| மூர்த்தியனே - தீயினைத் தனது அட்ட மூர்த்தத்தினுள் ஒன்றாகக் கொண்டவன்; மேல் கனல்வாத வரலாற்றினுள் " அட்ட மூர்த்தியைப் பொருளென வுடைமையா லமர்ந்து, பட்ட தீயிடை பச்சையாய் விளங்கியது"(2684) என்னும் கருத்தும் காண்க; பட்டி - பொது; (5) எண்ணிலா - சிவன் அடியார் பெருமையை உளங்கொளாத; எண் - எண்ணுதல்; தொழிற் பெயர்; எண்ணிலாத - அனேகராகிய என்றலுமாம்; பண் - இயற்றமிழ் - தமிழ் என்றதனைப் பண்ணுடனும் கூட்டுக. இசையும் இயலும் கூறவே இனம்பற்றி நாடக மடக்கிய முத்தமிழும் கொள்ளப்படும் - (6) வஞ்சஞ் செய்து - 2577 - 2586 - 2597 முதலியவை பார்க்க. தஞ்சமென்று சரண் புகுந்தேன் - "தாமென்று மனந்தளராத் தகுதியரா யுலகத்துக், காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்," (பிரமபுரம் - தேவா) என்ற கருத்து; - (7) வெள்விடையாய் - மாயப் பசுவை வதைத்த திருவிளையாடற் குறிப்பு; - (8) தூர்த்தன் - தீயோன் - இராவணன்; ஆத்தன் - (ஆப்தன்) உற்றவன்; ஏத்து - (சிவனை) ஏத்துதல்; - (9) தூ விலா - தூ - தூய்மை; -(11) வெப்பம் - சுடர் வெப்பு நோயாக மாறி; வெப்பமாக; மேதினிக் கொப்ப - உலகத்துக்கு நலம் பொருந்த. |
| வேறு |
2603 | பாண்டிமா தேவியார் தமது பொற்பிற், பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும், ஆண்டகையார் குலச்சிறையா ரன்பி னாலு, மரசன்பா லபராத முறுத லாலும், மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர் தீண்டியிடப் பேறுடைய னாத லாலுந் தீப்பிணியைப் "பையவே செல்க" வென்றார். | |
| 705 |
| (இ-ள்) பாண்டிமா தேவியார்....பாதுகாத்தும் - பாண்டிமா தேவியாரது அழகிய மிக்க நீண்ட திருமங்கல நாணைப் பாதுகாத்தல் வேண்டப் படுதலாலும்; ஆண்டகையார்.....அன்பினாலும் - ஆண்டகைமையுடைய குலச்சிறையாரது அன்பினாலும்; அரசன்பால்... உறுதலாலும் - அரசனிடம் அபராதம் சேர்ந்ததனாலும்; மீண்டு....ஆதலாலும் - மீண்டும் சிவநெறியினை அடையும் விதியிருத்தலாலும், வெப்பு நோய் தீரும்படி அரசனது மேனியைத் தீண்டித் திருவெண்ணீற்றைச் சீகாழி மன்னர் இடும் பேறு அரசன் உடைமையாலும்; தீ.....என்றார் - தீப்பிணியைப் "பையவே செல்க" என்று பணித்தனர். |
| (வி-ரை) தீப்பிணியை....என்றார் - "பையவே சென்று" என்ற பதிகத்துக்குக் காரணம் விரித்துக் கூறியது இப்பாட்டு; |
| பாண்டிமா தேவியார்....பாதுகாத்தும் - அம்மையாரது திருமங்கலநாண் பாதுகாவல் பெறவேண்டி யிருத்தலின் அதன் பொருட்டு அரசனைத் தீயால் அழிவுபடாது காத்தல் வேண்டப்பட்ட தென்பதாம்; "யானுமென் பதியுஞ் செய்த தவம்"(2570) என்றது காண்க. |
| ஆண்டகையார்.....அன்பினாலும் - குலச்சிறையார் அரசன்பாற் கொண்ட அன்பு நீடித்தல் ஒரு காரணம். "நற்றமிழ் வேந்தனு முய்ந்து, வென்றிகொள் திரு |