[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்847

 
யன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கஞ் சேர்ந்து
துன்னுவ துறுதி யாகுஞ்; சுழிவுறேன் மன்ன!" வென்றார்.
 

693

  (இ-ள்) வெளிப்படை. அரசன் அவ்வாறு சொல்லக்கேட்டு மங்கையர்க்கரசியம்மையாரும் அரசனை நோக்கி "உனது நிலை இவ்வாறேயானால், அழிவு படாமல் நீடிய தெய்வத் தன்மை விளங்கும்படி அவர் வந்து வாதம் செய்தால் அதில் வென்றவருடைய பக்கத்திற் சேர்ந்து பொருந்துவதே உறுதியாகும்; வருந்த வேண்டா" - என்றனர்.
  (வி-ரை) இது அரசனைக் கவலைப்படாதபடி தேற்றிய முறை; இதன்கண்ணும் உண்மை நிகழ்ச்சிக் குறிப்புப்பட வருதல் காண்க.
  நீடிய - அழிவுபடாத; தெய்வத் தன்மை - தெய்வத் தன்மை விளங்கும் நிலையில்; புலப்படும்படி.
  வென்றவர் பக்கம் சேர்ந்து துன்னுவ துறுதியாகும் - அவரே செல்வர் என்பது உறுதி; அவர் பக்கம் சேர்ந்து துன்னுவது உறுதி; உறுதி - உண்மையாய் - நிச்சயமாய் நிகழ்வது; உறுதியாகும் - அதுவே உறுதி பயக்கும் செயலாகும்; என்று வழிப்படுத்தும் போதனைக் குறிப்பும் காண்க. சேர்ந்து - என்றதனால் இப்போது சேர்ந்த சமயம் வெற்றி பெறுவதில்லை என்பது குறிப்பு.
  நீடிய தெய்வத் தன்மை . "யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகி யாங்கே, மாதொரு பாக னார்தாம் வருவர்; மற் றத்தெய் வங்கள், வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யும்"(சித்தி - 2.25) என்றபடி பிற தெய்வங்களும் சிவனாணையால் நீதி செலுத்தவரினும், நீடியிராது அழிவெய்தி இறத்தல் பிறத்தல்களுக்கிடமா யலையும். ஆதலின் அவ்வாறின்றி அழிவில்லாத தெய்வத் தன்மை என்க; "தேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீர்" (2657).
  சுழிவுறுதல் - மனம் வாடுதல்; கவலை கொண்டு அலமருதல்.
  சுழிவுறேல் - வருத்தப்பட வேண்டா;
 

693

2592
சிந்தையிற் களிப்பு மிக்குத் "திருக்கழு மலத்தார் வேந்தர்
வந்தவா றெம்மை யாள" வெனவரு மகிழ்ச்சி யோடுங்
கொந்தலர் குழலார் போதக், குலச்சிறை யாரங் கெய்த
விந்தநன் மாற்ற மெல்லா மவர்க்குரைத் திருந்த பின்னர்,
 

694

2593
கொற்றவ னமைச்ச னாருங் கைதலை குவித்து நின்று
"பெற்றனம் பிள்ளை யாரிங் கணைந்திடப் பெறும்பே" றென்பார்
"இற்றைநா ளீசனன்பர் தம்மைநா மிறைஞ்சப் பெற்றோம்;
மற்றினிச் சமணர் செய்யும் வஞ்சனை யறியோ" மென்றார்.
 

695

  2592. (இ-ள்) சிந்தையிற் களிப்பு...போத-மனத்தினுள் மிகவும் களிப்படைந்து "சீகாழித் தலைவர் எம்மையாளும் பொருட்டு வந்த ஆறுதான் என்னே!" என்று வரும் மகிழ்ச்சியினுடனே விரியும் மலர்களை யணிந்த .கூந்தலையுடைய மங்கையர்க்கரசி யம்மையார் போந்தபோது; குலச்சிறையார்...அங்கு எய்த - குலச்சிறையார் அவ்விடத்தே வந்து சேர; இந்த...பின்னர் - இந்த நல்ல வார்த்தைகளை யெல்லாம் அவரிடம் சொல்லிய பின்பு;
 

694

  2593. (இ-ள்) கொற்றவன்...என்பார் - அரசனது மந்திரியாரும் கைகளைத் தலைமேலே கூப்பி நின்று, "பிள்ளையார் இங்கே அணைந்திடுதற்குப் பெரும் பேறுதான்