[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்853

  முதலிய புற நாட்டச் சமயங்களின பரப்புதல்களும் இன்று வரை நம் நாட்டில் இவ்வாறே நிகழ்தலும் காணவுள்ளன; ஒருவனைத் தாழ்த்தி மற்றவன் பிழைத்தல் என்றது உலகியல் நிலையிலேயன்றிச் சமய நிலையிலும் காண்பது ஆணவத்திற் கட்டுண்ட மனிதனின் இயல்பாய் நின்றது; பல வகையாலும் நிகழும் உலகியற் போர்களுக்கும் இதுவே உள்ளுறை என்க; இவ்வுண்மையினை உணர்ந்து ஒழுகினால் உலகம் கலகமின்றி நலம் பெற்று வாழ வழியுண்டாகும்; விருத்தி - சீவனோபாயம்; சீவிதம் - சர்வமானியம் என்பர். அமர்விருத்தி - அமர்த்திய - நியமித்த - தொழில் என்றலுமாம்.
  உணர்வார் - உணர்வாராகி; உணர்தல் மனத்தில் துணிதல். உணர்வார் - புரிந்தனர் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
 

699

  2598. (வி-ரை) "மந்திரச் செயல்....இது" என - சமணர் மனத்தினுள் எண்ணமிட்டுத் துணிந்த நிலை.
  செய்யும் புந்தி ஆவது இங்கு இது - புந்தி - புத்தி தத்துவத்தின் றொழில்; இதுவென - புத்தி தத்துவம் இது செயத்தக்கது என நிச்சயித்தும், இதனை நான் செய்வேன் என்று அகங்காரம் பல்கால் எழுந்திருந்தும், செயல்புரியும்; "அந்தமனம் புத்தியுட னாங் காரஞ் - சிந்தையிவை, பற்றியது நிச்சயித்துப் பல்கா லெழுந்திருந்தங், குற்றது சிந் திக்கு முணர்" (உண்மை விளக்கம் - 16) என்று அந்தக்கரணங்களின் தொழில்களாகிய இவற்றின் றன்மைகளை ஞான சாத்திரம் பேசுதல் காண்க.
  இது என - இது என்று துணிந்து; அடியார்பால் வரும் தீமையாதலின் அதனை இன்னதென்று கூறாது அவர்கள் துணிந்து செய்த செயலாற் கருதவைத்த ஆசிரியரது மரபு காண்க; பின்னரும் "பொதிதழல் கொடுபுக்குத் தந்தொழில் புரிந்தனர்" என மறைவுபடக் கூறிய மரபும் காண்க; "தான்முன் நினைத்த அப்பரிசே" (481); "பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்"(647).
  பொதிதழல் - வெளிப்படாது மறைத்த தழல்; கூரையிற் பொதியும் தழல் என்றலுமாம்; தழலை உள்ளே வைத்துப் பின்னர்த் தானே வெளிப்படும் தீக்கந்தகம் (Phoshours) போன்ற நெருப்புப் பொருள்கள் என்றலுமாம். சமணர் இத்தகைய கலை ஞானங்களில் வல்லவர் என்பர்; பின்னர், "மருவு வித்தவத் தொழில்வெளிப்படுதலும்"(2599) என்பதும் இக்குறிப்புத் தருவது.
  அந்தண் மாதவர் - அழகிய தட்பமாவது - "யான் பெற்ற வின்பம் பெறுக இவ்வையகம்"(திருமந்திரம்); "வையக முந்துயர் தீர்கவே"(தேவாரம்); "மகவெனப் பல்லுயி ரனைத்தையு மொக்கப் பார்க்குஞ், செல்வக் கடவுட் டொண்டர்" (திருவிடை மருதூர் மும்மணிக் கோவை 7) முதலிய திருவாக்குக்களாலறியப்படும்; மாதவர் - திருமடம் - "மாதவர் துயிலும் இத்திருமடம்"(2600); இத்திருமடம் அமைச்சனார் பிள்ளையார் தங்குதற்காக நிறுவுவித்தது; (2574).
  திருமடப்புறத்து அயல் - வந்து - காவல்பற்றித் திருமடத்தின் முன்பேயாயினும் உள்ளேயாயினும் புகுத இயலாதவர்களாகிப் புறத்தில் ஒருபக்கமாகக் சுரந்து வந்து; "திருமடப் புறச் சுற்றினில்"(2599); வந்து - தாம் இருந்து மந்திரத் தொழில் செய்த இடத்தினின்றும் வந்து.
  தந்தொழில் புரிந்தனர் - தொழில் - "தொழில் விளைத்தால்"(2586) என்று கூறிய குறிப்புப்படியே செயலிற் செய்தனர்.
  வஞ்சனை மனத்தோ ராதலின் புரிந்தனர் என்க; பிறரை வஞ்சித்துத் தாம் பிழைக்கும் வழி தேடுவோர் வஞ்சகர் எனப்படுவர். இங்கு அரசனை வஞ்சித்த செயலும்