868திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  பயன் படுத்து முன்னே சுருங்கிப் பொடியாயின என்றதாம்; நுண்துகள் ஆக - பொடிபட; குளிரியினை வெப்புத்தீரப் பயன்படுத்துதல்முன்னரும் (319) காண்க.
 

712

  2611. (வி-ரை.) மருத்து நூலவர்....செய்யவும் - தங்கள் பல்கலைகள் - நோய் வகையாலும், அவற்றைத் தீர்க்கும் வாய்களின் வகையாலும், அவை செயல் வகையாலும், பிறவாற்றாலும் மருத்து நூல்கள் பலகலைகளாகப் பிரியும்; "நோய் நாடி நோய்மூல நாடி யதுதீர்க்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" (குறள்). இவ்வாறு நாடும் பற்பல கலைகளினும் வல்லோர் அவற்றுள் வகுத்த இந்நோய்க்கு ஏற்றவற்றுள் மிகச் சிறந்தனவாகிய செயல்கள் எல்லாவற்றையும் செய்யவும்; திரு - சிறப்புடைய; தகும் - நோய்க்குத் தக்க; தொழில் - தீர்வுமுறை. யாவையும் - உம்மை முற்றும்மை; செய்யவும் - சிறப்பும்மை.
  மேன்மேல் உருத்தெழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக - தீர்வு செய்தலிற் றவிராததன்றி, செய்த தீர்வின் அளவுக்கு மேன்மேல் முடுகி ஓங்கிற்று; ஓங்கின அளவு உடலையேயன்றி உயிரையும் உருக்கிற்று என்பது. உயிரை உருக்குதல் - உயிரின் வலி நிலை தீரும்படி குறைத்தல்.
  கருத்து ஒழிந்து - தன்னுணர்ச்சி நீங்கி மரம்போற் கிடந்து; உரை மறந்தனன் - பேசும் ஆற்றல் நீங்கினன்; கௌரியர் - பாண்டியர்.
  கருத்தழிந்து - என்பதும் பாடம்.
 

713

2612
ஆன வன்பிணி நிகழ்வுழி யமணர்க ளெல்லாம்
மீன வன்செயல் கேட்டலும் வெய்துயிர்த் தழிந்து
"போன கங்குலிற் புகுந்ததின் விளைவுகொ?" லென்பார்
மான முன்றெரி யாவகை மன்னன்மாட் டணைந்தார்.
 

714

  (இ-ள்.) ஆன வன்பிணி நிகழ்வுழி - இவ்வாறான வலிய நோய் மூண்டு நிகழும் போது; அமணர்கள் எல்லாம்...அழிந்து - சமணர்கள் எல்லாரும் அரசனது நிலைமையினைக் கேட்டலும் பெருமூச்சு விட்டு மனமுடைந்து வருந்தி; போன.....என்பார் - "சென்ற இரவிற் செய்த செயலினால் வந்த விளைவுதானோ இது?" என்று ஐயுறு வார்களாகி; மானம்.....அணைந்தார் - தமக்கு நேர்ந்த அவமானம் முன் தெரியாதபடி மறைத்து அரசனிடம் வந்து அணைந்தனர்.
  (வி-ரை.) ஆன - முன் கூறியபடி முடிவதாயின; "ஆகவே" என்ற ஆணையருளின்படி வரலான என்ற குறிப்புமாம்; வன்பிணி - மருத்து நூலவரின் திருத்தகு தொழில்கள் எவ்வெவற்றாலும் குறையாது நின்று மேலும் முடுகிய வலிமை குறித்தது.
  அமணர்கள் எல்லாம் - முன் இரவில் இருள் போலச் சென்று தந்தொழில் விளைத்த அவ்வமணர்க ளெல்லாரும்.
  செயல் - நிலை என்ற பொருளில் வந்தது; கேட்டலும் - அழிந்து - அணைந்தார் - தேவியாரும் - குலச்சிறையாரும் அச் செய்தி கேட்டலும் அணைதலும் முன்னர் நிகழ்ந்தன; சமணர்பால் அவை கடையில் நிகழ்ந்தன; அவர்களது கரவாடும் வன்னெஞ்சின் நிலை குறித்தது.
  வெய்துயிர்த்து அழிந்து - கேட்டலும் பதைத்தனர் தேவியார்; அஞ்சினர் அமைச்சனார்; அந்நிலைகள் மன்னனிடம் அவர்கள் கொண்ட அன்பினால் விளைந்தன; ஈண்டு அமணர் வெய்துயிர்த் தழிந்த நிலை தமது வஞ்சம் பலன் றராதொழிந்தமை