840திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  2586. (இ-ள்) வந்த...சிந்தை யன்றி - வந்த அந்தணனை நாம் வலிமை செய்து போக்கும் எண்ண மன்றி; அச்சிறு மறையோன்...ஏகும் என்று இசைத்தார் - அந்த மறைச்சிறுவன் தங்கும் மடத்தில் வெவ்விய தழல் சேரும்படி விஞ்சை மந்திரத் தொழில் விளைப்போமாயின், இந்த நல்ல நகரத்தினிடம் இராது வெளியே சென்றுவிடுவான் என்று சொன்னார்கள்;
 

688

  இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  2583. (வி-ரை) மாலை வெண்குடை வளவர் - மாலை -ஆத்தி மலர் மாலை; மாலை என்ற பொதுப்பெயர் வளவர் என்ற பெயர்க்கு அடை மொழியாய் இடநோக்கி இங்குச் சோழர்க்குரிய ஆத்திமாலையைக் குறித்து நின்றது.
  வெண்குடை - முடி மன்னர்க்குரிய சிறப்படையாளங்களுள் ஒன்று.
  வளவர் சோணா(ட்)டு - வளவர் நாடு என்றாலே அமையுமாதலின் சோழ நாடு என்றதில் சோழ என்றது வாளாபெயராய் நின்றது: சோழநாடு சோணாடு என மருவியது; வளவர்கட்குப் பிறநாடுகளும் ஒவ்வொரு காலங்களில் உரிமையாயின. அது குறிக்கக் கூறிய குறிப்புமாம்.
  சோணாட்டு - புகலி - ஞானம் பெற்றானென்று - வெல்ல - அணைந்தனன் - அரசன் அவர்கள் அணைந்தது ஏன்? அவர்கள் யார் என்று வினவியதற்கு மறு மொழியாக அவர்களின் தலைவரது நாடும், ஊரும், பேரும், தகுதியும், அணைந்த கருமமும் எடுத்துக் கூறியவாறு காண்க. அரசனது வினாவுக்கு விடையாகக் கூறியவற்றை மட்டும் சிறப்பாக இப்பாட்டாற் கூறி, விடையல்லாது தாம் அறிந்தவற்றை யெல்லாம் தாமறிந்தபடி ஒன்றும் ஒழியாது எடுத்து சொல்லியவற்றைப் பொது வகையால் மேற்பாட்டிற் கூறும் கவிநயம் காண்க.
  சூலபாணி பால் ஞானம் பெற்றானென்று - வெல்ல - அணைந்தனன் - சூலபாணிபால் ஞானம் பெற்றான் - எல்லா ஞானங்களுக்கும் கர்த்தா ஆதி சூலபாணி என்பது வேதம். அக்குறிப்புப்பெறக் கூறியதாம்; பெற்றானென்று - பெற்றானென்று சொல்லிக் கொண்டு; பெற்றதனால் என்ற உண்மைக் குறிப்பும்பட நின்றது; வெல்ல அணைந்தனன் - அணைந்ததென்? என்ற வினாவுக்கு வெல்ல அணைந்தனன் என்றனர்; வெல்ல - வெல்வதற்கென்று எண்ணி; வெல்வதற்காக என்று பிற்சரிதக் குறிப்புப்பட நின்றமையும் காண்க. அவர்களையறியாமலே அவர்கள் வாக்கில் உண்மைக் குறிப்பு நிகழ்ந்தது காண்க.
  எங்களை - உனது ஆதரவு பெற்ற எங்களை என்பது உரைக் குறிப்பு; சிறப்பும்மை தொக்கது.
  மேல் அணைந்தனன் - மேன்மை பெற என்றது குறிப்பு.
 

685

  2584. (வி-ரை) இத்திறம் - இத்தன்மையாகிய செய்திகள்; இவ்வாறாக என்றலுமாம்.
  அறிந்த தொன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் - அரசன் வினவியனவும், வினவாதனவும், ஆண்டைக்கு வேண்டுவனவும் வேண்டாதனவும், பொருந்துவனவும் பொருந்தாதனவும் என்ற பாகுபாடின்றித் தாம் அறிந்த காரணமொன்றினையே கொண்டு எல்லாம் கூறினர்: இது அவர்களது மனக்கலக்கத்தினையும் மீக்கொண்ட சினத்தினையும், பேராசையினையும் குறிப்பது.
  நாமம் சென்று தன் செவி நிறைத்தலும் - "செவிப்புலம் புக்கிடப் பொறாராய்" (2577) என்றதும் ஆண்டுரைத்தவையும் இவ்விடத்துக் கருதுக; நிறைத்தலும் - நிறைதலும் என்னாது பிறவினையாற் கூறியது அவனது விருப்பத்திற்கு மாறுபாடாயினும்