| பாண்டியன் கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞானம்" (இருபா - 2) என்ற ஞானசாத்திரமும் காண்க. |
| பிறவியும் தீரும் - தீராத பிறவியும் என உம்மை சிறப்பும்மை; எச்சவும்மையுமாம். மேல் தீக்கையின் விளைவாகிய சரிதக் குறிப்பும் காண்க. |
| விரைந்து நோக்க - என்பதும் பாடம். |
| 720 |
2619 | மீனவன் செவியி னூடு மெய்யுணர் வளிப்போர் கூற ஞானசம் பந்த ரென்னு நாமமந் திரமுஞ் செல்ல, ஆனபோ தயர்வு தன்னை யகன்றிட, வமண ராகும் மானமில் லவரைப் பார்த்து மாற்றமொன் றுரைக்க லுற்றான்; | |
| 721 |
2620 | மன்னவ னவரை நோக்கி, "மற்றிவர் செய்கை யெல்லாம் இன்னவா றெய்து நோய்க்கே யேதுவா யின" வென் றெண்ணி, "மன்னிய சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்தால் அன்னவ ரருளா லிந்நோ யகலுமே லறிவே" னென்றான்; | |
| 722 |
2621 | என்றுமுன் கூறிப் பின்னும் "யானுற்ற பிணியைத் தீர்த்து வென்றவர் பக்கஞ் சேர்வன்; விரகுண்டே லழையு" மென்ன, அன்றவ ருவகை பொங்கி யார்வத்தா லணையை நூக்கிச் சென்றநீர் வெள்ளம் போலுங் காதல்வெள் ளத்திற் செல்வார்; | |
| 723 |
2622 | பாயுடைப் பாத கத்தோர் திருமடப் பாங்கு செய்த தீவினைத் தொழிலை நோக்கி யுள்ளழி திருவுள் ளத்தான் மேயவத் துயர நீங்க விருப்புறு விரைவி னோடு நாயகப் பிள்ளை யார்தந் நற்பதம் பணிவா ராகி, | |
| 724 |
2623 | மன்னவ னிடும்பை தீர மற்றவன் பணிமேற் கொண்டே யன்னமென் னடையி னாரு மணிமணிச் சிவிகை யேறி மின்னிடை மடவார் சூழ வேற்படை யமைச்ச னாரும் முன்னணைந்தேகச் சண்பை முதல்வனார் மடத்தைச் சார்ந்தார். | |
| 725 |
| 2619. (இ-ள்.) மீனவன்...கூற - பாண்டியனது காதிலே மெய்யுணர்வு அளிப்பவர்களாகிய அம்மையாரும் அமைச்சனாரும் முன் கூறியவாறு சொல்ல; ஞான சம்பந்தர் என்று...செல்ல - அதனுள் திருஞானசம்பந்தர் என்னும் திருப்பெயராகிய திருமந்திரமும் உடன் செல்ல; ஆன....அகன்றிட - அப்போது அயர்ச்சி தன்னை நீங்குதலால்; அமணராகும்...உரைக்கலுற்றான் - அமணர்கள் என்னும் மானமில்லாத மாக்களைப் பார்த்து ஒருசெய்தி சொல்லலாயினன்; |
| 721 |
| 2620. (இ-ள்.) மன்னவன்....எண்ணி - "மற்று இவர்களது செய்கைகள் எல்லாம் இப்படிப் பொருந்திய நோயினுக்கே காரணமா யிருந்தன" என்று மனத்துட் கருதி; மன்னவன் அவரை நோக்கி - அரசன் அவர்களைப் பார்த்து; மன்னிய.....என்றான் - நிலைபெற்ற சைவ நீதியின் பெருமறைச் சிறுவராகிய பிள்ளையார் இங்கு வந்தால் அவருடைய அருளினாலே இந்த நோய் நீங்குமாகில் அறிவேன்" என்று கூறினானாகி, |
| 722 |