872திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  என்பார் - மற்று இந்த நோயின் கொடுமையானது, மதில்களையுடைய மூன்று புரங்களையும் எரித்தவருடைய அன்பரிடத்து இந்த வஞ்சகர்களாகிய அமணர்கள் செய்த தீங்கு அரசனிடத்து வந்து நிரம்பியது; இதனை இவ்வமணர்கள் தீர்க்க முயன்றால் அது மேலும் பெருகி முடுகுவதேயாகும்" என்று சொல்வாராகி,
 

718

 

2617. (இ-ள்.) இரு திறத்தவரும்....எதிர் பணிந்து - இரண்டு திறமுடையவர்களும் அரசனெதிரிற் பணிந்து; இந்த வெப்பு...பெருகியது - இந்த வெப்பு நோய் வரும் திறமாவது சீகாழிப் பதியில் வந்த வள்ளலாராகிய பிள்ளையார் மதுரையின்கண் வந்து பொருந்த அது கண்டு அமணர்கள் செய்த தீமையாகிய அநுசிதச் செயலால் விளைந்து பெருகியது; இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று - இதற்குத் தீர்வு செய்ய வல்லது பிள்ளையாரது அருளேயாம் என்று எடுத்துக் கூறி,

 

719

  2618. (இ-ள்.) காயமும்....வளர்ப்பதே - உடம்பிலும் மனத்தினும் பொருந்திய மாசு கழுவாத சமணர்கள் இனிச் செய்யும் மாயத்திறங்களும் இந்த நோயினை வளர்ப்பதேயன்றிக் குறைத்தல் செய்யா; வளர்வெண் திங்கள்....தீரும் என்றார் - வளரும் வெண்மதி பொருந்திய சடையினையுடைய இறைவர்பால் ஞானம்பெற்ற அப்பிள்ளையார் விரும்பி நோக்கினாராகில் தீய இந்தப் பிணியேயன்றிப் பிறவி நோயும் தீரும் என்று சொன்னார்கள்.
 

720

  இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  2615. (வி-ரை.) பயமெய்தி - தமது கணவர் கருத்தொழிந்து உரை மறந்து கிடந்த நிலையும், உணர்வும் உயிரும் ஒழிவதற்கு ஒருபுடை ஒதுங்கிய நிலையும், வெப்புக் குறையாது மேலும் எழுந்து உயிரையும் உருக்குவதாகிய நிலையும், இது சிவனடியார் பாற்செய்த அபசாரத்தினால் விளைந்த நிலையுங் கண்டு, மேல் எவ்வணம் முடிவதாகுமோ என்றஞ்சினர் அம்மையார்.
  அமைச்சர்பாரம்....நோக்கி - அமைச்சர் பாரம் பூண்டவர் தம்மை - குலச்சிறையாரை; அமைச்சராதலின் அவரை நோக்கி என்க. அமைச்சுத் திறம் மூன்று காலமும் உணர்ந்து அரசுக்கு வரும் தீமைகளை எல்லாம் போக்கும் ஆற்றலும் கடமையுமுடையதாதலின் அத்தன்மையோரே இங்கு வேண்டுவனவற்றை அறியவும், இயற்றவும் தக்கவர் என்பது கருத்து; அக்கடமை மிகப் பெரிதும் அரிதுமாகிய தொன்று என்பார் பாரம் என்றார்; பூண்டவர் - மேற் கொண்டவர். "தமக்கன்பு பட்டவர் பாரமும் பூண்பர்" (அரசுகள் - அரநெறி 2 இந்தளம்).
  புகலியில் வந்து - வருதல் - அவதரித்தல்; அங்கு நின்றும் இங்கு அருளாற் போந்து என்பதுமாம்; "இங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளி" (திருவெம் - திருவா). ஆண்டு கொண்டவர் - ஆட்கொண்ட செயல் முற்றுப்பெற்ற தென்பார் இறந்த காலத்தாற் கூறினார்.
  கங்குல்....முடிந்ததோ? - இது அம்மையார் கொண்ட ஐயப்பாடு; முன்னர்த் "தீங்கிது கடைக்கால் வருவ தெப்படியாம்?" என்று ஐயங் கொண்டனர்; இங்கு "அத்தீங்குதான் இனையதாகி முடிந்ததோ?" என்று மேலும் அதனையே தொடர்ந்து கொண்டனர்; முடிந்ததோ? - அத் தீங்கின் விளைவு இதனுடன் முடிந்ததோ? இன்னும் மேலும் விளையும் குறையுண்டோ?; ஆகி - "பாண்டியற்காகவே"என்ற விடத்துப் போல் ஆக்கத்திற் கேதுவாகி என்ற குறிப்பும்பட நின்றது; இனைதல் - வருந்துதல் என்ற குறிப்புமாம்.
  மூண்டவாறு - தீ மூளும் தன்மை என்பதும் கருத்து.
  அமணர்கள் - என்பதும் பாடம்.
 

717