்றலுமாம்; குறைதல் என்று கொண்டு மன ஊக்கங் குறைந்து நிற்றல் என்றலுமாம்; இவர்கள் திருக்கோயிற் பணி செய்யும் திருத்தொண்டர்கள்; "இருவர்தம் பாங்கு மன்றிச் வைசமங் கெய்தா தாக" (2501) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; மூர்த்தி நாயனார் புராண வரலாறும் அவ்வாறுள்ள பிறவும் நினைவு கூர்க; அரசியாரும் அமைச்சனாரும் வணங்கி விண்ணப்பித்த பின்னரும் அமைதிபெறாது பணிசெய் தொண்டரும் அணுகவந்து வரவேற்று விண்ணப்பித்த முறையும் ஆர்வ மிகுதியும் காண்க.