858திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  "செய்யனே திருவாலவாய்" எனும் - இது பதிகத் தொடக்கம்.
  "சைவர்....ஆக" என - இது பதிகக் கருத்தும் குறிப்புமாம்; தம் பொருட்டானன்றி அடியார்கள்பால் நேர்ந்த அபசாரத்தின் தீர்வே பிள்ளையார் திருவுள்ளங் கொண்டது என்பது முன் இரண்டு பாட்டானும் உரைக்கப்பட்டது; அவை பரம்பரையாற்றோன்றி வந்து உருக்கொண்டு முடிவு பெற்ற ஆணையின் உருவம் ஈண்டு உரைக்கப்பட்டது; ஆதலின் கூறியது கூறலன்மையுணர்க; பதிகப் பாட்டுக் குறிப்புக்கள் பார்க்க.
  இட்ட தீத்தழல் - இட்ட - விஞ்சை மந்திரத்தாலன்றிப் பொதிதழல் கொடுபுக்குக் கொளுவிய என்பதும் குறிப்பு; தீத்தழல் - தழல் ஐம்பூதங்களுள் ஒன்று; இறைவனது பெருந் திருமேனிகளுள் ஒன்று; உயிர்களின் நலங்கருதி இறைவர் தரும் தனுகரணபுவன போகங்களுட்படுவது; ஆயின் இங்கு அது தீமையின் பொருட்டுப் பயன்படுத்தப் பட்டதென்பார் தீத்தழல் என்றார்; தீ - தீமை என்ற பண்புப் பொருள்பட நின்றது; ஒரு பொருட் பன்மொழியாகக் கொண்டுரைப்பாருமுண்டு; மேலும் இதன் இயல்பினை மேல் சமணரது கனல்வாதப் பகுதியிற் கண்டு கொள்க; அமணர்கள் இட்ட தீ - "அமணர் கொளுவும் சுடர்"(பதிகம்).
  "பையவே சென்று பாண்டியற்கு ஆக என" - இது பதிகத்தினை மேற்கொண்டது; பதிக முதற்பாட்டும் பாட்டுக் குறிப்பும் பார்க்க.
  போய் - சென்று - போய் இங்குத் திருமடத்தினின்றும் பாண்டியனிடம்; சென்று - அவன் உடலினுள்; போதல் - புறச் செலவும், செல்லுதல் - உட்புகுதலும் உணர்த்தின.
  "தீத்தழல் போய் - சென்று ஆக" - இது பிள்ளையார் தழலினை ஆணையிட்டது; "நாடு மைம்பெரும் பூதமு நாட்டுவ" என்பது சிவபூத கணங்களின் வன்மை. தீக் கடவுள் அடியார்களின் வழிநின்று ஏவல் கேட்டுப் பணி செய்தொழுகும் தேவர்களுள் ஒருவனேயாதலின் பணித்தார் என்றார்.
  ஆக என என்பது ஈற்றகரம் தொக்கு ஆகென என நின்றது; பையவே - என்றது முனிவிலும் பரிவிலும் எழுந்த கருணையின் தெளிவு; ஆக என்பது அருந்தண்டத்தினும் வைத்த அருளிப் பாட்டின் முதிர்ச்சி; Justice tempered with mercy என்பர் நவீனர்; ஆக - ஆக்கமுண்டாக என்ற ஆசிமொழி. இத்தண்டத்தினால் அரசனும் அவனால், அவன் நாடும், அதனால் சைவமும் ஆக்கம் பெறுக என்பது திருவுள்ளம்.
  பணித்தல் - கட்டளை யிடுதல்; இவ்வாறு பணிசெய் என்றருளினர்; வருணன் முன்பு மாதவஞ் செய்து அரசுகளைத் தலைமேல் ஏந்தினன்; (1395); இந்திரன்மால் பிரம ரெழிலார் மிகுதேவரெலாம் வந்தெதிர்கொண்டு வெள்ளை யானையின்மீது ஆளுடைய நம்பிகளை அழைத்துச் செல்லும் பேறுபெற்றவர்"(வெள்-சருக்.33-34); "பூவார் திசைமுக னிந்திரன் பூமிசை, மாவா ழகலத்து மான்முதல் வானவர்;" தேவாசிரியன் திருவாயிலில் அடியார்களின் சமயநோக்கி வாழ்வடைந்து நிற்கின்றனர் என்பது முன்(137) உரைக்கப்பட்டது; மணிவாசகப் பெருமான் கலைமகளை ஏவல் கொண்டருளிப் புத்தர்கள் நாவினின்று போ என்று பணித்த வரலாறும் காண்க.
 

704

 

திருவாலவாய்

 

திருச்சிற்றம்பலம் பண் - கௌசிகம்

 
செய்ய னேதிரு வாலவாய் மேவிய,
வைய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்,