[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்841

  அவர்கள் கூறியதனால் வலிந்து வந்து நிறைந்தது என்ற குறிப்பு; அவர்களைப் போலவே அரசனும் செயிர்த்து நிறையழிந்து கலக்க மடைந்தமை காண்க; மேல் "யாவது முரையாடாதே எண்ணத்திற் கவலை யோடும்" (2587) என்பதும் காண்க.
  செயிர்த்து ழன் சொல்வான் - உரைப்ப என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக. முன் - முற்பட ; பின் சொல்வன வேறு விதமாம் என்ற குறிப்புப்பட முன்சொல்வான் - என்றார். பின்சொல்வன, தீவினையின் விளைவாகச் சுரநோய் மூண்டபோது, இங்குச் சொல்வது போல ஒரு சார்பாகச் சொல்லாமல் ஐயப்பாடாகிய நிலைகொண்டு இருவர் பக்கமாகச் சொன்னமையும், "இந்நோ யகலுமே லறிவேன்"(2620); "வென்றவர் பக்கஞ் சேர்வன்"(2621) என்றும்,"இருதிறத் தீருந்தீரும், கைதவம் பேச மாட்டேன்"(2647) என்றும், நீங்கடேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீர்"(2657) என்றும் வருவன காண்க; அதன்பின் நோய் நீங்கச் சிவநெறியின் உறுதிபெற்று "மறைக்குல வள்ள லாரே, யிந்தவெப் படைய நீங்க வெனக்கருள் புரிவீர்"(2667); "ஞானசம் பந்தர் பாத நண்ணினா னுய்ந்தேன்"(2670) என அமணரை விட்டுச் சைவ நெறியிலே சார்பு பெற்று அவ்வொரு பக்கமாகச் சொல்வதும், அமணரை இகழ்ந்து முறை செய்வதும் காண்க. இக்குறிப்பெல்லாம் பெறுவிக்குமாறு இங்கு "முன் சொல்வான்" என்றார்.
  வள்ளலார் நாமம் செவிநிறைத்தலும் செயிர்த்து - பின்னர் அரசன் சுர நோயுற்றபோது "வேணியர்பால் ஞானம், பெற்றவர் விரும்பி நோக்கிற் றீயவிப் பிணியே யன்றிப் பிறவியுந் தீரும்" என்று அம்மையாரும் அமைச்சனாரும் கூறியபோது பிள்ளையாரது திருநாமம் மந்திரமாகி அயர்வு அகன்று பேசும் வன்மைத் தந்தது;(2619); இப்போது அதுவே செயிர்ப்பினை விளைத்ததென்ன? எனின், பித்தந் தலைக்கேறியபோது பாலுங் கைக்கும்; அது நீங்கும்போது இனிக்கும்; இப்பண்பில் வைத்துக் காண்க; வினைதீரும் பக்குவம் வரும்வரை இறைவனருள் திரோதானசத்தியாய் உண்மை ஞானத்தை மறைத்துக் கன்மத்தை ஊட்டுவிக்கும்; பக்குவம் வரும்போது அதுவே அருட் சத்தியாய் இன்பந்தரும் என்பது ஞானநுற் றுணிவு.
  வள்ளலார் - வெறுத்துத் தீயவை செய்தபோதும் அருளினை மேற்கொண்டு நிற்கும் வள்ளன்மை குறித்தது. பிற்சரித விளைவுகள் காண்க.
  அங்கொளியா - மன்றலார் என்பனவும் பாடங்கள்.
 

686

  2585. (வி-ரை) மற்ற மாமறை மைந்தன் இம்மருங் கணைந்தானேல் - நீவிர் கூறுகிறபடி அணைந்துள்ளானாகில் ; மற்ற - மாறுபாடுடைய என்ற குறிப்பு; சமணர் மாயையினுட்பட்ட நிலையின னாதலின் நோயுள்ளவன் பிதற்றுதல் போல இங்குப் பிள்ளையாரை ஒருமையிற் கூறுதலும், நோய் நீங்கியவனது உண்மைக் கூற்றுப் போலப் பின்னர் "மாமறைச் சிறுவர்"(2620), "சடையினாருக் கன்பரா மிவரும்"(2657), "வந்தெனை யுய்யக் கொண்ட மறைக்குல வள்ள லாரே"(2667) என்றும் கூறும் நிலைகளும் காண்க.
  உற்ற செய்தொழில் யாது செய்கோம்? - உற்ற - பொருத்த முடையதாய்; யாது செய்கோம் - அரசன் முற்றும் தன் வசமிழந்து அமணர் வசப்பட்டு அவர் பணித்த வழியில் ஒழுகினான் என்பது; இவ்வாறே சைவநெறியிற் புகுந்த அரசுகளை "என் செய்வது"(1353),"செய்வதினிச் சொல்லும் "(1360),"இனிக்கடியுந்திற மெவ்வாறு"(1373); "இனிச் செய்வதென்?"(1385) என்று அமண அடிகண்மாரை பன்முறையும் கேட்டு அவர் சொல்லியபடியே பல்லவ அரசனும் நிகழ்த்தியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. இவையும் பிறவும் அந்நாளில் சமண சமயம்