| தவம் மறைந்து அல்ல செய்வார் - தவம் என்ற மேற்போர்வையினுள் மறைந்து கொண்டு அல்லாதவற்றையே செய்கின்றவர்கள்; அல்ல - அற மல்லாதவற்றை - பாவச் செயல்களை; அகர வீற்று பலவறி சொல். செயப்படு பொருளில்வரும் இரண்டனுருபு தொக்கது. "கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம்"(1302) என்ற விடத்துரைத்தவை பார்க்க. |
| 697 |
| 2596. (வி-ரை) ஆதி மந்திரம்...வருமே - இது கவிக்கூற்று. ஆதி மந்திரம் - ஆதியின் மந்திரம், ஆதியாகிய மந்திரம், ஆதிக் குகந்த மந்திரம், என்று பலவும் உரைக்க நின்றது. |
| நோக்கும் மாதிரம் - பார்க்கின்ற திசை; மற்றை மந்திரம் பயனல்லாத மற்ற - என்றது குறிப்பு. |
| மற்றை மந்திர விதி வருமே - ஏகார வினா வராது என்று எதிர்மறை குறித்தது; மந்திர விதி வருதலாவது குறித்த பயன் தருதல்; விதி - குறித்த செயல் செய்தல்; வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்" என்ற கருத்துக் காண்க. |
| ஓதுவார் - ஓதுதல் - விதிப்படி எண்ணிக் கணித்தல் |
| பூதிசாதனர்...புனைந்த சாதனைகள் - சாதனைகள் - சாதனம் - ஒரு பொருளைக் குறித்தபடி நிறைவேற்றும் கருவி; சாதியாவகை - தாம் கொண்ட கொள்கையை நிறைவேற்றா திருத்தல். சாதியாவகை - சமணர்களது மந்திர உச்சாளனம் பலன் பெறாமற் போயின தன்மையைக் கூறாது, அதனைக்கண்டு அமணர் தளர்ந்த தன்மை பற்றிக் கூறியது கவிநயம். |
| புனைந்த சாதனைகள் - புனைந்த - உண்மையல்லாது தாம் கற்பித்த. |
| பூதிசாதனர் மடத்தில் - அவர் புனைந்த சாதனைக்கு மேற்பட்ட சாதனை கை வந்தவர்கள் என்பது குறிப்பு. பூதிசாதனராதலின் புனைந்த சாதனைகள் சாதியாவாயின என்று காரணங்கூறி விரித்துரைக்க நின்றது. |
| குண்டர்கள் - கொலையாகிய பாவச் செயல் செய்யும் கீழ்மக்கள் என்பது குறிப்பு. |
| 698 |
2597 | தளர்ந்த மற்றவர் தாஞ்செய்த தீத்தொழில் சரியக், கிளர்ந்த வச்சமுன் கெழுமிய கீழ்மையோர் கூடி "விளங்கு நீண்முடி வேந்தனீ தறியினம் மேன்மை புளங்கொ ளா;னமர் விருத்தியு மொழிக்கு" மென் றுணர்வார், | |
| 699 |
2598 | "மந்தி ரச்செயல் வாய்த்தில; மற்றினிச் செய்யும் புந்தி யாவதிங் கிது"வெனப் பொதிதழல் கொடுபுக் கந்தண் மாதவர் திருமடப் புறத்தய லிருள்போல் வந்து தந்தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் | |
| 700 |
| 2597. (இ-ள்) தளர்ந்து...சரிய - மற்று அவர்கள் தாம் செய்த அத் தீத்தொழில் பயன்தராது வீழக்கண்டு மனந் தளர்ந்து; கிளர்ந்த....கூடி - எழுந்த அச்சமானது முன்னே மிகுந்ததனால் கீழ்மைத் தன்மையோர் களாகிய அந்த அமணர்கள் கூடி; விளங்கு....உணர்வார் - விளங்கும் நீண்ட முடி மன்னனாகிய பாண்டியன் இதனை அறிந்தானாயின் நமது மேம்பாட்டினில் இனி மனம் வைக்க மாட்டான்; நமது பிழைப்பு வழியினையும் ஒழித்து விடுவான்" என்று உணர்வாராகி, |
| 699 |